புதன், 31 டிசம்பர், 2014

ஸ்ரீ ஸ்வப்நேஸ்வரி மந்திரம்


துன்பங்கள் தீரக் கனவில் தீர்வு தரும்
ஸ்ரீ ஸ்வப்நேஸ்வரி மந்திரம்:-
வாழ்க்கையில் நமக்கும் நம்மைச் சேர்ந்தவர்களுக்கும் அநேகம் பிரச்சனைகள் வரும் போகும்.ஆனால் ,இக்கட்டான சில சூழ்நிலைகளில் ,நமக்கு என்ன செய்து அதை தீர்ப்பது என்று தெரியாமல் குழம்பி ஜோதிடரையோ ,குறி சொல்பவரையோ (அவர்களில் பெரும்பாலானவர்கள்MONEY MINDED) நாடிச் சென்று பெரும் பணத்தை வீணாக செலவு செய்தும் பிரச்சனை தீர்ந்த பாடில்லை என சொல்வோர் ஏராளம்.
இந்த ஸ்வப்நேஸ்வரி மந்திரத்தை தினம் உறங்கும் முன் குறைந்தது 108 எண்ணிக்கை 90 நாட்கள் ஜெபித்து வரவும்.அருகில் ஒரு செம்பில் கொஞ்சம் தண்ணீர் வைத்துக்கொள்ளவும்.முதல் நாளும் 90ஆவது நாளும் மட்டும் வெற்றிலை, பாக்கு,அவல்,பழங்கள் ,பால்,பன்னீர் வைத்து ஜெபிக்கவும்.மற்ற நாட்களில் முடிந்ததை அல்லது கல்கண்டும் பாலும் படைத்து ஜெபித்து வரவும்.
தவறான மனிதர்கள்,மந்திரவாதிகளின் தொடர்பு உங்கள் சூக்ஷும உடலில் கீழான சக்கரங்களை இயங்கச் செய்து உங்களை தவறான நடத்தை உள்ளவராக மாற்றிவிடும்.இந்த மந்திர ஜெபத்தின் மூலம் உங்கள் பிரச்சனைகளுக்கு நீங்களே தீர்வு கண்டு கொள்ளலாம்.
ஓம்||
க்ரீம் க்ரீம் க்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் ||
ஸ்வப்நேஸ்வரி ||
ஹ்ரீம் ஹ்ரீம் க்ரீம் க்ரீம் க்ரீம் ||
ஓம் ||
இந்த மந்திரத்தை ஜெபித்து வரும் நாட்களில் அருகில் ஒரு பேப்பர் ,பேனா வைத்துக்கொள்ளவும்.இரவில் கனவில் ஏதேனும் தேர்வினை அம்பாள் கூறினால் அதை குறித்து வைத்துக்கொண்டு பயன்படுத்தவும்.இதனால் எந்தத் தீங்கும் ஏற்படாது பயமின்றிச் செய்து பயன் பெறுங்கள்.

செவ்வாய், 30 டிசம்பர், 2014

ஷண்முக மந்திரம்


கஷ்ட நிவர்த்தி மாமருந்து:
மஹா பாரதத்தில் வன பர்வத்தில் மார்கண்டேய மகரிஷியால்
தர்மபுத்திரர்க்கு உபதேசிக்கபட்ட கார்த்திகேய ப்ரபாவம் எனும் ஷண்முக மந்திரம் ---
அன்புடன் உலக மக்கள் அனைவரும் படித்துப் பயன் பெற
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரதியங்கிரா கோயில் சுவாமிஜி அவர்கள் ஆசியுடன்
பாராயணம் செய்து பயன் பெருக வளம் பெருக .
ஓம் குரு குஹாய நமஹா
ஓம் ஆக்நேயா நமஹா
ஓம் ஸ்கந்தாய நமஹா
ஓம் தீப்த கீர்த்தையே நமஹா
ஓம் அனாமையாய நமஹா
ஓம் மயூர கேதவே நமஹா
ஓம் தர்மாத்மனே நமஹா
ஓம் பூதேசாய நமஹா
ஓம் மகிஷா ர்த்தனாய நமஹா
ஓம் காமஜிதே நமஹா
ஓம் காமதாய நமஹா
ஓம் காந்தாய நமஹா
ஓம் சத்யவாஹே நமஹா
ஓம் புவநேஸ்வராய நமஹா
ஓம் சிசுவே நமஹா
ஓம் சீக்ராய நமஹா
ஓம் சசயே நமஹா
ஓம் சண்டாயயே ------------------------------18
ஓம் தீப்தவர்நாயே நமஹா
ஓம் அமோகாயே நமஹா
ஓம் அனகாயே நமஹா
ஓம் ரவுத்ராயே நமஹா
ஓம் ப்ரியாய நமஹா
ஓம் சன்றானநாய நமஹா
ஓம் தீப்தசக்தையே நமஹா
ஓம் பிரசாந்தாத்மனே நமஹா
ஓம் பத்ரக்ருதே நமஹா
ஓம் கூடமோ ஹணாய நமஹா
ஓம் சஷ்டி ப் ரியாய நமஹா
ஓம் தர்மாத்மனே நமஹா
ஓம் பவித்ராய நமஹா
ஓம் மாத்ருவத்சலாய நமஹா
ஓம் கன்யா பர்தாய நமஹா
ஓம் விபக்தாய நமஹா
ஓம் ச்வா ஹெய்யாய நமஹா
ஓம் ரேவதி சுதாய நமஹா --------------------36
ஓம் பிரபவே நமஹா
ஓம் நேதாய நமஹா
ஓம் விசாகாய நமஹா
ஓம் நைக மேயாய நமஹா
ஓம் சுச்சராய நமஹா
ஓம் சீவ்ரதாய நமஹா
ஓம் லலிதாய நமஹா
ஓம் பால க் ரீட னக ப்ரியாய நமஹா
ஓம் கசாரீ ணே நமஹா
ஓம் ப் ரம சாரிணே நமஹா
ஓம் சூராய நமஹா
ஓம் சரவநோத்பவாய நமஹா
ஓம் விஷ்வாமித்திர ப்ரியாய நமஹா
ஓம் தேவசேனா ப்ரியாய நமஹா
ஓம் வாசுதேவ ப்ரியாய நமஹா
ஓம் பிரியாய நமஹா
ஓம் பிரியக்ருதே நமஹா
ஓம் கார்த்திகேயாய நமஹா ---------------54
தினமும் காலையில் இரு முறை படித்து வர நன்று .
கார்த்திகேய ப்ரபாவம் முற்றியது
எந் தாயும் எனக்கருள் தந்தையும் நீ
சிந்தாகுல மானவை தீர்த் தெனையாள்
கந்தா கதிர்வேலவனே உமையாள்
மைந்தா குமார மறை நாயகனே .---கந்தரனுபூதி

20 பிரதோஷ வழிபாடு


20 வகை பிரதோஷ விரத வழிபாட்டு பலன !!!
1. தினசரி பிரதோஷம் :தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும்.இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும். நித்தியப்பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார்களோ அவர்களுக்கு "முக்தி'' நிச்சயம் ஆகும் என்கிறது நமது சாஸ்திரம்.
2. பட்சப் பிரதோஷம் :அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் "திரயோதசி'' திதியே பட்சப் பிரதோஷம் ஆகும். இந்தத்திதியின் மாலை நேரத்தில் பட்சிலிங்க வழிபாடு செய்வது உத்தமம் ஆகும். குறிப்பாகஅன்னை பார்வதி தேவி மயில் உருவாய் ஈசனை வழிபட்ட தலமாகிய மயிலாப்பூர் "கபாலீஸ்வரரை'' வழிபடுவது சிறப்பாகும்.
3. மாதப் பிரதோஷம் :பவுர்ணமிக்குப் பிறகு வரும் கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறை காலத்தில், 13-வது திதியாக வரும் "திர யோதசி'' திதியே மாதப் பிரதோஷம் ஆகும். இந்த திதியின் மாலை நேரத்தில் "பாணலிங்க'' வழிபாடு செய்வது உத்தம பலனைத் தரும்.
4. நட்சத்திரப் பிரதோஷம் :பிரதோஷ திதியாகிய "திரயோதசி திதி''யில் வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனை பிரதோஷ நேரத்தில் வழிபடுவது நட்சத்திர பிரதோஷம் ஆகும்.
5. பூரண பிரதோஷம் :திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராத திரயோதசி திதி மட்டும் உள்ள பிரதோஷம் பூரண பிரதோஷம் ஆகும். இந்தப் பிரதோஷத்தின் போது "சுயம்பு லிங்கத்தை''த் தரிசனம் செய்வது உத்தம பலனை தரும். பூரண பிரதோஷ வழிபாடு செய்பவர்கள் இரட்டைப் பலனை அடைவார்கள்.
6. திவ்யப்பிரதோஷம் :பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது "திவ்யப் பிரதோஷம்'' ஆகும். இந்த நாளன்று மரகத லிங்கேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை செய்தால் பூர்வஜென்ம வினை முழுவதும் நீங்கும்.
7.தீபப் பிரதோஷம் :பிரதோஷ தினமான திரயோதசி திதியில் தீப தானங்கள் செய்வது, ஈசனுடைய ஆலயங்களைத் தீபங்களால் அலங்கரித்து ஈசனை வழிபட சொந்த வீடு அமையும்.
8.அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் :வானத்தில் "வ'' வடிவில் தெரியும் நடத்திர கூட்டங்களே, "சப்தரிஷி மண்டலம்'' ஆகும். இது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வானில் தெளிவாகத் தெரியும். இந்த மாதங்களில் திரயோதசி திதியில் முறையாக பிரதோஷ வழிபாடு செய்து, சப்தரிஷி மண்டலத்தைத் தரிசித்து வழிபடுவதே அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் ஆகும். இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கும் ஈசன் தரம் பார்க்காது அருள் புரிவான்.
9. மகா பிரதோஷம் :ஈசன் விஷம் உண்ட நாள் கார்த்திகை மாதம், சனிக்கிழமை, திரயோதசி திதி ஆகும். எனவே சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் "மகா பிரதோஷம்'' ஆகும். இந்த மகா பிரதோஷத்து அன்று எமன் வழிபட்ட சுயம்பு லிங்க தரிசனம் செய்வது மிகவும் உத்தமம் ஆகும்.குறிப்பாக சென்னை வேளச்சேரியில் உள்ள, "தண்டீசுவர ஆலயம்''. திருச்சி, மண்ணச்சநல்லூர் அருகே உள்ள"திருப்பைஞ்ஞீலி'' சிவ ஆலயம், குடவாசலில் இருந்து நன்னிலம் செல்லும் பாதையில் உள்ள "ஸ்ரீவாஞ்சியம்'' சிவ ஆலயம், கும்ப கோணம் முதல் கதிராமங்கலம் சாலையில் உள்ள "திருக்கோடி காவல்'' சிவ ஆலயம் ஆகியவை குறிப்பிடத்தக்கனவாகும். மாசி மாதம் வரும் மகா சிவராத்திரிக்கு முன்னால் வரும் பிரதோஷமும், "மகா பிரதோஷம்'' எனப்படும்.
10. உத்தம மகா பிரதோஷம் :சிவபெருமான் விஷம் அருந்திய தினம் சனிக்கிழமையாகும். அந்தக் கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறையில், சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் உத்தம மகா பிரதோஷம் ஆகும். இது மிகவும் சிறப்பும் கீர்த்தியும் பெற்ற தினமாகும்.
11. ஏகாட்சர பிரதோஷம் :வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் மகா பிரதோஷத்தை `ஏகாட்சர பிரதோஷம்' என்பர். அன்றைக்கு சிவாலயம் சென்று, `ஓம்' என்ற பிரணவ மந்திரத்தை எத்தனை முறை ஓத முடியுமோ, அத்தனை முறை ஓதுங்கள். பின், விநாயகரையும் வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கினால் பல விதமான நன்மைகள் ஏற்படும்.
12. அர்த்தநாரி பிரதோஷம் :வருடத்தில் இரண்டு முறை மகாபிரதோஷம் வந்தால் அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர். அந்த நாளில் சிவாலயம் சென்று வழிபட்டால், தடைப்பட்ட திருமணம் நடைபெறும். பிரிந்து வாழும் தம்பதி ஒன்று சேர்வார்கள்.
13. திரிகரண பிரதோஷம் :வருடத்துக்கு மூன்று முறை மகாபிரதோஷம் வந்தால் அது திரிகரண பிரதோஷம். இதை முறையாகக் கடைப்பிடித்தால் அஷ்ட லட்சுமிகளின் ஆசியும் அருளும் கிடைக்கும். பிரதோஷ வழிபாடு முடிந்ததும் அஷ்ட லட்சுமிகளுக்கும் பூஜை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
14. பிரம்மப் பிரதோஷம் :ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால், அது பிரம்மப் பிரதோஷம். பிரம்மாவுக்கு திருவண்ணாமலையில் ஏற்பட்ட சாபம் நீங்குவதற்காக அவர் ஒரு வருடத்தில் நான்கு முறை சனிக்கிழமையும், திரயோதசியும் வரும் போது முறையாக பிரதோஷ வழிபாடு செய்து சாப விமோசனம் பெற்றார். நாமும் இந்தப் பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்தால் முன்ஜென்மப் பாவம் நீங்கி, தோஷம் நீங்கி நன்மைகளை அடையலாம்.
15. அட்சரப் பிரதோஷம் :வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம். தாருகா வனத்து ரிஷிகள். `நான்' என்ற அகந்தையில் ஈசனை எதிர்த்தனர். ஈசன், பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்குப் பாடம் புகட்டினார்.தவறை உணர்ந்த ரிஷிகள், இந்தப் பிரதோஷ விரதத்தை அனுஷ்டித்து பாவ விமோசனம் பெற்றனர்.
16. கந்தப் பிரதோஷம் :சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்தப் பிரதோஷம். இதுமுருகப் பெருமான் சூரசம்ஹாரத்துக்கு முன் வழிபட்ட பிரதோஷ வழிபாடு. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் முருகன் அருள் கிட்டும்.
17. சட்ஜ பிரபா பிரதோஷம் :ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது, `சட்ஜ பிரபா பிரதோஷம்'. தேவகியும் வாசுதேவரும் கம்சனால் சிறையிடப்பட்டனர். ஏழு குழந்தைகளைக் கம்சன் கொன்றான். எனவே, எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை முறையாக அவர்கள் அனுஷ்டித்ததால், கிருஷ்ணன் பிறந்தான். நாம் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் முற்பிறவி வினை நீங்கி பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கலாம்.
18. அஷ்ட திக் பிரதோஷம் :ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷ வழிபாட்டை முறையாகக் கடைப்பிடித்தால், அஷ்ட திக்குப் பாலகர்களும் மகிழ்ந்துநீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள்.
19.நவக்கிரகப் பிரதோஷம் :ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால், அது நவக்கிரகப் பிரதோஷம். இது மிகவும் அரிது. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடு நவக் கிரகங்களின் அருளும் கிடைக்கும்.
20. துத்தப் பிரதோஷம் :அரிதிலும் அரிது பத்து மகாபிரதோஷம் ஒரு வருடத்தில் வருவது. அந்தப் பிரதோஷ வழிபாட்டைச் செய்தால் குருடரும் கண்பார்வை பெறுவார்கள். முடவன் நடப்பான். குஷ்டரோகம் நீங்கும். கண் சம்பந்தப்பட்ட வியாதியும் குணமாகும்.*

வெள்ளி, 26 டிசம்பர், 2014

அபிஷேக பொருளும் பயனும்




றைவனுக்கு அபிஷேகம் செய்யும் பொருளும் அதன் பயனும் !
1.நன்னீர் - தூய்ப்பிக்கும்
2. நல்லெண்ணை - நலம்தரும்
3. பச்சரிசி மா - மல நாசம், கடன் தீரும்
4. மஞ்சள் தூள் - நல் நட்பு வாய்ப்பிக்கும்
5. திருமஞ்சனத்தூள் - நோய் தீர்க்கும்
6. பஞ்சகவ்யம் - தீதளிக்கும், ஆன்மசுத்தி (பசுவின் பால், தயிர், நீர், சாணம், நெய் கலந்தது)
7. பசும்பால் - நீண்ட ஆயுள் தரும்
8. பசுந்தயிர் - மகப்பேறு வாய்க்கும்
9. பஞ்சாமிருதம் - பலம், வெற்றி தரும்
10. தேன் - சுகமளிக்கும், சங்கீதவிருத்தி
11. நெய் - முக்தியளிக்கும்
12. சர்க்கரை - எதிரியை ஜெயிக்கும்
13. இளநீர் - நல் சந்ததியளிக்கும்
14. கருப்பஞ்சாறு - ஆரோக்கியமளிக்கும்
15. நார்த்தம்பழம் - சந்ததி வாய்க்கும்
16. சாத்துக்கொடி - துயர் துடைக்கும்
17. எலுமிச்சை - யமபய நாசம், நட்புடை சுற்றம்
18. திராøக்ஷ - திடசரீரம் அளிக்கும்
19. வாழைப்பழம் - பயிர் செழிக்கும்
20. மாம்பழம் - செல்வம், வெற்றி தரும்
21. பலாப்பழம் - மங்கலம் தரும், யோகசித்தி
22. மாதுளை - பகைநீக்கும், கோபம் தவிர்க்கும்
23. தேங்காய்த்துருவல் - அரசுரிமை
24. திருநீறு - சகல நன்மையும் தரும்
25. அன்னம் - அரசுரிமை
26. சந்தனம் - சுகம், பெருமை சேர்க்கும்
27. பன்னீர் - சருமம் காக்கும்
28. கும்பஜலம் - பிறவிப்பயன் அளிக்கும்
29. சங்காபிஷேகம் - நலமெலாமளிக்கும்

திருவாதிரை விரதம்


திருவாதிரை விரதம் இருப்பது எப்படி?
மார்கழி திருவாதிரை நாளில், அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து நீராடி, சிவநாமம் ஜெபித்து திருநீறு பூச வேண்டும். சிவாலயம் சென்று நடராஜரையும், சிவகாமி அம்மனையும் தரிசிக்க வேண்டும். காலையில் நடக்கும் தாண்டவ தீபாராதனையைக் காண வேண்டும். சுவாமிக்கு களி படைத்து குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். அன்று பகலில் சாப்பிடக்கூடாது. சிவபுராணம், தேவாரம், திருவாசகத்தை பக்தியுடன் படிக்க வேண்டும். இரவில் எளிய உணவு சாப்பிட்டு விரதம் முடிக்கலாம். இந்த விரதத்தை ஒவ்வொரு மாதமும் திருவாதிரை நட்சத்திரத்தன்று தொடரவும் செய்யலாம். ஒரு வருடம் திருவாதிரை விரதமிருந்தால், வாழ்வுக்குப் பின் கயிலாயத்தில் வாழும் பேறு பெறலாம்.

புதன், 24 டிசம்பர், 2014

ஐயப்பன் பதினெட்டுப் படி




ஐயப்பன் கோயிலின் முன்பாக இருக்கும் பதினெட்டுப் படிகளில் பதினெட்டுத் தெய்வங்கள் இருப்பதாகக் கூறுகின்றனர். இது போல் இந்தப் படிகள் மனிதன் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய குணங்களையும், நடைமுறைப்படுத்திக் கொள்ள வேண்டிய சில செயல்பாடுகளையும் உணர்த்துவதாக உள்ளது.

பதினெட்டுப் படிகளின் தெய்வங்கள்

ஐயப்பன் கோயிலின் முன்புள்ள பதினெட்டுப் படிகளிலும் பதினெட்டுத் தெய்வங்கள் இருந்து அருள் செய்கின்றனர். 

1. விநாயகர்
2. சிவன்
3. பார்வதி
4. முருகன்
5. பிரம்மா
6. விஷ்ணு
7. ரங்கநாதர்
8. காளி
9. எமன்
10. சூரியன்
11. சந்திரன்
12. செவ்வாய்
13. புதன்
14. குரு
15. சுக்கிரன்
16. சனி
17. ராகு
18. கேது

பதினெட்டு படிகள் காட்டும் குணங்கள்

1. காமம்:

பற்று உண்டானால் பாசம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்து அழிவு ஏற்படுகிறது.

2. கோபம்:

கோபம் குடியைக் கெடுத்து, கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் சேர்த்து அழித்து விடும்.

3. பேராசை :

பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய்விடும், ஆண்டவனை அடைய முடியாது.

4. மதம்:

யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்து விடும். அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா? அதுபோல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்துவிடுவான்.

5. பொறாமை:

மனதில் பொறாமையை நிலைநிறுத்தி வாழ்பவனுக்கு, வேறு பகையே வேண்டாம். அதுவே அவனை அழித்துவிடும்.

6. வீண் பெருமை:

அசுர குணமானது நமக்குள் இருக்கக் கூடாது.

7. அகந்தை:

தான் என்ற அகந்தை கொண்டவன் ஒரு போதும் வாழ்வில் முன்னேற முடியாது. அகந்தை என்பது முடிவில்லா ஒரு சோகச் சுமை.

8. சாத்வீகம்:

விருப்பு, வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும்.

9. ராஜஸம்: அகங்காரத்தோடு கருமம் செய்தல் கூடாது.

10. தாமஸம்:

அற்ப புத்தியை பற்றி நிற்பது. மதி மயக்கத்தால் வினை செய்வது.

11. ஞானம்:

எல்லாம் ஆண்டவன் செயல் என்று அறியும் பேரறிவு.

12. மனம்:

நம் மனம் கெடாது, பிறர் மனம் வருந்தாது வாழவேண்டும். எப்போதும் ஐயன் நினைவே மனதில் இருக்க வேண்டும்.

13. அஞ்ஞானம்:

உண்மைப் பொருளை அறிய மாட்டாது மூடி நிற்கும் இருள்.

14. கண்:

ஆண்டவனைப் பார்க்கவும், ஆனந்தக் கண்ணீர் உகுக்கவுமே ஏற்பட்டது.

15. காது:

ஆண்டவனின் மேலான குணங்களைக் கேட்டு, அந்த ஆனந்தக் கடலில் மூழ்க வேண்டும்.

16. மூக்கு:

ஆண்டவனின் சன்னதியிலிருந்து வரும் நறுமணத்தை முகர வேண்டும்.

17. நாக்கு:

கடுஞ் சொற்கள் பேசக்கூடாது.

18. மெய்:

இரு கரங்களால் இறைவனை கைகூப்பித் தொழ வேண்டும். கால்களால் ஆண்டவன் சன்னதிக்கு நடந்து செல்ல வேண்டும். உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை நமஸ்கரிக்க வேண்டும்.

பதினெட்டுப் படிகள் உணர்த்தும் தத்துவங்கள்

1. முதல் படி:

விஷாத யோகம். பிறப்பு நிலையற்றது. நாம் செய்யும் நல்லவையும் கெட்டவையுமே நம் பாவ புண்ணியங்களை நிர்ணயிக்கும் என்று உணர வேண்டும்.

2. இரண்டாம் படி:

சாங்கிய யோகம். பரமாத்மாவே என் குரு என்பதை உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெற வேண்டும்.

3. மூன்றாம் படி:

கர்மயோகம். உபதேசம் பெற்றால் போதுமா? மனம் பக்குவம் அடைய வேண்டாமா? பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்யும் பக்குவமடைய வேண்டும்

4. நான்காம் படி:

ஞான கர்ம சன்னியாச யோகம். பாவம், புண்ணியங்கள் பற்றிக் கூட கவலைப்படாமல் எதன் மீதும் பற்று இல்லாமல், பரமனை அடையும் வழியில் முன்னேற வேண்டும்.

5. ஐந்தாம் படி:

சன்னியாச யோகம். நான் உயர்ந்தவன் என்ற கர்வம் இல்லாமல் தான, தர்மங்கள் செய்திட வேண்டும்.

6. ஆறாம் படி:

தியான யோகம். கடவுளை அடைய புலனடக்கம் முக்கியம். மெய், வாய், கண், மூக்கு, செவி இந்த புலன்கள் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமே தவிர அவை இழுத்த இழுப்புக்கெல்லாம் நாம் போய் விடாதிருக்க வேண்டும்.

7. ஏழாம் படி:

ஞானம். இந்த உலகில் காண்பவை எல்லாமே பிரம்மம்தான். எல்லாமே கடவுள்தான் என உணர்ந்திட வேண்டும்.

8. எட்டாம் படி:

அட்சர பிரம்ம யோகம். எந்நேரமும் இறைவனைப் பற்றிய நினைப்புடன் வேறு சிந்தனைகளே இல்லாமல் இருந்திட வேண்டும்.

9. ஒன்பதாம் படி:

ராஜவித்ய, ராஜ குஹ்ய யோகம். கடவுள் பக்தி மட்டுமே இருந்தால் பயனில்லை. சமூகத் தொண்டாற்றி, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதுதான் உண்மையான பக்தி. உண்மையான ஆன்மிகம் என்று உணர்ந்திட வேண்டும்.

10. பத்தாம் படி:

விபூதி யோகம். அழகு, அறிவு, ஆற்றல் என எத்தகைய தெய்வீக குணத்தைக் கண்டாலும் அதை இறைவனாகவே காண வேண்டும்.

11. பதினொன்றாம் படி:

விஸ்வரூப தரிசன யோகம். ஆண்டவனில் உலகத்தையும் உலகில் ஆண்டவனையும் பார்க்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

12. பன்னிரண்டாம் படி:

பக்தி யோகம். இன்பம் - துன்பம், விருப்பு-வெறுப்பு, ஏழை - பணக்காரன் என்பன போன்ற வேறுபாடுகளைக் களைந்து எல்லாவற்றிலும் சமத்துவத்தை விரும்ப வேண்டும்.

13. பதின்மூன்றாம் படி:

ஷேத்ரக்ஞ விபாக யோகம். எல்லா உயிர்களிலும் வீற்றிருந்து ஆண்டவனே அவர்களை இயக்குகிறார் என்பதை உணர்ந்திட வேண்டும்.

14. பதினான்காம் படி:

குணத்ர விபாக யோகம். பிறப்பு, இறப்பு, மூப்பு ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்களை அகற்றி, இறைவனின் முழு அருளுக்கு பாத்திரமாகிட வேண்டும்.

15. பதினைந்தாம் படி:

தெய்வாசுர விபாக யோகம். தீய குணங்களை ஒழித்து, நல்ல குணங்களை மட்டும் வளர்த்துக் கொண்டு, நம்மிடம் தெய்வாம்சத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.

16. பதினாறாம் படி:

சம்பத் விபாக யோகம். இறைவன் படைப்பில் எல்லோரும் சமம் என்று உணர்ந்து, அகங்காரம் வராமல் கவனமுடன் இருந்திட வேண்டும்.

17. பதினேழாம் படி:

சிரித்தாத்ரய விபாக யோகம். சர்வம் பிரம்ம மயம் என்று உணர்ந்து பரப்பிரம்ம ஞானத்தை பெற்றிட வேண்டும்.

18. பதினெட்டாம் படி:

மோட்ச சன்யாச யோகம். யாரிடமும் எந்த உயிர்களிடமும் பேதம் பார்க்காமல், உன்னையே சரணாகதி அடைகிறேன் என்று இறைவன் சன்னதியில் வீழ்ந்தால், அவன் அருள் செய்வான் என்று ஆண்டவனையே முழுமையாகச் சரணடைந்திட வேண்டும்.

ஐயப்பனின் கோயிலின் முன்புள்ள பதினெட்டுப் படிகள் உணர்த்தும் தத்துவத்தை உணர்ந்து, நம் மனித வாழ்க்கையைப் படிப்படியாக உயர்த்திச் சென்றால் இறைவனை அடையமுடியும் என்று நாம் உணர்ந்து செல்ல வேண்டும்

செவ்வாய், 23 டிசம்பர், 2014

சபரிமலை தரிசனம்




சபரிமலையில் செய்ய வேண்டிய வழிபாடுகள்" 
1. இரு முடியுடன் 18 படி ஏறுதல்.
2. நெய் அபிஷேகம்.
3. கொடி மரத்தையும் கணபதி, நாகராஜாவையும் வணங்குதல்.
4. நைவேத்தியப் பொருட்களை ஐயப்பனுக்குச் சமர்ப்பித்தல் (கற்பூர ஆழி எடுத்தல்)
5. ஐயப்ப தரிசனம்
6. மஞ்சமாதா தரிசனம்
7. மலைநடை பகவதி நவக்கிரக வழிபாடு
8. கடுத்த சாமிக்குப் பிரார்த்தனை
9. கருப்பசாமிக்குப் பிரார்த்தனை
10. நாகராஜா, நாகயட்சிக்குப் பிரார்த்தனை.
11. வாபர் சாமிக்கு காணிக்கை செலுத்துதல்.
12. திருவாபரணம் பெட்டி தரிசனம்
13. ஜோதி தரிசனம்
14. பஸ்ம குளத்தில் குளித்தல்
15. மகர விளக்கு தரிசனம் 16.பிரசாதம் பெற்றுக் கொள்ளுதல் (அரவனை, பாயசம், அப்பம் உள்பட)
17. தந்திரி, மேல் சாந்திகளை வணங்குதல்18.
18 படி இறங்குதல்.- இவை மகரஜோதி சமயம் செல்பவர்களுக்கு உள்ள நியதிகளாகும். மற்றவர்கள் மகரஜோதி தரிசனம் திருவாபரணம் பெட்டி தரிசனம் தவிர மற்றவற்றை செய்யலாம்..

குலதெய்வங்கள் என்றால் என்ன?



குலதெய்வங்கள் என்றால் என்ன? அவர்களின் பெருமை என்ன?
**************************************************************************************

குலதெய்வம் விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகின்றது...? என்பவைகளை பற்றி.

சற்று விரிவாக ஆராயலாம்...வாருங்கள் !!!!!

நம் முன்னோர்கள் அதாவது நம் தந்தை வழி பாட்டன் பாட்டிமார்கள் வணங்கி வந்த தெய்வம் தான் நம்குல தெய்வமாகும். இந்த தந்தை வழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்துகவனித்தால் உணரலாம். அதுதான்‘ கோத்திரம்’ என்னும் ஒரு ரிஷியின் வழிவழிப் பாதை.

பிற கோத்திரத்தில் இருந்து பெண்கள் வந்து இந்த வழிவழி பாதையில் நம் தாத்தாக்களின் வாழ்க்கை துணையாக கை பிடித்திருப்பார்கள். எக்காரணம் கொண்டும் ஒரே கோத்திரத்தில் பெண் சம்பந்தம் ஏற்பட்டிருக்காது. இதனால், ரிஷி பரம்பரையானது சங்கிலி கண்ணி போல அறுடாமல், ஒரே சகோதரத்துவத்தோடு வந்த வண்ணம் இருக்கும். இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும்.

இந்த உலகத்தில் ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன.அந்த கோயில்களுக்கு அவர்கள் போயிருக்கலாம் போகாமலும் இருக்கலாம். அதற்கு உத்தரவாதமில்லை. ஆனால், குலதெய்வ கோயிலுக்கு, நாம் பக்தி என்கிற ஒன்றை அறிவதற்கு முன்பே, நம் தாய் தந்தையரால் அங்கு கொண்டு செல்லப்பட்டு, முடி காணிக்கை என்ற முதல் மொட்டை மற்றும் காதுகுத்து என்று தொடர்ந்து வணங்க வைக்கவும் படுகிறோம். இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம்.

இந்த வரிசை தொடர்பை வேறு எங்காவது, எந்த விதத்திலாவது உருவாக்க முடியுமா?அது மட்டுமல்ல. ஒரு மனிதனின் பிறப்புக்கு பின்னே இப்படியொரு பரம்பரை வரிசை இருப்பதை நினைக்க கூட தெரியாமல், அதிகபட்சம் இரு பாட்டன் பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா நம் வாழ்க்கைப்போக்கு உள்ளது?

இந்த வழி வழி போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாக புண்ணியத்தை கட்டியிருக்கலாம். இன்னொருவர் பாவமே கூட பண்ணியிருக்கட்டுமே! நாம் அங்கே போய் நின்று நம் பொருட்டு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த சக்தியை தொழும் போது, நம் முன்னோர்களும் பித்ருக்களாக இருந்து நம்மை ஆசிர்வாதிக்கிறார்கள். இது எத்தனை தூரப்பார்வையோடு, வடிவமைக்கப்பட்டஒரு விஷயம்?”

குலதெய்வம்

குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வமே நமக்கு எளிதில்
அருளினை தரும். மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும். குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். ஆனால் அதன் சக்தியை அளவிடமுடியாது. சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது. எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்கமுடியும்.

குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும். அந்த புனித ஆத்மாக்கள் தங்களின்குலத்தினை
சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை. எனவே தான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன. குலதெய்வங்களும் கர்மவினைகளை நீக்க வல்லவை. யாருக்கு கர்மவினைகள் மிக அதிகமாக இருக்கிறதோ அவருக்கு குலதெய்வமே தெரியாமல் போவதும் உண்டு.

நம் குடும்பத்தை பற்றி அறிய யாரிடம் குறிகேட்க சென்றாலும் குறிசொல்பவர் நம்குல தெய்வத்தை அழைத்து அதனிடம் கேட்டே நம்மை பற்றிய விபரத்தை சொல்ல முடியுமே தவிர அவரால் தன்னிச்சையாக எதையும் சொல்ல முடியாது. இதை உணர்ந்த மந்திரவாதிகள் ஒருவருக்கு செய்வினை செய்யும்காலத்தில் யாருக்கு செய்வினை செய்ய இருக்கிறாரோ
அவரது குல தெய்வத்தினை மந்திர கட்டு மூலம் கட்டுப்படுத்தி விட்ட பின்பே தான் செய்வினை செய்வார். மந்திரவாதிகள் தாங்கள் வசப்படுத்திய தேவதைகளின் மூலம் மற்றவர்களின் குலதெய்வத்தின் விபரங்களைஎளிதில் பெற்று விடுகிறார்கள். மந்திர கட்டுகளுக்கு கட்டுப்படாத குலதெய்வங்களும் உண்டு. அவை அந்த மந்திரவாதிகளை அழித்தவரலாறும் உண்டு.

குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும். அந்த புனித ஆத்மாக்கள் தங்களின்குலத்தினை
சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை. எனவே தான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன. குலதெய்வங்களும் கர்மவினைகளை நீக்க வல்லவை. யாருக்கு கர்மவினைகள் மிக அதிகமாக இருக்கிறதோ அவருக்கு குலதெய்வமே தெரியாமல் போவதும் உண்டு.

பொதுவாக பெண்கள் மட்டும் இரண்டு குல தெய்வங்களை வணங்குபவர்களாக இறைவன் படைத்திருக்கிறான். பிறந்த வீட்டில் ஒரு தெய்வம் புகுந்த வீட்டில் ஒரு தெய்வம். திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குபவர்கள் திருமணம் முடிந்தவுடன் கணவனின் வீட்டில் உள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள். பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குவதுகிடையாது.

பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வருடத்திற்கு ஒரு முறை செய்யும் வழிபாடு அவர்களை ஆண்டு முழுவதும் காப்பாற்றும். புகுந்த வீட்டில் எந்த பிரச்சினையும் சமாளிக்ககூடிய ஒரு ஆற்றலை தரும். இதுவரை யாரும் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வழிபாடு செய்யாமல் இருந்தால் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு திரு விழாகாலங்களில் வழிப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.

ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து அருகுபோல வேரூன்ற வேண்டுமனால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம். குலதெய்வதோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான். எனவே உங்கள் குலதெய்வத்தின் கோவிலுக்கு அடிக்கடி (குறைந்தது வருடம் ஒரு முறையாவது) செல்லுங்கள். அபிஷேக ஆராதனைகள் செய்யுங்கள். அக்கோவிலுக்கு உதவுங்கள். பூஜைகள் நடைபெற ஏற்பாடு செய்யுங்கள். பிறகு பாருங்கள் உங்கள் வாழ்க்கைபோகும் போக்கை…

அடிப்படையில் இந்துமதம் பற்றற்ற தன்மையை போதிக்கிறது, அதாவது அனைத்தையும் துறந்து தியானம், தவம் மூலம் இறை நிலையை அடைவது. ஆனால் இந்த குலதெய்வம் மனிதன் லௌகீக வாழ்க்கைக்கு தேவையான பலன்களை அளிக்கிறது

எந்த ஒரு வம்சத்திலுமே 13 வம்சாவளியினருக்கு மேல் அவர்கள் தொடர்ந்து வணங்கும் குல தெய்வம் இருக்க முடியாது என்பது தெய்வக்கணக்கு. ஏதாவது ஒரு கட்டத்தில் வழி வழியாக வந்தவர்களின் வம்சத்தினருக்கு குழந்தை பேறு இல்லாமலோ, அகால மரணங்களினாலோ, ஆண் வம்ச விருத்தி அடையாமலோ அல்லது ஏதாவது காரணத்தினால் வம்சம் அழிந்து விடும். ஆகவே ஒரு வம்சத்தின் குலதெய்வம் என்பது 13 வம்சாவளிகளுக்கு மட்டுமே தொடர்ந்து கொண்டு இருக்கும்.

விஞ்ஞான ரீதியிலேயே இதற்கான பதிலைக் காண்போமா.....?

விஞ்ஞான முறையில் யோசித்தால் ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு செய்வது ஆணே. ஒவ்வொரு குழந்தைக்கும் 23+23 க்ரொமொசோம்கள் உள்ளன என்பதை அறிவோம். இது தாய் மூலம் 23 தந்தை மூலம் 23 என்பதையும் அறிவோம். இதிலே பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தந்தையின் க்ரொமொசொமே முடிவு செய்கிறது. தாயிடம் xx க்ரோமோசோம்கள் மட்டுமே இருக்கின்றன. தந்தைக்கோ, xy என இருவிதமான மாறுபட்ட க்ரோமோசோம்கள் உள்ளன. ஆணின் y யுடன் பெண்ணின் x சேர்ந்தால் ஆண் குழந்தையும் இருவரின் x+x சேர்ந்தால் பெண் குழந்தையும் பிறக்கின்றது என்பதை விஞ்ஞானம் அறுதியிட்டுக் கூறி உள்ளது.

ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்யக் கூடாது என்பதன் காரணமும் இதை ஒட்டியே. ஒரே கோத்திரத்தில் பிறந்த பெண்ணோ, ஆணோ ஒருவரை ஒருவர் அறியாதவர்களாகவே இருந்தாலும் அவர்கள் சகோதர, சகோதரியாகவே கருதப் படுகிறார்கள் என்பதை நம் சனாதன தர்மம் திட்டவட்டமாய்க் கூறும். ஏனெனில் பெண் குழந்தையை உருவாக்கும் x க்ரோமோசோம் இருவரிடமும் இருக்கையில் ஆண் குழந்தையை உருவாக்கும் y க்ரோமோசோம் மட்டும் ஆணிடம் தான் உள்ளது. பெண்ணிற்கு y க்ரோமோசோம்கள் தந்தை வழி வருவதில்லை. ஆனால் அதே ஆண் குழந்தைக்குத் தந்தையிடம் இருந்து y க்ரோமோசோம்கள் வருகின்றன. ஏனெனில் அவன் மூலம் தான் வம்சம் மீண்டும் வளரப் போகின்றது வழி வழியாக.

வழிவழியாக என்பதில் இருந்தே புரிந்திருக்க வேண்டுமே, முப்பாட்டனார், பாட்டனார், மகன், பேரன், கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன் எனத் தொடர்ந்து இது ஒவ்வொருவரிடமும் விதைக்கப்பட்டுத் தொடர்ந்து காப்பாற்றப் பட்டு வருகின்றது. இதன் முக்கியத்துவம் குறித்து அறிந்தே நம் முன்னோர்கள் ஆண் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளித்திருக்கின்றனர்.

இதே முப்பாட்டி, பாட்டி, மகள், பேத்தி, கொள்ளுப்பேத்தி, எள்ளுப்பேத்தி என x க்ரோமோசோம்கள் வழி வழியாக வருவதில்லை. தன் தாயிடம் இருந்தும், தந்தையிடம் இருந்தும் x க்ரோமோசோம்கள் மகளுக்குக் கிடைக்கின்றது. ஆனால் இயற்கையின் மாபெரும் அதிசயமாக y க்ரோமோசோம்கள் பெண்களுக்குக் கடத்தப்படுவதில்லை என்பதோடு தந்தையிடம் இருந்து மகன் பெறுவதும் அவன் பரம்பரையின் y க்ரோமோசொம்கள் மட்டுமே.

ஒரு ஆணால் மட்டுமே இந்த y க்ரோமோசோம்களைத் தன் மகனுக்கு அளிக்க முடிகிறது. பெண்ணிற்கோ எனில் ஆணின் y க்ரோமோசோம்கள் கிடைப்பதில்லை. ஆணின் y க்ரோமோசோம்கள் ரொம்பவே பலவீனமான ஒன்று. மேலும் தொடர்ந்து காலம் காலமாக இந்த y க்ரோமோசோம்கள் அவரவர் பரம்பரை ஆண் மக்களுக்குச் சென்று கொண்டிருப்பதால் இன்னமும் பலவீனம் ஆகிக் கொண்டிருக்கிறதாம். 13 தலைமுறைக்கு மேல் அது வலுவிழந்து பயனற்று போய்விடும். அதனால் ஆண் வாரிசு ஏற்பட வாய்ப்பு இல்லை. மேலும் ஏற்கெனவே பலவீனமான y க்ரோமோசோம்கள் மேலும் பலவீனம் அடைய கூடாது என்பதாலும், பரம்பரை நோய்கள் தொடர கூடாது என்பதாலுமே சொந்த ரத்த உறவுகளுக்கிடையே திருமணம் தவிர்க்கப்படுகிறது
நண்பர்களுக்கு என் இனிய காலை வணக்கங்கள். இன்றைய பதிவில் நாம் பகிர்ந்துகொள்ள போவது குலதெய்வங்கள் என்றால் என்ன ....? அவர்களின் பெருமை என்ன...? குலதெய்வம் விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகின்றது...? என்பவைகளை பற்றி. சற்று விரிவாக ஆராயலாம்...வாருங்கள் !!!!! நம் முன்னோர்கள் அதாவது நம் தந்தை வழி பாட்டன் பாட்டிமார்கள் வணங்கி வந்த தெய்வம் தான் நம்குல தெய்வமாகும். இந்த தந்தை வழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்துகவனித்தால் உணரலாம். அதுதான்‘ கோத்திரம்’ என்னும் ஒரு ரிஷியின் வழிவழிப் பாதை. பிற கோத்திரத்தில் இருந்து பெண்கள் வந்து இந்த வழிவழி பாதையில் நம் தாத்தாக்களின் வாழ்க்கை துணையாக கை பிடித்திருப்பார்கள். எக்காரணம் கொண்டும் ஒரே கோத்திரத்தில் பெண் சம்பந்தம் ஏற்பட்டிருக்காது. இதனால், ரிஷி பரம்பரையானது சங்கிலி கண்ணி போல அறுடாமல், ஒரே சகோதரத்துவத்தோடு வந்த வண்ணம் இருக்கும். இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும். இந்த உலகத்தில் ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன.அந்த கோயில்களுக்கு அவர்கள் போயிருக்கலாம் போகாமலும் இருக்கலாம். அதற்கு உத்தரவாதமில்லை. ஆனால், குலதெய்வ கோயிலுக்கு, நாம் பக்தி என்கிற ஒன்றை அறிவதற்கு முன்பே, நம் தாய் தந்தையரால் அங்கு கொண்டு செல்லப்பட்டு, முடி காணிக்கை என்ற முதல் மொட்டை மற்றும் காதுகுத்து என்று தொடர்ந்து வணங்க வைக்கவும் படுகிறோம். இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம். இந்த வரிசை தொடர்பை வேறு எங்காவது, எந்த விதத்திலாவது உருவாக்க முடியுமா?அது மட்டுமல்ல. ஒரு மனிதனின் பிறப்புக்கு பின்னே இப்படியொரு பரம்பரை வரிசை இருப்பதை நினைக்க கூட தெரியாமல், அதிகபட்சம் இரு பாட்டன் பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா நம் வாழ்க்கைப்போக்கு உள்ளது? இந்த வழி வழி போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாக புண்ணியத்தை கட்டியிருக்கலாம். இன்னொருவர் பாவமே கூட பண்ணியிருக்கட்டுமே! நாம் அங்கே போய் நின்று நம் பொருட்டு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த சக்தியை தொழும் போது, நம் முன்னோர்களும் பித்ருக்களாக இருந்து நம்மை ஆசிர்வாதிக்கிறார்கள். இது எத்தனை தூரப்பார்வையோடு, வடிவமைக்கப்பட்டஒரு விஷயம்?” குலதெய்வம் குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினை தரும். மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும். குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். ஆனால் அதன் சக்தியை அளவிடமுடியாது. சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது. எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்கமுடியும். குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும். அந்த புனித ஆத்மாக்கள் தங்களின்குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை. எனவே தான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன. குலதெய்வங்களும் கர்மவினைகளை நீக்க வல்லவை. யாருக்கு கர்மவினைகள் மிக அதிகமாக இருக்கிறதோ அவருக்கு குலதெய்வமே தெரியாமல் போவதும் உண்டு. நம் குடும்பத்தை பற்றி அறிய யாரிடம் குறிகேட்க சென்றாலும் குறிசொல்பவர் நம்குல தெய்வத்தை அழைத்து அதனிடம் கேட்டே நம்மை பற்றிய விபரத்தை சொல்ல முடியுமே தவிர அவரால் தன்னிச்சையாக எதையும் சொல்ல முடியாது. இதை உணர்ந்த மந்திரவாதிகள் ஒருவருக்கு செய்வினை செய்யும்காலத்தில் யாருக்கு செய்வினை செய்ய இருக்கிறாரோ அவரது குல தெய்வத்தினை மந்திர கட்டு மூலம் கட்டுப்படுத்தி விட்ட பின்பே தான் செய்வினை செய்வார். மந்திரவாதிகள் தாங்கள் வசப்படுத்திய தேவதைகளின் மூலம் மற்றவர்களின் குலதெய்வத்தின் விபரங்களைஎளிதில் பெற்று விடுகிறார்கள். மந்திர கட்டுகளுக்கு கட்டுப்படாத குலதெய்வங்களும் உண்டு. அவை அந்த மந்திரவாதிகளை அழித்தவரலாறும் உண்டு. குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும். அந்த புனித ஆத்மாக்கள் தங்களின்குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை. எனவே தான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன. குலதெய்வங்களும் கர்மவினைகளை நீக்க வல்லவை. யாருக்கு கர்மவினைகள் மிக அதிகமாக இருக்கிறதோ அவருக்கு குலதெய்வமே தெரியாமல் போவதும் உண்டு. பொதுவாக பெண்கள் மட்டும் இரண்டு குல தெய்வங்களை வணங்குபவர்களாக இறைவன் படைத்திருக்கிறான். பிறந்த வீட்டில் ஒரு தெய்வம் புகுந்த வீட்டில் ஒரு தெய்வம். திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குபவர்கள் திருமணம் முடிந்தவுடன் கணவனின் வீட்டில் உள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள். பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குவதுகிடையாது. பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வருடத்திற்கு ஒரு முறை செய்யும் வழிபாடு அவர்களை ஆண்டு முழுவதும் காப்பாற்றும். புகுந்த வீட்டில் எந்த பிரச்சினையும் சமாளிக்ககூடிய ஒரு ஆற்றலை தரும். இதுவரை யாரும் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வழிபாடு செய்யாமல் இருந்தால் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு திரு விழாகாலங்களில் வழிப்பாட்டை மேற்கொள்ளுங்கள். ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து அருகுபோல வேரூன்ற வேண்டுமனால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம். குலதெய்வதோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான். எனவே உங்கள் குலதெய்வத்தின் கோவிலுக்கு அடிக்கடி (குறைந்தது வருடம் ஒரு முறையாவது) செல்லுங்கள். அபிஷேக ஆராதனைகள் செய்யுங்கள். அக்கோவிலுக்கு உதவுங்கள். பூஜைகள் நடைபெற ஏற்பாடு செய்யுங்கள். பிறகு பாருங்கள் உங்கள் வாழ்க்கைபோகும் போக்கை… அடிப்படையில் இந்துமதம் பற்றற்ற தன்மையை போதிக்கிறது, அதாவது அனைத்தையும் துறந்து தியானம், தவம் மூலம் இறை நிலையை அடைவது. ஆனால் இந்த குலதெய்வம் மனிதன் லௌகீக வாழ்க்கைக்கு தேவையான பலன்களை அளிக்கிறது எந்த ஒரு வம்சத்திலுமே 13 வம்சாவளியினருக்கு மேல் அவர்கள் தொடர்ந்து வணங்கும் குல தெய்வம் இருக்க முடியாது என்பது தெய்வக்கணக்கு. ஏதாவது ஒரு கட்டத்தில் வழி வழியாக வந்தவர்களின் வம்சத்தினருக்கு குழந்தை பேறு இல்லாமலோ, அகால மரணங்களினாலோ, ஆண் வம்ச விருத்தி அடையாமலோ அல்லது ஏதாவது காரணத்தினால் வம்சம் அழிந்து விடும். ஆகவே ஒரு வம்சத்தின் குலதெய்வம் என்பது 13 வம்சாவளிகளுக்கு மட்டுமே தொடர்ந்து கொண்டு இருக்கும். விஞ்ஞான ரீதியிலேயே இதற்கான பதிலைக் காண்போமா.....? விஞ்ஞான முறையில் யோசித்தால் ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு செய்வது ஆணே. ஒவ்வொரு குழந்தைக்கும் 23+23 க்ரொமொசோம்கள் உள்ளன என்பதை அறிவோம். இது தாய் மூலம் 23 தந்தை மூலம் 23 என்பதையும் அறிவோம். இதிலே பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தந்தையின் க்ரொமொசொமே முடிவு செய்கிறது. தாயிடம் xx க்ரோமோசோம்கள் மட்டுமே இருக்கின்றன. தந்தைக்கோ, xy என இருவிதமான மாறுபட்ட க்ரோமோசோம்கள் உள்ளன. ஆணின் y யுடன் பெண்ணின் x சேர்ந்தால் ஆண் குழந்தையும் இருவரின் x+x சேர்ந்தால் பெண் குழந்தையும் பிறக்கின்றது என்பதை விஞ்ஞானம் அறுதியிட்டுக் கூறி உள்ளது. ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்யக் கூடாது என்பதன் காரணமும் இதை ஒட்டியே. ஒரே கோத்திரத்தில் பிறந்த பெண்ணோ, ஆணோ ஒருவரை ஒருவர் அறியாதவர்களாகவே இருந்தாலும் அவர்கள் சகோதர, சகோதரியாகவே கருதப் படுகிறார்கள் என்பதை நம் சனாதன தர்மம் திட்டவட்டமாய்க் கூறும். ஏனெனில் பெண் குழந்தையை உருவாக்கும் x க்ரோமோசோம் இருவரிடமும் இருக்கையில் ஆண் குழந்தையை உருவாக்கும் y க்ரோமோசோம் மட்டும் ஆணிடம் தான் உள்ளது. பெண்ணிற்கு y க்ரோமோசோம்கள் தந்தை வழி வருவதில்லை. ஆனால் அதே ஆண் குழந்தைக்குத் தந்தையிடம் இருந்து y க்ரோமோசோம்கள் வருகின்றன. ஏனெனில் அவன் மூலம் தான் வம்சம் மீண்டும் வளரப் போகின்றது வழி வழியாக. வழிவழியாக என்பதில் இருந்தே புரிந்திருக்க வேண்டுமே, முப்பாட்டனார், பாட்டனார், மகன், பேரன், கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன் எனத் தொடர்ந்து இது ஒவ்வொருவரிடமும் விதைக்கப்பட்டுத் தொடர்ந்து காப்பாற்றப் பட்டு வருகின்றது. இதன் முக்கியத்துவம் குறித்து அறிந்தே நம் முன்னோர்கள் ஆண் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளித்திருக்கின்றனர். இதே முப்பாட்டி, பாட்டி, மகள், பேத்தி, கொள்ளுப்பேத்தி, எள்ளுப்பேத்தி என x க்ரோமோசோம்கள் வழி வழியாக வருவதில்லை. தன் தாயிடம் இருந்தும், தந்தையிடம் இருந்தும் x க்ரோமோசோம்கள் மகளுக்குக் கிடைக்கின்றது. ஆனால் இயற்கையின் மாபெரும் அதிசயமாக y க்ரோமோசோம்கள் பெண்களுக்குக் கடத்தப்படுவதில்லை என்பதோடு தந்தையிடம் இருந்து மகன் பெறுவதும் அவன் பரம்பரையின் y க்ரோமோசொம்கள் மட்டுமே. ஒரு ஆணால் மட்டுமே இந்த y க்ரோமோசோம்களைத் தன் மகனுக்கு அளிக்க முடிகிறது. பெண்ணிற்கோ எனில் ஆணின் y க்ரோமோசோம்கள் கிடைப்பதில்லை. ஆணின் y க்ரோமோசோம்கள் ரொம்பவே பலவீனமான ஒன்று. மேலும் தொடர்ந்து காலம் காலமாக இந்த y க்ரோமோசோம்கள் அவரவர் பரம்பரை ஆண் மக்களுக்குச் சென்று கொண்டிருப்பதால் இன்னமும் பலவீனம் ஆகிக் கொண்டிருக்கிறதாம். 13 தலைமுறைக்கு மேல் அது வலுவிழந்து பயனற்று போய்விடும். அதனால் ஆண் வாரிசு ஏற்பட வாய்ப்பு இல்லை. மேலும் ஏற்கெனவே பலவீனமான y க்ரோமோசோம்கள் மேலும் பலவீனம் அடைய கூடாது என்பதாலும், பரம்பரை நோய்கள் தொடர கூடாது என்பதாலுமே சொந்த ரத்த உறவுகளுக்கிடையே திருமணம் தவிர்க்கப்படுகிறது

ஞாயிறு, 21 டிசம்பர், 2014

சுந்தரகாண்டம்




சுந்தரகாண்டம்
,
படிப்பதால் ஏற்படும், கற்பனைக்கும் எட்டாத 

நன்மைகள்!


************************************************

1. ஒரே நாளில் சுந்தர காண்டம் 


முழுவதையும் 

படிப்பதன் பெருமையை ஆயிரம் நாக்குகள் 

படைத்த ஆதிசேஷனால் கூட விவரிக்க 

முடியாது என்று உமாசம்ஹிதையில் 

பரமேஸ்வரன் கூறியுள்ளார்.


2. காஞ்சி பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர 


சுவாமிகளிடம் ஒரு சமயம் ஒருவர் வயிற்று 

வலியால் தான் மிகவும் கஷ்டப்படுவதாகவும், 

எந்த டாக்டராலும் அதை குணப்படுத்த 

இயலவில்லை என்றார். உடனே காஞ்சி 

பெரியவர் சுந்தரகாண்டத்தை தினமும் 

சாப்பிடும் முன் படி என்றார். அதன்படி அந்த 

நபர் பாராயணம் செய்து வர அவருக்கு 

வயிற்று வலி பறந்து போய் விட்டது.


3. சுந்தரகாண்டத்தில் உள்ள ஒவ்வொரு 


சர்க்கமும் மாபெரும் மந்திர சக்திகளுக்கு 

இணையானது என்று ஆன்மிக பெரியவர்கள் 

கூறியுள்ளனர்.


4. சுந்தரகாண்டத்தை நாம் எந்த அளவுக்கு 


படிக்கிறோமோ அந்த அளவுக்கு பகவானை 

நெருங்குகிறோம் என்று அர்த்தம்.

5. சுந்தரகாண்டத்தை ஆத்மார்த்தமாக படித்து 

வந்தால் வாழ்க்கையில் உள்ள துக்கங்கள் 

முடிவுக்கு வந்து விடும்.


6. சுந்தரகாண்டம் வாசித்தால் வாழ்வு வளம் 


பெறும். கஷ்டங்கள் தொலைந்து போகும்.


7. சுந்தர காண்டத்தை தொடர்ந்து வாசித்து 


வந்தால், வாசிக்க, வாசிக்க மன வலிமை 

உண்டாகும்.


8. சுந்தரகாண்டத்தை முறைப்படி வாசித்தால் 


காலதாமதமான திருமணம் விரைவில் கை 

கூடும். கவலைகள் மறந்து போய் விடும்.

9. சுந்தரகாண்டம் படித்து அனுமனை 

வழிபட்டு 

வந்தால் அறிவு, ஆற்றல், புகழ், குறிக்கோளை 

எட்டும் திறமை, துணிச்சல், ஆரோக்கியம், 

விழிப்புணர்வு, வாக்கு சாதூரியம் 

போன்றவற்றைப் பெறலாம்.


10. சுந்தரகாண்டத்தை மனம் உருகி படித்தால் 


பாவம் தீரும். முடியாத செயல்கள் முடிந்து 

விடும்.


11. ஆஞ்சநேயருக்கு வடை வெண்ணை 


வைத்து நெய்தீபம் ஏற்றி சுந்தரகாண்டம் 

படித்து வந்தால் குழந்தை பாக்கியம் 

உண்டாகும்.


12. ராம நவமியன்று விரதம் இருந்து 


ராமருக்கு 

துளசி மாலை அணிவித்து சுந்தரகாண்டம் 

படித்து வந்தால் வாழ்வில் அமைதி பெறலாம்.


13. ராமனுடன் மறுபடியும் வாழ முடியும் என்ற 


நம்பிக்கையை சீதைக்கு கொடுத்து 

சுந்தரகாண்டம்தான். எனவேதான் கருவுற்ற 

தாய்மார்கள் சுந்தரகாண்டம் படிக்க 

வேண்டும் 

என்கிறார்கள்.


14. ஏழரை சனி, அஷ்டமத்து சனி திசை 


நடப்பவர்கள் தினமும் சுந்தரகாண்டம் படித்து 

வந்தால் துன்பங்களில் இருந்து விடுபடலாம்.

15. சுந்தரகாண்டத்தில் அனுமன் கடலைத் 

தாண்டுவதற்கு முன்பு சொன்ன 

ஸ்லோகத்துக்கு “ஜெய பஞ்சகம்” என்று 

பெயர். இதை சொல்லி வந்தால் வீட்டில் 

செல்வம் பெருகும்.


16. சுந்தரகாண்டத்தில் அனுமன் சீதையை 


கண்டுபிடிக்க அசோக வனத்துக்கு செல்லும் 

முன்பு கூறிய ஸ்லோகத்தை கூறி வந்தால் 

வெற்றி மீது வெற்றி உண்டாகும்.


17. சுந்தரகாண்டத்தை நீண்ட நாட்களாக 


பாராயணம் செய்பவர்களை விட்டு நவக்கிரக 

தோஷங்கள் முற்றிலும் அகலும்.


18. சுந்தரகாண்டம் என்று பெயர் 


சொல்லுவார். 

இதை சுகம் தரும் சொர்க்கம் என்பார்கள்.


19. சுந்தர காண்டம் படிப்பதன் மூலம் வேதம் 


சொல்லிய புண்ணியத்தை பெண்கள் பெற 

முடியும்.


20. ராமாயணத்தில் மொத்தம் 24 ஆயிரம் 


சுலோகங்கள் உள்ளன. இதில் 2885 

சுலோகங்கள் சுந்தரகாண்டத்தில் இருக்கிறது.


21. சுந்தரகாண்டத்தை எவர் ஒருவர் ஆழமாக 


படிக்கிறாரோ, அவருக்கு தனது உண்மையான 

சொரூபத்தை உணரும் ஆற்றல் கிடைக்கும்.


22. சுந்தரகாண்ட பாராயணம் நமது 


ஊழ்வினையால் ஏற்படும் நிம்மதி 

சீர்குலைவை சரி செய்து விடும்.


23. சுந்தரகாண்டத்தை நேரம் கிடைக்கும் 


போதெல்லாம் படித்தால் மனம் லேசாகி 

விடும்.


24. சுந்தரகாண்டத்தில் 42-ம் சர்க்கத்தில் 33-


வது 

ஸ்லோகம் முதல் 37-வது ஸ்லோகம் வரை 

உள்ள ஸ்ரீஜெயபஞ்சகம் ஸ்லோகத்தை 

பாராயணம் செய்வதால் உடனே திருமணம் 

கைகூடும்.


25. ராமநவமியன்று ராகவேந்திர சுவாமிகள் 


இயற்றிய சுந்தரகாண்ட சுலோகம் கூறினால் 

மன தைரியம் உண்டாகும்.


26. ஒரு பெண் கருத்தரித்த நாள் முதல் 9 


மாதம் 

வரை நாள் தவறாமல் சுந்தரகாண்டம் படித்து 

வந்தால் சுகப் பிரசவம் உண்டாகி குழந்தை 

ஆரோக்கியத்துடன் பிறக்கும் என்பது ஐதீகம்.


27. கர்ப்பிணிகள் குறைந்த பட்சம் 5-வது 


மாதத்தில் இருந்து சுந்தரகாண்டம் படித்து 

வந்தால், பிறக்கும் குழந்தை ஆன்மிக 

சிந்தனை உள்ள குழந்தையாக பிறக்கும்.


28. சுந்தரகாண்டத்தை ஆத்மார்த்தமாக 


படித்தால்தான் அதன் முழு பலனும் 

கிடைக்கும்.


29. சுந்தரகாண்டம் மிகவும் வலிமையானது. 


அதை வாசிப்பவர்களுக்கும் வலிமை 

தரக்கூடியது.


30. சுந்தரகாண்டம் படிக்கும் நாட்களில் 


உறுதியாக அசைவ உணவுகளை தவிர்க்க 

வேண்டும். வீட்டிலும் அசைவ உணவு 

தயாரிக்கக் கூடாது.


31. சுந்தரகாண்டத்தில் காயத்திரி மந்திரத்தின் 


அளவற்ற சக்தி உள்ளதாக கருதப்படுகிறது.



33. பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து, 

அந்த அறை முன்பு அமர்ந்து சுந்தரகாண்டம் 

படிப்பது மிகவும் நல்லது.


34. சுந்தரகாண்டத்தை காலை, மாலை இரு 


நேரமும் படிக்கலாம்.


35. சுந்தரகாண்டத்தை படிக்கத் 


தொடங்கினால் ஒருநாள் கூட இடைவெளி 

விடாமல் படிக்க வேண்டும்.


36. பெண்கள் வீட்டுக்கு தூரமாக இருக்கும் 


நாட்களில் சுந்தரகாண்டம் படிக்கக் கூடாது.


37. சுந்தரகாண்டத்தின் ஒவ்வொரு 


சர்க்கத்துக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. 

அதை அறிந்து படித்தால் மிக எளிதாக பலன் 

பெறலாம்.


38. சுந்தரகாண்டத்தை முழுமையாக படித்து 


முடித்ததும் ஆஞ்சநேயரை வழிபட்டு, 

ஏழைகளுக்கு உதவி செய்தால் அளவில்லா 

புண்ணியம் கிடைக்கும்.


39. வசதி, வாய்ப்புள்ளவர்கள் சுந்தர காண்டம் 


படிக்கும் நாட்களில் ஆஞ்ச நேயருக்கு பிடித்த 

நைவேத்தியங்களை செய்து பயன்பெறலாம்.


40. சுந்தரகாண்டம் புத்தகத்தின் பதினோரு 


பிரதிகள் வாங்கி பதினோரு பேருக்கு படிக்க 

கொடுத்தால் யாகம் செய்ததற்கான பலன்கள் 

கிடைக்கும்.