ஞாயிறு, 4 மே, 2014

ஸ்ரீ சரபேஸ்வரர்-கஷ்டங்களை போக்க



ஸ்ரீ சரபேஸ்வரர் மகிமை
சிவபெருமான் உலகம் உய்யும் பொருட்டு எடுக்கும் வடிவங்கள் கணக்கில் அடங்காது அவற்றில் சரபேஸ்வரராக எடுத்த வடிவம் வெகு சிறப்பு வாய்ந்தது. தானெனும் அகந்தை தாங்காத சுமையாகிப் போன ஹிரண்ய கசிபுவின் தெய்வ நிந்தனையை கேட்க வெண்ணாத பிரகலாதன் கேட்டபடி, தூணைப் பிளந்து வெளிவந்தார் நரசிம்மர்.
ஹிரண்ய கசிபுவின் நெஞ்சைப் பிளந்து, குடலை உருவி, உதிரம் குடித்து, அவன் கதை முடித்தும், கோபம் அடங்காமல் அசுர ரத்தம் தலைக்கேறி தேவரும் நடுங்கும் வண்ணம் அழிவு சக்தியாக ஆர்ப்பரித்து எழுகையில் சிவபெருமான் திருவடியில் அனைவரும் அடைக்கலம் புகுந்தனர். சிவபெருமான், பறவையும், மனித உடலும், மிருகமும் கலந்த ஒரு மகா பயங்கர வடிவெடுக்கின்றார்.
அவரே சரபேஸ்வரர். சரப திருவுருவின் நிழல் பட்ட உடனே ரஜோகுணம் மேலிட வந்து கொண்டிருக்கும் நரசிம்மத்தின் உக்கிரம் ஒடுங்குகிறது. உக்கிர நரசிம்ம அவதாரத்தினை, சாந்த நரசிம்மமாய், லட்சுமி நரசிம்மமாக, வெளிப்பட்ட ருத்ரத்தை தன்னுள்ளே ஐக்கியப் படுத்திக் கொண்டு சாந்த ரூபமாக, விளங்கும் ஸ்ரீ சரபேஸ்வரன் சகல சத்ரு நாசராகவும் பிறவிப் பிணியை அகற்றுபவராகவும், கஷ்டங்களை போக்குபவராகவும் விளங்குகிறார்.
பிரதோஷ நேரத்தில் தான் ஆதிபரம் பொருளாம் சிவபெருமான் ஸ்ரீசரபேஸ்வர மூர்த்தியாய் அவதாரம் கொண்டு ஸ்ரீநரசிம்ம மூர்த்தியின் உக்கிரக சக்தியினைத் தணித்தார். எனவே, பிரதோஷ நேரத்தின் போது ஸ்ரீசரபேஸ்வர வழிபாடு அதி அற்புத பலன்களைப் பெற்றுத் தருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக