18 புராணம் 5 லட்சம் ஸ்லோகம் ..........
வேதத்தில் உள்ள தர்மவிதிகள் படிப்பதற்கும், புரிந்து கொள்வதற்கும் சிரமமாக இருக்கும் . அதை பாமரர்களும் புரிந்து கொள்ளும் வகையில், கதைகளாக எழுதினார்கள். அவையே புராணங்கள். வேதத்தின் "கண்ணாடி' என்று புராணங்களைச் சிறப்பிப்பர். "புரா' என்றால் "முற்காலத்தில் நடந்தது' என பொருள். வேதங்களைப் போலவே புராணங்களும் பிரம்மாவிடம் இருந்து வெளிப்பட்டதாக சாந்தோக்ய உபநிஷத், மத்ஸ்ய புராணங்கள் கூறுகின்றன. மொத்தம் 18 புராணங்கள் உள்ளன.
18 புராணங்களிலும் 5,09, 500 ஸ்லோகங்கள் உள்ளன. இதில் ஸ்கந்த புராணம் பெரியது. 1,81,000 ஸ்லோகங்கள் கொண்டது. மார்க்கண்டேய புராணம் சிறியது. 9000 ஸ்லோகங்களே உள்ளன.புராணங்களில் ஸ்லோகங்களின் எண்ணிக்கை ..
ஸ்கந்த புராணம் - 1,81,000
பத்மபுராணம் - 55,000
நாரத புராணம் - 25,000
வராஹ புராணம் - 24,000
வாயு புராணம் - 24,000
மத்ஸ்ய புராணம் - 24,000
விஷ்ணு புராணம் - 23,000
கருட புராணம் - 19,000
பிரும்ம வைவர்த்த புராணம் - 18,000
பாகவத புராணம் - 18,000
கூர்ம புராணம் - 17,000
பவிஷ்ய புராணம் - 15,500
அக்னி புராணம் - 15,000
பிரம்மாண்ட புராணம் - 12,000
லிங்க புராணம் - 10,000
பிரம்ம புராணம் - 10,000
வாமன புராணம் - 10,000
மார்க்கண்டேய புராணம் - 9,000
மார்க்கண்டேய புராணம் - 9,000
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக