துன்பங்கள் தீரக் கனவில் தீர்வு தரும்
ஸ்ரீ ஸ்வப்நேஸ்வரி மந்திரம்:-
வாழ்க்கையில் நமக்கும் நம்மைச் சேர்ந்தவர்களுக்கும் அநேகம் பிரச்சனைகள் வரும் போகும்.ஆனால் ,இக்கட்டான சில சூழ்நிலைகளில் ,நமக்கு என்ன செய்து அதை தீர்ப்பது என்று தெரியாமல் குழம்பி ஜோதிடரையோ ,குறி சொல்பவரையோ (அவர்களில் பெரும்பாலானவர்கள்MONEY MINDED) நாடிச் சென்று பெரும் பணத்தை வீணாக செலவு செய்தும் பிரச்சனை தீர்ந்த பாடில்லை என சொல்வோர் ஏராளம்.
இந்த ஸ்வப்நேஸ்வரி மந்திரத்தை தினம் உறங்கும் முன் குறைந்தது 108 எண்ணிக்கை 90 நாட்கள் ஜெபித்து வரவும்.அருகில் ஒரு செம்பில் கொஞ்சம் தண்ணீர் வைத்துக்கொள்ளவும்.முதல் நாளும் 90ஆவது நாளும் மட்டும் வெற்றிலை, பாக்கு,அவல்,பழங்கள் ,பால்,பன்னீர் வைத்து ஜெபிக்கவும்.மற்ற நாட்களில் முடிந்ததை அல்லது கல்கண்டும் பாலும் படைத்து ஜெபித்து வரவும்.
தவறான மனிதர்கள்,மந்திரவாதிகளின் தொடர்பு உங்கள் சூக்ஷும உடலில் கீழான சக்கரங்களை இயங்கச் செய்து உங்களை தவறான நடத்தை உள்ளவராக மாற்றிவிடும்.இந்த மந்திர ஜெபத்தின் மூலம் உங்கள் பிரச்சனைகளுக்கு நீங்களே தீர்வு கண்டு கொள்ளலாம்.
ஓம்||
க்ரீம் க்ரீம் க்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் ||
ஸ்வப்நேஸ்வரி ||
ஹ்ரீம் ஹ்ரீம் க்ரீம் க்ரீம் க்ரீம் ||
ஓம் ||
க்ரீம் க்ரீம் க்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் ||
ஸ்வப்நேஸ்வரி ||
ஹ்ரீம் ஹ்ரீம் க்ரீம் க்ரீம் க்ரீம் ||
ஓம் ||
இந்த மந்திரத்தை ஜெபித்து வரும் நாட்களில் அருகில் ஒரு பேப்பர் ,பேனா வைத்துக்கொள்ளவும்.இரவில் கனவில் ஏதேனும் தேர்வினை அம்பாள் கூறினால் அதை குறித்து வைத்துக்கொண்டு பயன்படுத்தவும்.இதனால் எந்தத் தீங்கும் ஏற்படாது பயமின்றிச் செய்து பயன் பெறுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக