வெள்ளி, 14 நவம்பர், 2014

ஆவுடையார் கோவில்



திருப்பெருந்துறை எனும் ஆவுடையார் கோவில்

இறைவன் அமர்ந்த இடம் குருந்த மரத்தடி. குருந்த மரத்தின் இலை கள் ஒவ்வொரு கொத்திலும் மூன்று வகை இலைகளுடன் காணப்படும். அவ்விடமே, கோவிலாகியது. இறைவன் திரு உருவச் சிலை கள் இங்கு இல்லையே தவிர, இக்கோவி ல், சிற்பக்கலையின் உன்னத சிகரமாக இருக்கின்றது. பூத க ணங்களே இக்கோவிலைக் கட்டினர் என்பர். சிற்பிகள் தங் களது பணி ஒப்பந்தங்களில் “தாரமங்கலம் தூணும், திருவலஞ்சுழி பலக ணியும், ஆவுடையார் கோவில் கொடுங்கையும் நீங்கலாக” என்று எழுதுவர் எனக் கேள்வி. கோவில் கணக்குகளில், ஆளுடை யார் கோவில் என்று காணப்படுகின்றது. இலக்கியங்களில், அநாதி மூர்த்தித் தலம், சதுர்வேதபுரம், யோகபீடபுரம் என்றும், கல்வெட் டுகளில் சதுர்வேதமங்கலம் என்றும், திருவாசகத்தில், சிவ புரம் என்றும் வழங்கப் பெற்று ள்ளது. தற்போது கோவிலின் பெயரா லேயே, ஊரும் அழை க்கப்பட்டுவருகிறது.

கோவிலின் சிறப்பு

தலம்: திருப்பெருந்துறை
மூர்த்திகள்: ஆத்மநாதர், யோ காம்பிகை

தீர்த்தம்: ஒன்பது- சிவ தீர்த்தம், அக்கினி தீர்த்தம், தேவ தீர்த்தம், முனிவர் தீர்த்தம், அசுர தீர்த்தம், வாயு தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம், நாராயண தீர்த்தம், பிரம தீர்த்தம்

புனித மரம்: குருந்த மரம்
கோவிலின் மூலவர் ஆத்மநாதர் ஸ்வாமி ஆவார். சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. சிவபெருமா னுக்கு ஆவுடையாரும் (சக்தி பீடப் பகுதி) எதிரில் ஒரு மேடையும் (அமுத மண்டபம்) மட்டுமே உள்ள ன. ஆவுடை யாருக்குப் பின் சுவரில் 27 நட்சத்திரத் தீபங்களும், அதற்கு மேல் சூரிய, சந்திர, அக்கினி தீபங்களும் ஒளிர்கின்றன. அம் மன் யோகாம்பிகை சந்நிதியில் யோக பீடமும், அதன் மேல் அம்மன் பாதங்களும் மட்டும் உள்ளன. அதுவும் பலகணி வழியே மனத்தை ஒருமுகப்படுத்தினால் மட்டும் தரிசிக்க முடியும். மாணி க்கவாசகருக்கு தனிச் சந்நிதி இருக்கிறது. கோவிலில் கொடிமரம், நந்திக்கடவுள், சண்டேசர் ஆலயம் கிடையாது. இங்கே நடராஜர், விநாயகர், முருகர் தவிர பரிவார மூர்த்திகள் இல்லை. தீபாரா தனை கருவறையை விட்டு, வெளியே வராது. புழுங்கல் சோறு, கீரை, பாகற்காய் ஆகியவற்றின் ஆவியே நிவேதனம். அடியார் மாணிக்கவாசகருக்காக மட்டும், வருடந்தோறும் ஆனித் திரும ஞ்சனத் திருவிழா நடக்கிறது.

ஏனைய கோவில்கள் சரியை, கிரியை வழிபாட்டிற்கும், இக் கோ வில் மட்டும் யோக, ஞான மார்க்க வழிபாட்டிற்கும் உரியதாக உள் ளது. அதனால் இக்கோவில் அமைப்பு மற்ற கோவில் களிலிருந்து பெரிதும் மாறுபட்டுள்ளது. மூலாதாரம் முதலாக ஆறு ஆதாரங் களின் வடிவாகவும், சிவனை அரூபமாகவும் நிர்மாணித்து, யோகி களும், ஞானிகளும் வழிபடும் வகையில் இக்கோவில் கட்டப்பட்டு ள்ளது என்பர்.

பஞ்சாட்சர மண்டபம்

மூன்றாம் பிராகாரத்தில், இரண்டாம் கோபுர வாசலை ஒட்டி, பஞ் சாட்சர மண்டபம் உள்ளது. இம்மண்டப த்தின் மேல் தளத்தில் மந்தி ரம், பதம், வன்னம், புவனம், தத்துவம், கலை எனும் ஆறு அத்து வாக்கள் கட்டங்களாக அமைக்க ப்பட்டுள்ளன.

கற்சிலை ஓவியங்கள்
சிற்ப வேலைகளைப் பற்றிச் சொல்லி மா ளாது. நேரில் கண்டால் பிரமிப்பு அடங்காது. வல்லப கணபதி, உக்கிர நரசிம்மர், பத்திர காளி, ஊர்த்துவ தாண்டவர், பிட்சாடனர், வில் பிடித்த முருகன், ரிஷபாரூடர், சங்கர நாராயணர், குதிரைச்சாமி, குறவன், குறத் தி, வீரபத்திரர்கள், குதிரைக்காரர்கள், நடன மங்கைகள், விலங்குகள், உயிரோட்டத்து டன் ரத்த நாளங்கள் தெரிய மிளிர்கின்றன. தவிர டுண்டி விநாயகர், உடும்பும் குரங்கும், இரண்டே தூண்களில் ஓரா யிரம் கால்கள், 1008 சிவாலய இறைவன், இறைவியின் உருவ ங்கள், பல நாட்டுக் குதிரைகள், நடனக்கலை முத்திரைகள், சப்த ஸ்வரக் கற்தூண்கள், போன்ற அற்புதங்கள் மற்றும் நட்சத்திர மண் டலம், பச்சிலை ஓவியங்கள், கூரையிலிருந்து தொங்கும் கற்சங் கிலிகள் ஆகியன நம்மைப் பிரமிக்க வைக்கின்றன. மேற் கூரை யான கொடுங்கை மிகச்சன்னமாக இழைக்கப்படுள்ளது. மரச்சட்டங்களில் குமிழ் ஆணி அடித்தது போல நுட்பமான வேலைகள் கல்லில் அடிக்கப்பட்டுள்ளன. அதில் நிஜக் கம்பிகள் போன்ற அமைப்பு உள்ளது. இதை நம்பாத ஒரு ஆங்கிலேயன் துப்பாக் கியால் சுட்டதால் ஏற்பட்ட ஓர் ஓட்டையும் கொடுங்கை யில் உள்ளது. மொத்தத்தில் சிற்ப வேலைப்பாடுகள், கண்ணில் ஒற்றிக் கொள்ளும்படி மிக மிக நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளன.

இக்கோவில், திருவாவடுதுறை ஆதீனத்தால் சிறப்பாகப் பராமரிக் கப் படுகிறது. புதுக்கோட்டையிலிருந்து, 45 கி.மீ தொலைவில் உள்ளது. அறந்தாங்கியிலிருந்து, 14 கி.மீ தூரம்.

மாணிக்கவாசகர் தீந்தமிழைத் தேனில் தோய்த்தெடுத்து, பக்தியால் உருக்கி, அன்பினால் வார்த்து, எளிய நடையெனும் உளியால் பத முடன் பக்குவமாய்ச் செதுக்கி, என்றென்றென்றும் நிலைத்திருக் கும் சிலைபோல் திருவாசகத்தைப் படைத்தார். ஆவுடையார் கோவிலைக் கட்டிய சிற்பிகளோ, தமது கலைத்திறமையால் இக் கோவிலைக் கட்டிச் சிலைகளை உருவாக்கிக் காலத்தால் அழியாத ஒரு பெரும் காவியமாகப் படைத்தார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக