Hindu லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Hindu லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 18 ஏப்ரல், 2015

27 stars காயத்ரி மந்திரங்கள்

27 stars காயத்ரி மந்திரங்கள் க்கான பட முடிவு



27 நட்சத்திரங்களில் பிறந்தோருக்கும் துன்பங்கள் தீர்க்கும் காயத்ரி மந்திரங்கள்

உங்கள் நட்சத்திர காயத்ரி மந்திரத்தை மனப்பாடம் செய்து தினமும் குறைந்தது 9 முறையாவது சொல்லுங்கள். வாழ்க்கையில் மிகச்சிறந்த முன்னேற்றம் காணலாம்.

அஸ்வினி
ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே சுதாகராயை தீமஹி தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத்
பரணி
ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே தண்டதராயை தீமஹி தன்னோ பரணி ப்ரசோதயாத்
கிருத்திகை
ஓம் வன்னிதேஹாயை வித்மஹே மஹாதபாயை தீமஹி தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத்
ரோஹிணி
ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே விச்வரூபாயை தீமஹி தன்னோ ரோஹினி ப்ரசோதயாத்
மிருகசீரிடம்
ஓம் சசிசேகராய வித்மஹே மஹாராஜாய தீமஹி தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத்
திருவாதிரை
ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே பசும்தநாய தீமஹி தன்னோ ஆர்த்ரா ப்ரசோதயாத்
புனர்பூசம்
ஓம் ப்ரஜாவ்ருத்யைச வித்மஹே அதிதிபுத்ராய த தீமஹி தன்னோ புனர்வஸு ப்ரசோதயாத்
பூசம்
ஓம் ப்ரம்ம்வர்ச்சஸாய வித்மஹே மஹா திஷ்யாய தீமஹி தன்னோ புஷ்ய ப்ரசோதயாத்
ஆயில்யம்
ஓம் ஸர்பராஜாய வித்மஹே மஹா ரோசனாய தீமஹி தன்னோ ஆச்லேஷ ப்ரசோதயாத்
மகம்
ஓம் மஹா அனகாய வித்மஹே பித்ரியா தேவாய தீமஹி தன்னோ மகஃப்ரசோதயாத்
பூரம்
ஓம் அரியம்நாய வித்மஹே பசுதேஹாய தீமஹி தன்னோ பூர்வபால்குநீ ப்ரசோதயாத்
உத்திரம்
ஓம் மஹாபகாயை வித்மஹே மஹாச்ரேஷ்டாயை தீமஹி தன்னோ உத்ரபால்குநீ ப்ரசோதயாத்
அஸ்தம்
ஓம் ப்ரயச்சதாயை வித்மஹே ப்ரக்ருப்ணீதாயை தீமஹி தன்னோ ஹஸ்தா ப்ரசோதயாத்
சித்திரை
ஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே ப்ரஜாரூபாயை தீமஹி தன்னோ சைத்ரா ப்ரசோதயாத்
சுவாதி
ஓம் காமசாராயை வித்மஹே மகாநிஷ்டாயை தீமஹி தன்னோ சுவாதி ப்ரசோதயாத்
விசாகம்
ஓம் இந்த்ராக்நௌச வித்மஹே மஹாச்ரேஷ்ட்யைச தீமஹி தன்னோ விசாகா ப்ரசோதயாத்
அனுஷம்
ஓம் மித்ரதேயாயை வித்மஹே மஹா மித்ராய தீமஹி தன்னோ அனுராதா ப்ரசோதயாத்
கேட்டை
ஓம் ஜயேஷ்டாயை வித்மஹே மகா ஜய்ஷ்ட்யாயை தீமஹி தன்னோ ஜ்யேஷ்டா ப்ரசோதயாத்
மூலம்
ஓம் ப்ராஜாதிபாயை வித்மஹே மஹப்ராஜையை தீமஹி தன்னோ மூலாப் ப்ரசோதயாத்
பூராடம்
ஓம் சமுத்ரகாமாயை வித்மஹே மஹாபிஜிதாயை தீமஹி தன்னோ பூர்வாஷாடா ப்ரசோதயாத்
உத்திராடம்
ஓம் விஸ்வேதேவாய வித்மஹே மஹா ஷாடாய தீமஹி தன்னோ உத்ராஷாடா ப்ரசோதயாத்
திருவோணம்
ஓம் மஹா ச்ரோணாய வித்மஹே புண்யஸ்லோகாய தீமஹி தன்னோ ச்ரோணா ப்ரசோதயாத்
அவிட்டம்
ஓம் அக்ர நாதாய வித்மஹே வசூபரீதாய தீமஹி தன்னோ சரவிஹ்டா ப்ரசோதயாத்
சதயம்
ஓம் பேஷஜயா வித்மஹே வருண தேஹா தீமஹி தன்னோ சதபிஷக் ப்ரசோதயாத்
பூரட்டாதி
ஓம் தேஜஸ்கராய வித்மஹே அஜஏகபாதாய தீமஹி தன்னோ பூர்வப்ரோஷ்டபத ப்ரசோதயாத்
உத்திரட்டாதி
ஓம் அஹிர் புத்ந்யாய வித்மஹே ப்ரதிஷ்டாபநாய தீமஹி தன்னோ உத்ரப்ப்ரோஷ்டபத ப்ரசோதயாத்
ரேவதி
ஓம் விச்வரூபாய வித்மஹே பூஷ்ண தேஹாய தீமஹி தன்னோ ரைய்வதி ப்ரசோதயாத்

செவ்வாய், 23 டிசம்பர், 2014

சபரிமலை தரிசனம்




சபரிமலையில் செய்ய வேண்டிய வழிபாடுகள்" 
1. இரு முடியுடன் 18 படி ஏறுதல்.
2. நெய் அபிஷேகம்.
3. கொடி மரத்தையும் கணபதி, நாகராஜாவையும் வணங்குதல்.
4. நைவேத்தியப் பொருட்களை ஐயப்பனுக்குச் சமர்ப்பித்தல் (கற்பூர ஆழி எடுத்தல்)
5. ஐயப்ப தரிசனம்
6. மஞ்சமாதா தரிசனம்
7. மலைநடை பகவதி நவக்கிரக வழிபாடு
8. கடுத்த சாமிக்குப் பிரார்த்தனை
9. கருப்பசாமிக்குப் பிரார்த்தனை
10. நாகராஜா, நாகயட்சிக்குப் பிரார்த்தனை.
11. வாபர் சாமிக்கு காணிக்கை செலுத்துதல்.
12. திருவாபரணம் பெட்டி தரிசனம்
13. ஜோதி தரிசனம்
14. பஸ்ம குளத்தில் குளித்தல்
15. மகர விளக்கு தரிசனம் 16.பிரசாதம் பெற்றுக் கொள்ளுதல் (அரவனை, பாயசம், அப்பம் உள்பட)
17. தந்திரி, மேல் சாந்திகளை வணங்குதல்18.
18 படி இறங்குதல்.- இவை மகரஜோதி சமயம் செல்பவர்களுக்கு உள்ள நியதிகளாகும். மற்றவர்கள் மகரஜோதி தரிசனம் திருவாபரணம் பெட்டி தரிசனம் தவிர மற்றவற்றை செய்யலாம்..

ஞாயிறு, 7 டிசம்பர், 2014

இதுவும் மதமாற்றம் தான்

இதுவும் மதமாற்றம் தான் 

 Kumar Kandasamy என்பவர் சொன்னது 

அச்சரப்பாக்கத்தில் நான் பணியாற்றிய பொழுது வழக்கமாக எனக்கு வரும் கார் டிரைவர் 
வரவில்லை. மறுநாள் தன் குழந்தை படிக்கும் ஒரு கிறிஸ்தவ பள்ளியில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வரமுடியவில்லை என்று கூறினார். விசாரித்த போது அவர் கூறிய
தகவல் அதிர்ச்சி ரகம்.


அச்சரப்பாக்கத்தை சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான குழந்தைகள் அந்த பள்ளியில் படித்து வருகின்றனர். பள்ளி பஸ்களில் காலையும் மாலையும் சென்று வருகின்றனர். புதிய சேர்க்கை முடிந்ததும் LKG UKG குழந்தைகள் மொத்தமாக தனி பஸ்ஸில் மாலை வீட்டுக்கு பள்ளி முடிந்ததும் அனுப்பபடுவார்கள். அவர்களுடன் ஒரு
கன்னியாஸ்திரியும் பயணிப்பார். பஸ் கொஞ்ச தூரம் சென்றவுடன் மக்கர் செய்து நின்று
விடும். பஸ் டிரைவர் ஸ்டார்ட் செய்ய முயற்சி செய்தும் பஸ் நகராது. பஸ்ஸில் பெரும்பாலான குழந்தைகள் இந்து குழந்தைகள். உடனே கன்னியாஸ்திரி இந்து குழந்தைகளை பார்த்து உங்கள் கடவுளை பிரார்த்தனை செய்யுங்கள் பஸ் கிளம்புகிறதா
பார்க்கலாம் என்று சொன்னவுடன் பிள்ளையாரையும் முருகனையும் பிரார்த்தனை செய்ய
பஸ் கிளம்பாது. 


இரண்டு மூன்று தடவைக்கு பிறகு அந்த கன்னியாஸ்திரி ஏசுவை
பிரார்த்தனை செய்ய சொல்வார். உடனே பஸ் கிளம்பிவிடும்.. குழந்தைகள் கை தட்டி ஆரவாரம் செய்ய இனிமேல் நீங்கள் ஏசுவையே கும்பிடுங்கள் ஏனெனில் அவர் தான் உண்மை கடவுள் என்பார். குழந்தைகளுக்கு தெரியுமா இது பஸ் டிரைவரும்
கன்னியாஸ்திரியும் சேர்ந்து நடத்தும் நாடகம் என்று.


 குழந்தைகள் ஏசு வழிபாட்டை
வீட்டிலும் தொடர பெற்றவர்கள் பேராட்டத்தில் இறங்க போலீஸ் தலையிட்டு பள்ளி
நிர்வாகம் கண்டிக்கப்பட்டது.
இளம் பிஞ்சுகள் மனதில் எப்படி நஞ்சை விதைக்கிறார்கள் என்று பாருங்கள்.