வெள்ளி, 2 மே, 2014

நார்த்தாமலை-நகரத்தார் மலை





நார்த்தாமலை - சிறு தொகுப்பு :
இன்று நார்த்தாமலை என்று அழைக்கப்படும் இந்தமலை,ஒரு காலத்தில் நகரத்தார் மலை என்று அழைக்கப்பட்டதாக ஒர்குறிப்பு உள்ளது நாம் காவேரி பூம்பட்டினத்தில் இருந்து தற்பொழுது இருக்கும் இந்த செட்டிநாட்டை அடையும் முன்பு நகரத்தார் மலை(நார்த்தாமலை) -இல் இருந்ததாகவும் ஒரு செவிவழி செய்தி, இன்றும் நமது நகரத்தார் நகரத்தார் மலை(நார்த்தாமலை)-இல் நடைபெறும் பூ சொரிதல் விழவிருக்கு சென்றுவருகின்றனர்.
நகரத்தார் மலை(நார்த்தாமலை) :- திருச்சி -புதுகோட்டை செலும் வழியில் , புதுகோட்டைக்கு வடமேற்கு திசையில் 11 KM தொலைவில் உள்ளது.
இந்தமலை பண்டைய தமிழ் கலாச்சாரத்தின் வெளிபடகவும் ,இடைக்கால சோழர் வம்சத்தல் ஆண்ட விஜயல சோழ மன்னனால் 9 ஆம் நூற்றாண்டில் கட்டபட்டது.
இந்தமலை -இன் மற்றொரு சிறப்பும் உண்டு
11 ஆம் நூற்றாண்டில் ராஜராஜ சோழனால் கட்டபட்ட தஞ்சை பெரிய கோவிலிற்கு இங்கு இருந்த கற்கள்தான் பயன்படுதபட்டதாம்.
தமிழர்களின் கலைக்கு இதுவும் ஒரு சான்று ... முடிந்தால் நேரில் சென்று பாருங்கள்
சில புகைப்படங்கள் உங்களுக்காக .......
Photo courtesy : Mr.Sethu Subramaniyan SS

வியாழன், 1 மே, 2014

பூத உடலுடன் 108 வைணவ திவ்ய தேசங்கள



real estate & broker தொழில் செய்பவர்கள் தங்களது தொழிலில் வெற்றி பெற கும்பிட வேண்டிய தெய்வங்கள் .
108 வைணவ திவ்ய தேசங்களில் மானிடர்கள் பூத உடலுடன் காண முடியாத தலங்கள் 2 அவை 
1,திருப்பாற்கடல்
2.திருப்பரமபதம்
இப்பொழுது
திருப்பரமபதம் பற்றி காண்போம்
பரமபதம் தான் பெருமாள் எப்பொழுதும் நித்தியவாசம் செய்கிறார் புண்ணிய தலம்.
இங்கு தான் ஜீவாத்மாக்கள் பகவானுக்கு சதாசர்வ காலமும் கைங்கர்யம் செய்து கொண்டு இருப்பார்கள்.
திருப்பாற்கடலை தரிசனம் செய்தவர்களுக்கெல்லாம் நிச்சயம் பரம்பதத்தில் இடம் உண்டு.
பெருமாள் மூலவரும் அவரே உத்ஸ்வராக அவரே வீற்றிருத்த திருக்கோலத்தில் தெற்கே தரிசனம் கொடுத்துக் கொண்டுருப்பார். தாயார் பெரிய பிராட்டியார்.
இத்த இடத்தில் நுழைத்தவர்கள் மறுபிறவி கிடையாது.
பரமபதமே முத்திப் பதம் ஆகும்.
அடியார்களை திருமலே
பரமபத அழைத்து சென்றும் வாயிலில் அவரே வரவேற்று அங்கே அடியார்களை நித்திய வாசம் செய்ய வைக்கிறார்.
இங்கும் ஸ்ரீமந் நாரயாணன்
சங்கு சக்கர கதையுடம் காயாம்பூ இதழ் போன்ற வண்ணத்தில் பல கோடி சூரிய ஒளி விளங்கச் சேவை சாதிக்கிறார். தாமரை மலர் போன்ற கண்களும், தோள் வளை,மாலை, காலில் சதங்கையுடசன் திருமேனியில் சந்தனமும் விளங்க இருப்பவர். பட்டாடை புனைந்து தேவியார்களுடன் நித்தியர்களும் முத்தர்கள் என முக்காலமும் தொழிதவாறு இருக்க திகழ்கிறார்.

துளசி



துளசியின் சிறப்பும் பெருமையும் !
எத்தனை வகைப்பூக்கள் இருந்தாலும், துளசி செடி இல்லாவிட்டால் அது நந்தவனம் ஆகாது.
* துளசி மட்டுமிருந்தால் கூட அது சிறந்த நந்தவனமாகிவிடும்.
* துளசி படர்ந்த இடம் பிருந்தாவனமாகும். துளசியின் இன்னொரு பெயர் பிருந்தை.
* துளசி மாலை அணிந்தோ, துளசி மாலையை கையில் பிடித்தோ பூஜிப்பவர்களுக்கு, 1000 அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.
* மரண காலத்தில் துளசி தீர்த்தம் அருந்துபவர்களை பெருமாள் தன்னுடன் சேர்த்து கொள்கிறார்.
* பவுர்ணமி, அமாவாசை, சஷ்டி, தீட்டு காலங்கள், துவாதசி, மாதப்பிறப்பு, உச்சி வேளை, இரவு வேளை, எண்ணை தேய்த்து கொண்டு துளசி பறிக்க கூடாது.
* அதிகாலைப்பொழுதும், சனிக்கிழமைகளிலும் விரல் நகம் படாமல் விஷ்ணு பெயரை உச்சரித்து கொண்டு துளசி பறிக்க வேண்டும்.
* துளசி பறித்த 3 நாள் வரை உபயோகப்படுத்தலாம்.
* விரதநாள், மூதாதையரின் திதி நாள், தெய்வ பிரதிஷ்டை நாள், இறைவனை வணங்கும் வேளை, தானம் செய்யும் போது ஆகிய இடங்களில் துளசி பயன்படுத்துவதால் அந்த செயல் பரிபூரண பலன் கொடுக்கும்.
துளசியின் வேறு பெயர்கள்
துளசியின் மந்திரப்பெயர்கள் பிருந்தா, பிருந்தாவனி,விஸ்வபாவனி, புஷ்பசாரை, நந்தினி, கிருஷ்ணஜீவனி, பிருந்தாவனி, விஸ்வபூஜிதா.
துளசியின் நதி ரூபப்பெயர் கண்டகி.துளசியின் தாவரப்பெயர் சேக்ரட் பேசில் பிளான்ட்.
துளசியின் கணவன் பெயர் சங்க சூடன்.
சங்காபிஷேகத்தில் துளசி
சங்கு, துளசி, சாளக்கிராமம் (புண்ணிய நதிகளில் கிடைக்கும் கல் வடிவ சிலை) மூன்றையும் ஒன்றாக பூஜிப்பவர்களுக்கு மஹாஞானியாகும் பாக்கியமும், முக்காலமும் உணரும் சக்தியும் கிடைக்கும் என்பது ஐதீகம். சங்கில் தீர்த்தம் நிரப்பி துளசி மேல் வைத்து சங்காபிஷேகம் செய்வது மிகவும் சிறந்தது. சிவபெருமானுக்கு பிடித்த அபிஷேகங்களில் உயர்ந்தது சங்காபிஷேகம்.
துளசியின் கதை
கிருஷ்ணாவதாரத்தில் மகாவிஷ்ணுவின் அம்சமாக சுதர்மரும், லட்சுமியின் அம்சமாக ராதையும் அவதாரம் செய்கிறார்கள். இவர்களிருவரும் கிருஷ்ணனை அதிகம் நேசிக்கிறார்கள். ஒரு முறை ராதை சுதர்மர் மீது கோபம் கொண்டு சாபமிடுகிறார். இதனால் சுதாமர் சங்கசூடன் என்ற வேறொரு பிறப்பு எடுக்க வேண்டியதாயிற்று. அதேபோல் ராதையும் மாதவி என பிறப்பெடுக்கிறாள். மாதவியின் மகள் தான் துளசி. சங்கசூடனும், துளசியும் திருமணம் செய்து கொள்கிறார்கள். பின் கிருஷ்ணரால் துளசியின் ஆயுள் காலமும், சிவனால் சங்கசூடனின் ஆயுளும் முடிவடைந்தது. இதனால் சங்கசூடன் விஷ்ணுவுடனும், துளசி மகாலட்சுமியுடனும் மீண்டும் கலந்து விட்டார்கள். இதனாலேயே துளசியும் சங்கும் இருக்குமிடத்தில் பெருமாளும், லட்சுமியும் வாசம் செய்வதாக கூறப்படுகிறது.
உண்மையான பக்தி
கிருஷ்ண பகவான் பாமா, ருக்மணி இருவர் மீதும் சமமாக அன்பு வைத்திருந்தார். இதில் ருக்மணி கிருஷ்ணன் மீது 
அளவில்லாத அன்பும், ஆழமான பக்தியும் கொண்டிருந்தாள். அத்துடன் கிருஷ்ணனை தன் மனதில் வைத்து எப்போதும் பூஜித்து வந்தாள். ஆனால் பாமாவோ, விஷ்ணு தன்னை மார்பில் சுமந்திருப்பதாலும், கண்ணனுக்கு தேரோட்டியாக இருந்ததாலும், தனது திருமணத்தின் போது ஏராளமான செல்வம் கொண்டு வந்தாலும் நாரதரின் உதவியோடு கண்ணனை தனக்கே உரிமையாக்கிகொள்ள நினைத்தாள். இதற்காக கண்ணனை, துலாபார தராசு தட்டின் ஒரு புறமும், மற்றொரு தட்டில் தனது செல்வம் முழுவதையும் வைத்தாள். ஆனால் தராசு சமமாகவில்லை. அப்போது அங்கு வந்த ருக்மணி, கண்ணனுக்காக கொடுக்க தன்னிடம் ஒன்றுமில்லையே என வருந்தி, கண்ணனுக்கு பிடித்த துளசி இலை ஒன்றை தராசு தட்டில் வைத்த போது தராசு சமமாகியது. கண்ணன் புன்முறுவலுடன், நான் இப்போது யாருக்கு சொந்தமானவன் என்பது உங்களுக்கே புரிந்திருக்கும். நான், எனது என்ற அகந்தையை ஒழித்து, உண்மையான பக்தியுடன் என்னை சரணடைபவருக்கே நான் சொந்தம், என்றார். தனது அகந்தை நீங்கிய நிலையில் கண்ணனின் பாதத்தில் விழுந்து மன்னிப்பு கேட்ட பாமா, அந்த துளசி இலையை தன் தலையில் சூடிக்கொண்டாள்.

துளசியை முறைப்படி பூஜித்தால் கணவன் மனைவியருக்கிடையே ஒற்றுமை  பெருகி தோஷங்கள் விலகி  செல்வம் வீட்டில் தங்கும் .

ஆஞ்சநேயர- பரிகார பூஜை= பலன்


ஆஞ்சநேயருக்கான பரிகார பூஜையும் பலன்களும்
நாம் ஆஞ்சனேயருக்கு பலவிதமான பூஜைகளும் பரிகார பூஜைகளும் செய்கிறோம்,ஏழரை சனி இருப்பவர்கள் ஆஞ்சனேயர் பாதத்தை பிடித்துக் கொண்டால் போதும் சனியின் தாக்கம் மிகவும் குறையும் அதே போல்
பலவிதமான இன்னல்கள் துக்கங்கள் என்று வரும் போது ஆஞ்சனேயருக்கு நெய் விளக்கு வைத்தால் படிப்படியாக தீரும்

அவருக்கு செய்பவைகளில் சில ,
வடைமாலை சாத்துதல்
செந்தூரக்காப்பு அணிவித்தல்
வெண்ணெய் காப்பு சாத்துதல்
ராம் ராம் என்று எழுதி மாலை சாத்துதல்
இந்த பரிகாரங்களை செய்து பலர் நன்மை நடந்ததை கண்கூடாகப் பார்க்கிறோம்.
வடைமாலை
அனுமானுடைய தாய் அஞ்சலிதேவி தன் மகன் திடமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உளுந்து வடைசெய்து கொடுத்ததாக ஐதீகம். உளுந்து எலும்புகளுக்கு நல்ல போஷாக்கு .
வெற்றிலைமாலை
சீதையைத்தேடி தேடி பல இடங்களில் காணாது பின் அசோகவனத்தில் அவரை சந்த்தித்தார், அப்போது சீதை அவருக்கு வெற்றிலைக் கொடி அணிவித்து அவரை வாழ்த்தினார். என்றும் சிரஞ்ஜீவியாய் இருக்கவும் வாழ்த்தினாள். வெற்றிலை வயிறு சம்பந்தமான எல்லா தோஷங்களையும் போக்கும் பண்டைக் காலத்தில் சின்ன குழந்தைக்கும் வெற்றிலை சுரசம் வாயு தொல்லை இல்லாமல் இருக்க கொடுப்பார்கள்.
வெண்ணெய் சாத்துதல்
ராம ராவண யுத்தம் நடக்கிறது அப்போது ராமரையும் லக்குமணரையும் தன் தோளில் சுமந்து கொண்டுச் சென்றார் அனுமான் அப்போது ராவணன் சராமாரியாய் அம்பு தொடுக்க சக்திமிக்க அம்பால் அவர் தாக்கப் பட்டார்,அந்தக் காயத்திற்கு மருந்தாக தன் உடம்பில் வெண்ணெய் பூசிக் கொண்டாராம். வெண்ணெய் சீக்கிரமாக உருகும் தன்மை உடையது அந்த வெண்ணை உருகுவதற்கு முன்பாகவே நாம் நினைத்த காரியம் நடந்து விடும் என்ற நம்பிக்கை ,அதனால் வெண்ணெய் சார்த்தும் பழக்கம் உள்ளது,
சிந்தூரக் காப்பு
சீதையை அசோகவனத்தில் கண்ட அனுமாரிடம் சீதை கேட்கிறாள்.”என் அவர் நலமா? என்று.....
அதற்கு அனுமான் “எப்போதும் உங்களைத்தான் நினைத்துக் கொண்டு இருக்கிறார் என்றதும்.....
மகிழ்ச்சி தாங்காமல் சீதை தரையிலிருந்து செம்மண்ணை நெற்றியில் வைத்துக் கொண்டாள்.,இதைப் பார்த்த அனுமனுக்கு மிக மிக சந்தோஷம் .தாங்க முடியவில்லை தானும் தன் உடம்பு முழுவதும் செம்மண் பூசிக் கொண்டாராம்..
ஜெய் ஸ்ரீ ராம் என்று மாலையாக அணிவித்தல்
ராம் ராம் என்று எழுதி மாலையாக அணிவித்தல், அனுமன் தன் இதயத்திலேயே ராமாவை வைத்திருக்கிறார். சில படங்களில் அவர் தன் இதயத்தையே கிழித்து ராமாவைக் காட்டுவது போல் நாம் பார்த்திருக்கிறோம் ராம் நாமம் எல்லா ஷேமங்களையும் அள்ளி வழங்கும் மகிமை கொண்டது.
வாலில் பொட்டு வைப்பது
அனுமனுக்கு சக்தி முழுவதும் தன் வாலில் தான் .இராவணன் முன் தன் வாலையே சுருளாக்கி சிம்மாசனமாக்கி இராவனனுக்கும் மேல் உயரமாக் அமர்ந்தவர் அவர் இலங்கையை எரித்ததும் வாலில் வைத்த நெருப்பினால் தான் அவருக்கு சூடு தெரியாமல் ஆனால் இலங்கையே எரிந்தது, ஆகையால் வாலிலிருந்து சந்தனம் குங்குமம் பொட்டு வைத்து ஒரு சுற்றுமுடிவதற்குள் நினைத்த காரியம் சித்தியாகிறது என்ற நம்பிக்கை.
இதை செய்தால் பெண்களை அடைவதற்கு பாதகமாக உள்ள நாக தோஷம் , செவ்வாய் தோஷம் , பூத தோஷம் அனைத்தும் தீயில் எரிந்தது போல் விலகி திருமணம்  ,குழந்தை பேறு , குபேர யோகம் அனைத்தும் கிடைக்கும் .

வேலவனின் பெயர்களும் விளக்கமும்!




வேலவனின் வேறு பெயர்களும் அதன் விளக்கமும்!
1. ஆறுமுகம்: ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம் என்ற ஐந்துடன் அதோமுகமும் சேர்ந்து ஆறுமுகமானது.
2. குகன்: குறிஞ்சி நிலத் தெய்வம், மலைக் குகைகளில் கோயில் கொண்டதால் குகன்.
3. குமரன்: மிக உயர்ந்தவன், இளமையை எப்போதும் உடைவன், பிரம்மச்சாரி ஆனவன்.
4. முருகன்: முருகு அழகு என்று பொருள், எனவே முருகன் ஒப்புமையற்ற பேரழகன்.
5. குருபரன் : கு - அஞ்ஞான இருள், ரு - நீக்குபவர், ஆன்மாக்களின் அறியாமை இருளை அகற்றுபவன் குரு சிவனுக்கும், அகத்தியருக்கும், அருணகிரிக்கும் குருவாய் நின்று பிரணவத்தை உபதேசிப்பவன் குருநாதன்.
6. காங்கேயன்: கங்கையின் மைந்தன்.
7. கார்த்திகேயன்: கார்த்திகைப் பெண்களால் வளர்ந்தவன்.
8. கந்தன் : கந்து - யானை கட்டும் தறி. கந்தன் ஆன்மாக்களுக்குப் பற்றுக் கோடாய் இருப்பவன். பகைவர் வலிமையை அழிப்பவன் ஸ்கந்தன். தோள் வலிமை மிக்கவன். ஆறு திருமேனியும் ஒன்றானவன்.
9. கடம்பன் : கடம்ப மலர் மாலை அணிந்தவன்.
10. சரவணபவன் : சரம் - நாணல், வனம் - காடு, பவன் - தோன்றியவன், நாணல் மிக்க தண்ணீர் உடைய காட்டில் தோன்றியவன்.
11. ஸ்வாமி: ஸ்வம் - சொத்து, எல்லா உலகங்களையும், எல்லா உயிர்களையும் சொத்தாக உடையவன். சுவாமி என்ற பெயர் முருகனுக்கு மட்டுமே உரியது. சுவாமி உள்ள மலை சுவாமி மலை.
12. சுரேஷன் : தேவர் தலைவன் சுரேசன்.
13. செவ்வேள் : செந்நிறமுடையவன், ஞானச் செம்மை உடையவன்.
14. சேந்தன் : செந்தழல் பிழம்பாய் இருப்பவன்.
15. சேயோன் : சேய் - குழந்தை, குழந்தை வடிவானவன்.
16. விசாகன் : விசாக நட்சத்திரத்தில் ஒளியாய் உதித்தவன்.
17. வேலவன், வேலன் : வெல்லும் வேல் உடையவன். அறிவாக, ஞான வடிவாக விளங்கும் வேல், கூர்மை, அகலம், ஆழம் என்னும் மூன்றும் உடையது.
18. முத்தையன்: பிறப்பிலேயே முத்து ஒளியுடையது. மற்ற மணிகள் பட்டை தீட்டினால் தான் ஒளிரும். எனவே இயல்பாகவே ஒளிர்பவன் முத்தையன்.
19. சோமாஸ்கந்தன் : ச - உமா - ஸ்கந்தன்: சிவன் உமை முருகன்; சத்து - சிவம், சித்து - உமை, ஆனந்தம் - கந்தன், முருகன் ஆனந்த வடிவானவன்.
20. சுப்ரமணியன் : சு - மேலான, பிரம்மம் -பெரிய பொருளிலிருந்து, நியம் தோன்றி ஒளிர்வது. மேலான பெரிய பிரம்மத்தில் இருந்து தோன்றி ஒளிர்பவன்.
21. வள்ளற்பெருமான் : முருகன், மண்ணுலகில் அவதரித்த வள்ளி இச்சா சக்தி மூலம் இக நலன்களையும், விண்ணுலக மங்கை தெய்வானை கிரியா சக்தி மூலம் பரலோக நலன்களையும், வேலின் மூலம் ஞானசக்தியையும் ஆகிய மும்மை நலன்களையும், முக்தி நலன்களையும் வழங்குகிறார்கள்.
22. ஆறுபடை வீடுடையோன்: மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஆறாதாரங்களை ஆறுபடை வீடுகளாய் உடையவன்.
23. மயில்வாகனன் : மயில் - ஆணவம், யானை -கன்மம், ஆடு - மாயை இந்த மூன்றையும் அடக்கி வாகனமாய் கொண்டவன்.
24. தமிழ் என்றால் முருகன். முருகன் என்றால் தமிழ். இரண்டையும் பிரிக்க முடியாத அளவிற்கு இணைந்தே இருக்கும். உதாரணமாக 12 உயிரெழுத்து என்பது முருகனின் 12 தோள்களை குறிக்கும். 18 மெய்யெழுத்து என்பது முருகனின் 18 கண்கள் (முருகன் சிவனது நெற்றிப் பொறியிலிருந்து தோன்றியவர் என்பதால், இவரது ஒவ்வொரு முகத்திலும் இவருக்கும் நெற்றிக்கண் உண்டு) 6 இன எழுத்து என்பது 6 முகங்களை குறிக்கும். ஃ என்ற ஆயுத எழுத்து வேலை குறிக்கும்.இந்த வேலை வணங்குவதையே வேலையாக கொண்டால் வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்.
பாம்பன் சுவாமிகள் விளக்கம்
ஓம் சரவண பவ - பரமாத்ம வடிவம் சித்திக்கும்.
ஐம் சரவணபவ - வாக்கு வன்மை சித்திக்கும்.
சௌசரவணபவ - உடல் வன்மை சிறக்கும்.
க்லீம் சரவணபவ - உலகம் தன் வயமாகும்.
ஸ்ரீம் சரவணபவ - செல்வம் சிறக்கும்.

தங்கம் வீட்டில் தங்கவில்லையே என்று இருப்பவர்கள் முருகனைக் கும்பிட்டால் தோஷம் விலகும் 

-பூமியின் காந்த அலை -கோவில்கள்

கோவில்கள் எங்கு பூமியின் காந்த அலை அடர்த்தியாக ஓடுகிறதோ அங்கு கட்டப்படவேண்டும். அது கிராமமாகவோ, நகரமாகவோ, மலை மீதோ எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். பூமியின் வட தென் துருவ காந்த அலை எங்கு அதிகமாக உள்ளதோ அங்குகட்டப்பட வேண்டும்.
முக்கியமான கடவுள் இருக்குமிடமான கர்ப்பகிரகம் (அ) மூலஸ்தானத்தில் இந்த அலைஅதிகமாக இருக்கும். சரியாகச் சொல்வதெனில் இந்த மூலஸ்தானத்தில் சிலை இடம்பெற்ற பிறகே கோவிலின் அமைப்பு கட்டப்படும். இந்த இடத்தில் தாமிரத் தகடுகள் வேதவரிகளைச் செதுக்கி புதைக்கப்படும்.
இவ்வாறு ஏன் செய்கிறார்கள் என்றால் காந்த அலைகளை அது சுற்றிலும் பரப்பவே. எனவே ஒருவர் தொடர்ந்து கோவிலுக்கு சென்று சிலையை வலப்புறமாக சுற்றி வந்தால் அவர் பூமியின் காந்த ஆற்றலைப் பெறுவார். அவரின் உடல் அந்த ஆற்றலை கிரகித்துக்கொள்ளும். இவ்வாற்றல் அவர் நலமுடன் வாழ வழி வகுக்கும். இது அறிவியல் பூர்வமான உண்மை.
மேலும் கர்ப்பக்கிரகம் மூன்று திசையிலும் மூடப்பட்டுள்ளதால் ஆற்றலை அதிகப்படுத்தும். மூலஸ்தானத்திலிருக்கும் விளக்கும் வெப்ப ஆற்றலை வெளிப்படுத்தும். மணியோசை பக்தர்களின் மனதினை அலைபாய விடாமல் ஒன்றியிருக்கச் செய்யும். இது மன அழுத்தினைக் குறைக்கும்.
மேலும் மணம் வீசும் மலர்கள் ஒருவிதமான நல்ல ஆராவை (Aura– ஒருவரைச் சுற்றியுள்ள மனித காந்த சக்தி) வெளிப்படுத்தும். கடவுளின் சிலைகளை கற்பூரம், துளசிமற்றும் பிற பொருள்களைச் சேர்த்து கழுவி அந்த நீரை தீர்த்தமாகத்தருவார்கள். அதில்மிக அதிகமான காந்த சக்தியுள்ளது.
அத்தீர்த்தத்தினை தாமிரப் பாத்திரத்திலிட்டுத் தருவார்கள். இது பற்சொத்தை மற்றும் சளி, இருமல் மற்றும் வாய் துர்நாற்றத்தினைப் போக்கவல்லது. இதன் மூலம் நமது முன்னோர்கள் பல நோய்களைக் குணப்படுத்தியுள்ளார்கள்
மேலும் தீபாரதனை காட்டும் போது மிக அதிகமான சக்தி வெளிப்படும் எனவேதான் ஆண்களை சட்டையில்லாமலும் பெண்களை அதிக அணிகலன்களோடும் கோவிலுக்குவரச் சொன்னார்கள்.

       இக் காந்த சக்தி அதிகமாணால் பெண்கள் தங்களுக்கு விருப்பமான ஆண்களையும் ஆண்கள் தங்களுக்கு விருப்பமான பெண்களை இழுக்கும் ஈர்ப்பு சக்தியாக மாறும் .மேலும் இக் காந்த சக்தி தன யோக சக்தியாக மாறி பக்தரின் செல்வ செழிப்பையும் உயர்த்தும் .  

திருக்கடையூர் குரு பார்வை பெற!



திருக்கடையூர் திருத்தலத்தில்....குரு பார்வை பெறலாம்..!

எமனிடம் இருந்து தப்புவதற்காக, திருக்கடையூர் திருத்தலத்தில், சிவலிங்கத் திருமேனியைக் கெட்டியாகத் தழுவிக்கொண்ட மார்க்கண்டேயனைத் தெரியும்தானே! 

அப்போது, எமதருமன் பாசக்கயிற்றை வீச... அது லிங்கத் திருமேனியிலும் விழவே சிவனார் ஆவேசமானதையும் அறிவோம், இல்லையா? 


அதுமட்டுமா?

எமதருமனின் பதவியைப் பறித்துச் சாபமிட்டார் சிவபெருமான்.

கௌசிகபுரி எனும் தலத்துக்கு வந்த எமதருமன், அங்கேயுள்ள நதியில் நீராடி, சிவபூஜை செய்து தவமிருக்க எண்ணினான்.

ஆனால், சிவபூஜை செய்வதற்கு விபூதி, வில்வம், ருத்ராட்சம் என ஏதுமின்றி, என்ன செய்வது எனக் கலங்கினான்.

பிறகு, நதியின் மணலையே எடுத்து சிவலிங்கமாக்கி, தவம் செய்து வழிபட்டான்;

வரம் பெற்று, இழந்த பதவியைப் பெற்றான்!

சிவனாருக்கும் அம்பாளுக்கும் நடுவே முருகப்பெருமான் சந்நிதி கொண்டிருப்பதால், இதனை சோமாஸ்கந்த அமைப்பு கொண்ட ஆலயம் என்றும் திருமண வரம் அருளும் திருத்தலம் என்றும் போற்றுகின்றனர், பக்தர்கள்!

ஆயுள் பலமும் பதவி உயர்வும் தந்தருளும் சிவனார் திருக்காட்சி தரும் இந்தக் கோயிலில், குரு ஸ்ரீதட்சிணாமூர்த்திதான் முக்கிய நாயகனாகத் திகழ்கிறார்.

எமதருமன் உண்டாக்கிய தண்டி தீர்த்தம் எனப்படும் காலப் பொய்கை ரொம்பவே விசேஷம்.

இந்தத் தலத்தில் சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் செய்வது பூர்வ ஜென்ம புண்ணியம் என்றும் சந்ததியைக் குறைவின்றி வாழச் செய்யும் என்கின்றனர் பக்தர்கள்!

திருக்கடையூர் அமிர்தகடேசுவரர்

திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும்.

சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

மயிலாடுதுறை -தரங்கம்பாடி சாலை மார்க்கத்தில் மயிலாடுதுறையில் இருந்து 23 கி.மி. தூரத்தில் திருக்கடையூர் இருக்கிறது.

சீர்காழியில் இருந்து சுமார் 30 கி.மி. தொலைவில் சீர்காழி - நாகப்பட்டினம் சாலை வழியில் இத்தலம் உள்ளது.

அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றான இது குங்கிலியக்கலய நாயனார், காரி நாயனார் வாழ்ந்த தலமெனப்படுகிறது.

அபிராமி அந்தாதி பாடப்பட்டதும் இத்தலத்திலேயாகும்.