ஞாயிறு, 26 ஜூலை, 2015

ஸ்ரீ பைரவ வழிபாட்டு மகிமை



ஸ்ரீ பைரவ வழிபாட்டு மகிமை



நேரடியாக மோத முடியாத, மோத விரும்பாத எதிரிகளை - ஒழித்துக் கட்ட , எதிரிகளால் உங்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க , எதிரிகள் உங்களை நினைத்தாலே மிரள வைக்க , உங்களுக்கு தேவையான ஆன்ம பலம் அளிக்கும் இறை ரூபம் - ஸ்ரீ கால பைரவர்.

ஸ்ரீ பைரவ அவதாரம்

அந்தகாசுரன் என்னும் சிவபக்தன் நீண்ட வலிய தவம் புரிந்து, சிவ பெருமானிடம் வரம் பெற்றான்.அந்த வரத்தின் சக்தியால் மும்மூர்த்திகளையும்,மற்ற தேவர்களையும் துன்புறுத்தினான்.அவர்களை சேலை அணிந்து,கையில் வளையிட்டு,கண்ணில் மைதீட்டி,பெண் வேடத்தில் தனக்கு சாமரம் வீசி பணிபுரியச்செய்து,இழிவு படுத்தினான்.அந்தகாசுரன் இருள் என்னும் சக்தியைப் பெற்றதால்,பிரபஞ்சம் முழுவதும் இருளைக்கொண்டு ஆட்சி நடத்தினான்.

இவர்கள் அனைவரும் அந்தகாசுரனிடம் போரிட்டுத் தோற்றனர்.பின்னர்,முழு முதற்கடவுளான சிவபெருமானைத் தஞ்சமடைந்து முறையிட்டனர்.

தாருகாபுரத்தை எரித்த காலாக்னி ,சாந்தமாகி சிவபெருமானின் நெஞ்சில் ஓர் பகுதியாக இருந்தது.தேவர்களின் துயர் துடைக்க சிவபெருமான் அந்த அக்னிக்குஞ்சுக்கு ஆணையிட்டார்.அதில் விஸ்வரூபம் எடுத்து வந்தவர்தான் ஸ்ரீபைரவர்.

அதுவும் எப்படி விஸ்வரூபம் எடுத்தார் எனில்,எட்டு திக்குகளிலும் அந்தகாசுரனால் உருவாகிய இருளை நீக்கிட எட்டு பைரவர்களை சக்தியுடன் புறப்பட உத்தரவிட்டார்.

அதன்படி,

புறப்பட்டு,அந்தகாசூரனை அழித்து உலகிற்கு வெளிச்சத்திற்கு கொடுத்தனர். இதனால்,தேவர்கள் மகிழ்ச்சியடைந்து அனைவரும் தத்தம் ஆயுதங்களை பைரவருக்குக் கொடுத்தனர்.

பைரவ வழிபாடு செய்வதின் அவசியம் : 
12 ராசிகளையும் தன் உடலில் அங்கங்களாகக் கொண்டவர் ஸ்ரீபைரவர். நவக்கிரகங்களுக்கும் பிராண தேவதையாக இருப்பவரும் பைரவரே.

தேவ, அசுர, மானிடர்களும் அஞ்சும் கிரகம் சனி பகவான் ஆவார்.சனிக்கு வரம் தந்து, இக்கடமையைச் செய்ய வைத்த சனியின் குரு ஸ்ரீபைரவரே ஆவார்.சனியின் வாத நோயை நீக்கியவரும் பைரவரே.

தன் தமையன் எமன், பைரவரிடம் அதீத சக்திக்கு வரம் பெற்றதைக் கண்ட அவன் தம்பி சனீஸ்வரன்,பைரவரை நோக்கி கடுமையான தவம் இருந்தான்.தவ வலிமையால் பைரவர் அவன் முன் தோன்றி,மும்மூர்த்திகள் உள்பட அனைவரையும்,கால வர்த்தமான நிர்ணயப்படி(ஜோதிட ரீதியாக சனிப்பெயர்ச்சிப்படி) நல்லது தீயது செய்யும் சக்தி அருளினார்.அப்போது சனீஸ்வரனிடம் ஒரு சத்தியப்பிரமாணம் பெற்றுக்கொண்டார்.

சனீஸ்வரனின் சஞ்சாரத்தால் எவர் ஒருவருக்கு கஷ்டம் கொடுக்க வேண்டியிருந்தாலும்,அவர்கள் பைரவரை வழிபட்டு சரணடைந்தால் அவரகளுக்கு சனீஸ்வரன் நன்மையையே செய்ய வேண்டும் என பைரவபெருமானிடம் விரும்பினார்.

அதனால்தான் ,ஏழரை நாட்டுச்சனி,அஷ்டமச்சனி,ஜன்மச்சனியால் அவதிப்படுவோர் பைரவ வழிபாடு பண்ணுவதன் மூலம் அத்தொல்லை களிலிருந்து விடுபட முடியும்.

பைரவரை வழிபாடு செய்வது எப்படி?
பைரவருக்கு மிகவும் உகந்த நாள் அஷ்டமி என கருதப்படுகிறது.பொதுவாக,மக்கள் அஷ்டமி அன்று எந்த நல்ல காரியமும் செய்ய மாட்டார்கள்.அதன் உண்மைக்காரணம் வேறு.

இறையாணைப்படி,அனைத்து ஜீவராசிகளுக்கும் எல்லா ஐஸ்வர்யங்களையும் அள்ளித்தரும் பணியினை நிறைவேற்றுபவர்கள் அஷ்ட லட்சுமிகள்.சொர்ணபைரவரிடம்,சக்திகளைப் பெற்று தாங்கள் பெற்ற அதனை பக்தர்களுக்கு விநியோகம் செய்துவருகின்றனர்.தாங்கள் பெற்ற சக்தி குறைய குறைய,ஒவ்வொரு அஷ்டமியிலும் பைரவரை வழிபாடு செய்து தங்கள் சக்தியை பெருக்கிக் கொள்ளுகின்றார்கள்.அஷ்டமிஅன்று,அஷ்ட லட்சுமிகளே பைரவ வழிபாட்டில் ஈடுபடுவதால்,அவர்களால் அன்று நடைபெறும் நற்காரியங்களில் ஈடுபட முடியாது.

ஆகவே,அஷ்ட லட்சுமிகளே வழிபடும் அந்த அஷ்டமி நன்னாளில்,நாம் நேரடியாக ஸ்ரீபைரவரை வணங்கிவந்தால்,அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.தேய்பிறை அஷ்டமி,குறிப்பாக கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி பைரவ வணக்கத்திற்கு மிகவும் சிறந்தது.

சாதாரணமாக,நாய் வாகனம் பைரவரின் பின்புறம் வலப்பக்கம் தலை உள்ளவாறு இருக்கும்.சில இடங்களில் இடப்பக்கம் தலை உள்ளவாறு இருக்கும்.

மிக அரிதாக,சில இடங்களில் மட்டுமே இருபக்கமும் நாய்வாகனங்களுடன் பைரவர் காட்சி தருகிறார்.இவ்வாறு,இடப்பக்கம் மற்றும் இரு வாகனங்களுடன் உள்ள பைரவ பெருமான்,மிகுந்த சக்தியுடன் விளங்குவதாக ஐதீகம்.ஏவல்,பில்லி சூனியம்,பேய் பிசாசு முதலியவற்றின் தொல்லைகளிலிருந்து பூரண விடுதலை அடைய,வாழ்வில் வளம் பெற,திருமணத்தடைகள் நீங்கிட,பிதுர்தோஷம்,சனி தோஷம்,வாஸ்து குறைபாடுகள் நீங்கி பைரவர் வழிபாடு மிகவும் உதவும்.

தமிழகம் முழுவதும் இருக்கும் பழமையான சிவாலயங்களில் கோவிலின் பாதுகாவலராக பைரவர் இருக்கிறார்.அவரை வழிபாடு செய்தால் போதுமானது.

சனி, 11 ஜூலை, 2015

வராகி வழிபாடு

வராகி வழிபாடு செய்யத் தேவையான தகுதிகள். . .
அஷ்டபைரவர்களில் புதன் பகவானின் பிராண தேவதை உன்மத்த பைரவர்;இவரது துணைசக்தியே வராகி! பன்றி முகத்துடன் கூடிய பெண் சக்தி!
ஆன்மீகத்தில் உயர்ந்த நிலை என்பது வாலை என்ற பெண்தெய்வ சக்தியை தரிசிப்பதுதான்! சாதாரண மனிதர்களாகிய நாம் வாலையை தரிசிக்க பல பிறவிகள் தொடர்ந்து ஆன்மீக முயற்சிகள் எடுத்தால் தரிசிக்கலாம்;
வாலை என்பது யார்?
மனிதர்களாகிய நம்மைக் கட்டுப்படுத்துவது நவக்கிரக நாயகர்கள்! (சூரியன் முதல் கேது வரையிலான ஒன்பது பேர்கள்)
இந்த நவக்கிரக நாயகர்களை சூட்சுமமாக இயக்குவது பஞ்சபூதங்கள்:
இந்த பஞ்சபூதங்கள் மும்மூர்த்திகள் எனப்படும் பிரம்மா,விஷ்ணு,ருத்ரன்(சிவன் அல்ல;) கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றன;
இந்த மும்மூர்த்திகளும் மஹாபைரவரின் கட்டுப்பாட்டில் இயங்கிவருகிறார்கள்;மஹாபைரவரோ ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் கட்டுப்பாட்டில் செயல்பட்டுவருகிறார்;உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம்,கடவுள் சக்திகள் அனைத்தும்,அனைத்துச் செயல்களும் இங்கிருந்து இயங்குகின்றன;
இதற்கு மேல் இருக்கும் சக்திகளைப் பற்றி அறிய நாம் சித்தரானால் மட்டுமே முடியும்;
இவர்களுக்கு மேலே ஐந்து சிவ சக்திகள் இருக்கின்றன;இவர்களுக்கும் மேல் அண்ணாமலையார் இருக்கிறார்;அவரையும் இயக்குவது வாலை என்ற திரிபுரசுந்தரி என்ற மனோன்மணி என்ற ஆதி சக்தி என்ற ஆதி பரபிரும்ம சக்தி!
இந்த வாலையை தரிசிப்பதே மனிதப் பிறப்பின் நோக்கம்;சித்தராக ஆக விரும்பும் போதுதான் வாலை தரிசனத்தின் முக்கியத்துவத்தை உணர முடியும்;வாலையை தரிசிக்க விரும்புவோர்,முதலில் வராகியைத் தரிசித்து ஆசியும்,வரங்களும் வாங்க வேண்டும்;
வராகியைத் தரிசிக்க தினசரி 20 நிமிடம் வீதம் இரண்டு ஆண்டுகள் வராகி உபாசனை செய்ய வேண்டும்;வராகி உபாசனை செய்ய விரும்புவோர் அசைவம் சாப்பிடக் கூடாது;பிறருக்கு தீங்கு நினைக்கவே கூடாது;இந்த இரண்டு கொள்கைகள் யாருக்கு இயல்பான சுபாவமாக இருக்கிறதோ அவர்களுக்கு மட்டுமே வராகி உபாசனை கைகூடும்;
தமிழர்களின் பரம ரகசிய வழிபாடுகளில் முக்கியமானதும் முதன்மையானதுமாக இருப்பது வராகி உபாசனை! இணையத்தில் வராகி வழிபாடு பற்றி எழுதுவதே தப்புதான்;ஏன் எனில் தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே நேரடியாக உபதேசிக்க வேண்டிய வழிபாடு வராகி வழிபாடு! அவரவர் பிறந்த ஜாதகப்படி தான் ஒருவருக்கு வராகி உபாசனைக்குரிய தகுதி இருக்கிறதா? என்பதை மதிப்பிட முடியும்;இது வெட்டி பில்ட் அப் அல்ல;யதார்த்தம்.
உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம்,கடவுள்கள் என அனைத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும் அன்னை வராகி.வராகியைப் பற்றி தமிழ்நாடு முழுக்க பலருக்குத் தெரிந்திருக்கிறது;பல ஆன்மீக அமைப்புகள் வராகி உபாசனையைச் சொல்லித் தருகின்றன; இருந்த போதிலும் வராகி வழிபாட்டுக்கு நமக்குத் தகுதி உண்டா என்பதை அவரவர் ஜாதகம் பார்த்து உறுதி செய்து கொள்வது அவசியம்.
பைரவ சுவாமியின் சக்தியாக இருப்பதால்,வராகி உபாசனை அல்லது வராகி வழிபாடு செய்பவர்களுக்கு எதிராக யாராவது பில்லி சூனியம் வைத்தால் வைத்தவர்களுக்கு பலவிதமான சிரமங்கள் உருவாகும்;
வராகி உபாசனைக்குத் தான் ஜாதகப்படி தகுதி தேவை;வராகி வழிபாட்டிற்கு எந்தத் தகுதியும் தேவையில்லை;
தகுந்த மற்றும் நேர்மையான குருவைத் தேடிக் கண்டுபிடித்து வராகி வழிபாட்டைத் துவக்கவும்;
வாழ்க அறமுடன்,வளர்க அருளுடன்!!
ஒம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ
ஒம் வராஹியே போற்றி! போற்றி!! போற்றி!!!

Crorepathy in தேய்பிறை அஷ்டமி


ஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள் வழிபாடு!!!
நீங்கள் எந்த ராசி,நட்சத்திரத்தில் பிறந்தவராக இருந்தாலும் சரி!ஜீவ காருண்யம் எனப்படும் அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாகக் கைவிட்டுவிட்டு, மாதத்தில் ஒரே ஒருநாள் பின்வரும் கோவில்களில் உங்களுக்கு அருகில் இருக்கும் ஒரு கோவிலுக்குச் சென்று ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு செய்தாலே போதும்;அன்று முதல் அடுத்த ஒரு மாதத்திற்கு உங்களுக்கு பணக்கஷ்டம் வராது;
பாதாகதிபதி திசை,யோகாதிபதி திசை,ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி என எந்த ஒரு கஷ்டசூழ்நிலையாக இருந்தாலும் சரி! தேய்பிறை அஷ்டமி வரும் நாளில் இராகு காலத்தில் உங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதியில் தாங்கள் இருக்க வேண்டும்.இருந்து மனமுருகி உங்களது தேவைகள் என்ன? என்பதைமனப்பூர்வமாக வேண்டிட வேண்டும்.வழிபாடு முடிந்ததும்,வேறு எந்தக் கோவிலுக்கும் செல்லாமலும் யார் வீட்டுக்கும் செல்லாமலும் நேராக உங்கள் வீட்டிற்குச் செல்ல வேண்டும்.இவ்வாறு செய்தால் மட்டுமே உங்களுடைய பணக்கஷ்டம் நீங்கும்.
நீங்கள் மாதச் சம்பளத்துக்கு வேலை பார்ப்பவராக இருந்தாலும் சரி,அரசு ஊழியராக இருந்தாலும் சரி,சுய தொழில் செய்பவராக இருந்தாலும் சரி,ஊர் ஊராகச் சென்று சந்தைப்படுத்தும் மார்கெட்டிங் எக்ஸ்க்யூட்டிவாக இருந்தாலும் சரி,இல்லத்தரசியாக இருந்தாலும் சரி,படிக்கும் மாணவராக இருந்தாலும் சரி. . .நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்:
தேய்பிறை அஷ்டமி வரும் நாளைக் கண்டறிந்து அருகில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிக்குச் செல்ல வேண்டியது தான்.
தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிகள் அல்லது ஆலயங்கள் இருக்குமிடங்களுக்கான பட்டியல் வருமாறு:
1,அண்ணாமலை கோவிலின் உள்பிரகாரத்தில்
2.அண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில்(காஞ்சிபுரம் அல்ல) பனிரெண்டாவது கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் காகா ஆஸ்ரமம்(கிராமம் பெரியகுளம்)
3.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் மோட்டூர் என்ற அழிபடைதாங்கி(இருபத்தைந்து கி.மீ.தூரத்துக்கு கரடுமுரடான சாலையில் ஆட்டோவில் மட்டுமே பயணிக்கமுடியும்)
4.சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் வானகரம்
5.ஐ.சி.எஃப் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் கமலவிநாயகர் ஆலயத்தினுள்(மாலை நேரத்தில் மட்டும் வழிபாடு செய்கிறார்கள்)
6.பள்ளிக்கரணை பஞ்சாயத்து போர்டு அருகில் இருக்கும் எஸ்.எஸ்.மஹால் திருமண மண்டப வளாகம்
7.சென்னை தாம்பரம் டூ வேலூர் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் படப்பையில் அருள்மிகு ஜெயதுர்காபீடம்(படப்பையில் இருந்து 3 கி.மீ.தூரம்)
8.சிதம்பரம்
9.திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் இருக்கும் தபசுமலை
10.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜார்சாலை
11.திருச்சி உறையூரில் அமைந்திருக்கும் தான் தோன்றீஸ்வரர் ஆலய வளாகம்
12.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவசமாதி இது)
13.பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி(சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆலயம்!!!)
14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,ரத்னவேல் முருகன் உடையார் திருக்கோவில்,ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் அருகில்,நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6
15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்,
புஞ்சைத் தோட்டக்குறிச்சி கிராமம்,சேங்கல்மலை,கரூர்.
(கரூரில் இருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்;அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்;நடந்து செல்வதுமிகக்கடினம்)பூசாரி செல் எண்:92451 69455
16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல சொர்ணாகர்ஷணபைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில்,பாண்டிச்சேரி.நிர்வாகி:திரு.முத்துக்குருக்கள்,ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகளின் சீடர்.
வழித்தடம்:பாண்டிச்சேரியில் இருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இங்கிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் இருக்கிறது.
17.அறந்தாங்கியில் இருந்து முப்பது கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தி,(இங்கே பவானீஸ்வரர் கோவிலில் பைரவசித்தர் நிறுவிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் சன்னதி இருக்கிறது)
18.நாகப்பட்டிணம் நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்
19.ஸ்ரீசெல்வவிநாயகர் கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில்,பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்
20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்(பஸ் ரூட்:1,2 எனில் கல்யாணமண்டபம் நிறுத்தம்; 1G,2G எனில் காங்கேயநல்லூர்,ஆர்ச் அருகே இறங்கி நடந்து வர வேண்டும்)
21.மத்யகைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய்நகர் ரயில்வே ஸ்டேஷன்,அடையாறு,சென்னை(பேருந்து நிறுத்தம்:மத்தியகைலாஷ்)
22.வன்னிவேடு ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,வாலாஜாபேட்டை
23.சேலம் அருகில் இருக்கும் ஆறகழூர்
24.சென்னையில் செட்டியார் அகரம் பகுதியில் துண்டலம்,அண்ணாநகர் ஏரியாவில் செட்டியார் அகரம் பள்ளிக்கூடத்தெருவில் அமைந்திருக்கும் முருகன் கோவில்(பூசாரி விஜய்குருக்கள் செல் எண்;8754559182)
25.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி, முருகன் கோவில் வளாகம்,துறையூர்.
26.ரெட் ஹில்ஸ்,சென்னையில் ஒரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் இருக்கிறது.
27.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,பெரம்பூர் பழனி ஆண்டவர் முருகன் கோவில்,பழனி ஆண்டவர் கோவில் தெரு,பெரம்பூர்,சென்னை-11(அமைவிடம்:பெரம்பூர் பேருந்து நிலையம் & ரயில் நிலையம் அருகில்)
28.ஸ்ரீகனகதுர்கா ஆலயம்,காளமேகம் தெரு,மேற்கு முகப்பேர்,சென்னை=37 இல் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார்.
29.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் பத்தாவது கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு கிராமம் ஸ்ரீசவுந்தரராஜப்பெருமாள் திருக்கோவிலில் சக்திவாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது.தமிழ்நாட்டின் தெற்கே அமைந்திருக்கும் கடைசி ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இதுதான்.
29.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,அருள்மிகு மாதேஸ்வரர் உடனுறை மாதேஸ்வரி திருக்கோவில்,மணப்பாக்கம்,சென்னை.
30.அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்,நங்கநல்லூர்,சென்னை.
31.ஸ்ரீஸ்ரீஸ்ரீSWARNAGARSHANA BAIRAVAR SANNATHI,SANEESWARAN KOVIL,Vithunni Street,NOORANI POST,PALAKKAD-678004,KERALA STATE
32.க்ஷேத்ரபாலர் சன்னதிக்கு அருகில்,பொன்னம்பலவாணேஸ்வரம்,கொழும்பு,இலங்கை
இந்தக் கோவில்களில் ஒருசில கோவில் வாசலில் இலவசமாக பானகம் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் தருகிறார்கள்.கோவிலுக்குள்ளே நுழையும்போதும்,கோவிலைவிட்டு வெளியேறும் போதும் அருந்தவே கூடாது.
.
அடுத்த தேய்பிறை அஷ்டமி :7/8/2015 வெள்ளி

வெள்ளி, 24 ஏப்ரல், 2015

ஓம்சிவசிவஓம்





பஞ்சாட்சரம் எனப்படும் மந்திரமான

 ஓம்நமச்சிவாய உலகத்தில் 

மட்டுமல்ல;பிரபஞ்சத்தில் இருக்கும் 

அனைத்து உலகங்களிலுமே 

உயர்ந்த மந்திரம் ஆகும்.எந்த ஒரு 

சிவாலயத்துக்குச் சென்றாலும்,ஓம் 

நமச்சிவாய என்று ஒன்பது முறை 

ஜபிக்கலாம்;அதற்கும் மேலாக 

தினமும் ஜபித்து வந்தால்,சில 

வாரங்களுக்குப் பிறகு அவ்வாறு 

ஜபித்தவர் துறவுமனப்பான்மையை 

அடைந்துவிடுவார்;சில மாதங்கள் 

வரை தொடர்ந்து ஓம்நமச்சிவாய 

ஜபித்து வந்தால் அவரால் வீட்டில் 

வாழ முடியாத மனநிலை 

உருவாகிவிடும்.இது தொடர்பாக 

யார் வேண்டுமானாலும் ஆன்மீக 

ஆராய்ச்சி செய்து பார்க்கலாம்.


குடும்பக் கடமைகளை 

நிறவேற்றிக்கொண்டே,சிவ அருள் 

கிடைப்பதற்காக நமது ஆன்மீக 

குரு,ருத்ராட்சத்துறவி மிஸ்டிக் 

செல்வம் ஐயா அவர்கள் நமக்கு 

கண்டுபிடித்துக் கொடுத்த சிவ 

மந்திரம் ஓம்சிவசிவஓம் 

ஆகும்.எல்லா கோவில்களின் 

நுழைவு வாயில்களிலும் சிவசிவ 

என்று எழுதியிருப்பதை பார்த்து 

வருகிறோம்.ஒருவர் தினமும் 108 

முறை சிவசிவ என்று ஜபித்து 

வந்தாலும்,சில வாரங்களில் அவர் 

துறவு மனப்பான்மையை 

எட்டிவிடுவார்;சில மாதங்கள் 

வரையிலும் ஒரு நாள் விடாமல் 

தினமும் 108 முறை வீதம் சிவசிவ 

என்று ஜபித்து வந்தால்,அவர் தனது 

அனைத்து பந்தபாசங்களில் 

இருந்தும் விலகிச் சென்று 

விடுவார்;மனிதர்கள் வாழும் நகர/

கிராமப் பகுதியில் இருக்க 

அவருக்குப் பிடிக்காமல் 

போய்விடும்;ஒரு வருடத்துக்கும் 

மேலாக ஒருவர் தினமும் 108 முறை 

சிவசிவ என்று ஜபித்தால்,அவர் 

துறவியாகிவிடுவார். ஆனால்,அவர் 

துறவியானாலும்,அவரதுபிறந்த 

ஜாதகத்தில் அமைந்திருக்கும் 

நவக்கிரகங்கள் அவரை அவரது 

கர்மங்களை நோக்கி இழுக்கவே 

செய்யும்.அப்போது அவர் காமம் 

சார்ந்த தவறுகள் செய்யத் 

துவங்கிவிடுவார்; இந்த சூழ்நிலை 

ஆண்,பெண் என அனைவருக்கும் 

பொருந்தும்.


ஓம்நமச்சிவாய மந்திரத்திலிருந்து 

சுமார் 20000 சிவ மந்திரங்களை 

நமது முன்னோர்களாகிய சித்தர்கள் 

கண்டறிந்துள்ளார்கள்.அவைகளில் 

பல சிவ மந்திரங்களை ஜபிக்கும் 

தகுதி நமக்கு கிடையாது;சில சிவ 

மந்திரங்கள் தொடர்ந்து மூன்று 

பிறவிகளாக பிரம்மச்சாரியாக 

இருந்தால் மட்டுமே ஜபிக்க 

வேண்டும்.அந்த மந்திரத்தில் 

இருக்கும் வார்த்தைகள் இவைதான் 

என்று அறியும் ஞானம் கூட 

(தற்காலத்தில்) நம்மில் பலருக்குக் 

கிடையாது.


“ ஓம்நமச்சிவாய மந்திரத்தை 

தினமும் ஒன்பது முறை யார் 

வேண்டுமானாலும் 

ஜபிக்கலாம்;அதற்கும் மேலே 

ஜபிக்க வேண்டும் எனில்,தகுந்த 

சிவாச்சாரியாரிடம் சிவ தீட்சை 

பெற வேண்டும்;

சிவ தீட்சை பெற்றப்பின்னர், 

அதற்குரிய விதிமுறைகளை 

கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்” 

என்று நமக்கு அறிவுறுத்தக்கூடிய 

துறவிகளோ,மகான்களோ,ஆன்மீக 

வழிகாட்டிகளோ இல்லை!!


பூமி விண்வெளியில் ரவி 

எனப்படும் 


சூரியனை சுற்றி வருகிறது;ஒரு 

முறை ரவியைச் சுற்றி வர சுமார் 

ஒரு வருடம் ஆகிறது.அப்படி சுற்றி 

வருவதோடு,தன்னைத் தானே சுற்றி 

வருகிறது;தன்னைத் தானே பூமி 

சுற்றிவருவதால் விண்வெளியில் 


மிகப் பிரம்மாண்டமாக ஓம் என்ற 

ஒலி உண்டாகிறது.சிவ சிவ என்ற 

மந்திரத்தின் முன்னும் பின்னும் ஓம் 

என்னும் மந்திரத்தை சேர்க்கும் 

போது அது குடும்பஸ்தர்களுக்கு 

ஏற்ற மந்திரமாக 

மாறிவிடுகிறது.பூமியின் 

இயக்கத்தோடு இணைந்து வாழ்ந்து 

இறை அனுபவம் பெறக்கூடிய 

சூழ்நிலையும் 

உருவாகிவிடுகிறது.எனவே தான் 

ஓம்சிவசிவஓம் ஜபிக்க 

வலியுறுத்துகிறோம்;

நமது குடும்பக் கடமைகளை 

நிறைவேற்றிக்கொண்டே நாம் சிவ 

சிந்தனையில் ஈடுபடவும்,நாம் 

இறையருளைப் பெறவும் ஏற்ற 

மந்திரம் ஓம்சிவசிவஓம் ஆகும். 

ஓம்சிவசிவஓம் ஜபிப்பதற்கு 


முறைப்படி தீட்சை கூட வாங்க 

வேண்டிய அவசியம் இல்லை; 


ஆனால், ஓம்நமச்சிவாய 

மந்திரத்தை விடவும் விரைவாக 

உயிரூட்டம் பெறும் மந்திரம் 

ஓம்சிவசிவஓம் ஆகும்.

நாம் நமது ஜாதகப்படி எந்த 

யோகத்தில் பிறந்திருந்தாலும் 

சரி,அல்லது எந்த தோஷத்தில் 

பிறந்திருந்தாலும் சரி,அவை 

அனைத்தையும் நீக்கி நம்மை 

நிம்மதியாகவும் செல்வச் 

செழிப்போடும் வாழ வைக்கும் 

மந்திர ஜபம் ஓம்சிவசிவஓம் ஆகும்.

ஒரே இடம்,ஒரே நேரம் என்ற 

கொள்கை அடிப்படையில் தினமும் 

ஓம்சிவசிவஓம் ஜபிக்க நம்மை 

பழகிக் கொள்ள வேண்டும்.(நமது 

வீட்டில் எந்த இடத்தில் முதல் 

நாளன்று ஓம்சிவசிவஓம் ஜபிக்க 

ஆரம்பிக்கிறோமோ, அதே இடத்தில் 

மட்டும் தினமும் ஜபித்து வர 

வேண்டும்;தினமும் எந்த நேரத்தில் 

ஓம்சிவசிவஓம் ஜபித்து 

வந்தோமோ,அந்த 

நேரத்தில்=முடிந்த வரையிலும் 

ஜபித்து வருவதால் அற்புதமான 

பலன்களை உணரலாம்)

இப்படிப்பழக்கப்படுத்துவதன் 

மூலமாக ஓம்சிவசிவஓம் 

மந்திரஜபத்தில் சக்தியை ஓரிரு 

மாதங்களில் உணரத் 

துவங்கலாம்.ஓம்சிவசிவஓம் 

ஜபிக்கஆரம்பித்த முதல் 15 

நாட்களுக்கு சிலருக்கு ஒரு மாதம் 

வரையிலும் மனக்குழப்பம் வரத் 

தான் செய்யும்.ஏனெனில்,நமது 

விதியை நாமே ஓம்சிவசிவஓம் 

ஜபிக்கத் துவங்குவதன் மூலமாக 

மாற்றத் 

துவங்குகிறோம்;அதனால்,நாம் 

ஓம்சிவசிவஓம் ஜபிக்கத் துவங்கிய 

ஒவ்வொரு நாளுமே ஜபிக்கும் 

நேரத்தில் தேவையில்லாத 

சிந்தனைகள்,காட்சிகள்,மனக்குழப்ப

ங்கள் வரத் தான் செய்யும்.மன 

உறுதி உள்ளவர்களுக்கு 16 வது 

நாளிலிருந்தும், மன உறுதி 

குறைவாக இருப்பவர்களுக்கு 31 

வது நாளிலிருந்து 

மனக்குழப்பங்கள் 

முழுமையாக விலகிவிடும்.

ஆறு மாதங்கள் 

வரையில்(சிலருக்கு 

ஒன்பது மாதங்கள் வரையிலும்) 

தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்து 

வந்தால்,அவர்கள் வாழ்ந்து வரும் 

இடத்தில் அவர்களே சக்திவாய்ந்த 

மனிதராக இருப்பார்;அவர் 

சிடுமூஞ்சியாக 

இருந்தால்,கலகலப்பானவராக 

மாறிவிடுவார்; எப்போதும் 

கவலைப்படுபவராக 

இருந்தால்,அந்த கவலைகளை 

ஒழித்துக்கட்டும் வல்லமையை 

அடைந்துவிடுவார்;நிறைய 

கடன்களோடு இருந்தால்,அந்த 

கடன்கள் தீர வழி கிடைக்கத் 

துவங்கும்;பலவித அல்லது ஓரிரு 

கெட்ட பழக்கங்களுக்கு 

அடிமையாகி இருந்தால் அத்தனை 

பழக்கங்களும் அவரை விட்டு 

விலகிச்செல்லத் துவங்கிவிடும்.

ஒரு வருடம் வரை தினமும் 

ஓம்சிவசிவஓம் ஜபித்து 

முடித்திருந்தால்,நமது உடலுக்குள் 

இருக்கும் ஒவ்வொரு நாடி மையம் 

மற்றும் வர்மமையங்களிலும் நமது 

ஜப எண்ணிக்கை ஒருமுறை 

பதிவாகியிருக்கும்.நாமே சிவ 

அம்சமான 

ருத்ரனாகிவிடுவோம்;ஒரு நாளுக்கு 

ஒரு மணி நேரம் வீதம் தொடர்ந்து 

பத்து ஆண்டுகளுக்கு தினமும் 

ஓம்சிவசிவஓம் 

ஜபித்துவந்தால்,நமது உடலில் 

இருக்கும் ஒவ்வொரு சக்தி 

மையத்திலும்(நாடிகள் மற்றும் 

வர்மப் புள்ளிகள்) நூறுமுறை 

ஓம்சிவசிவஓம் மந்திர ஆற்றல் 

நிரம்பியிருக்கும்.ஆறு அல்லது 

ஏழாம் ஆண்டிலிருந்தே நாம் 

,நம்மைச் சுற்றியிருப்பவர்களின் 

எண்ண ஓட்டங்களைத் தாமாகவே 

அறியும் குணத்தைப் 

பெற்றுவிடுவோம்;நமக்கு சில சிவ 

தரிசனங்கள் கிடைத்திருக்கும்; 

ஜோதிட பலன்கள்,நவக்கிரக 

பாதிப்புகள்,பஞ்சபூத பாதிப்புகள் 

என்று எதுவும் நம்மை 

அண்டாது;நாமே சித்த சக்தியாக 

உருமாறிவிடுவோம்; அப்படி 

மாறினாலும்,நாம் நமது குடும்ப 

மற்றும் சொந்தக் கடமைகளை 

கைவிடமாட்டோம்;

ஜாங்கிரி என்று சொன்னால் நாவில் 

இனிப்புச் சுவையை அறிய 

முடியாது;இவ்வளவு பதிவுகளை 

வாசித்தால் மட்டும் ஓம்சிவசிவஓம் 

மந்திரஜபத்தின் சக்தியை அறிய 

முடியாது;(இந்த 

புகைப்படங்களுக்குள் 

ஒளிந்திருக்கும் சூட்சும சக்திகளை 

அறியத் துவங்கியிருப்போம்!!!)

ஓம்சிவசிவஓம்

சனி, 18 ஏப்ரல், 2015

27 stars காயத்ரி மந்திரங்கள்

27 stars காயத்ரி மந்திரங்கள் க்கான பட முடிவு



27 நட்சத்திரங்களில் பிறந்தோருக்கும் துன்பங்கள் தீர்க்கும் காயத்ரி மந்திரங்கள்

உங்கள் நட்சத்திர காயத்ரி மந்திரத்தை மனப்பாடம் செய்து தினமும் குறைந்தது 9 முறையாவது சொல்லுங்கள். வாழ்க்கையில் மிகச்சிறந்த முன்னேற்றம் காணலாம்.

அஸ்வினி
ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே சுதாகராயை தீமஹி தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத்
பரணி
ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே தண்டதராயை தீமஹி தன்னோ பரணி ப்ரசோதயாத்
கிருத்திகை
ஓம் வன்னிதேஹாயை வித்மஹே மஹாதபாயை தீமஹி தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத்
ரோஹிணி
ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே விச்வரூபாயை தீமஹி தன்னோ ரோஹினி ப்ரசோதயாத்
மிருகசீரிடம்
ஓம் சசிசேகராய வித்மஹே மஹாராஜாய தீமஹி தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத்
திருவாதிரை
ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே பசும்தநாய தீமஹி தன்னோ ஆர்த்ரா ப்ரசோதயாத்
புனர்பூசம்
ஓம் ப்ரஜாவ்ருத்யைச வித்மஹே அதிதிபுத்ராய த தீமஹி தன்னோ புனர்வஸு ப்ரசோதயாத்
பூசம்
ஓம் ப்ரம்ம்வர்ச்சஸாய வித்மஹே மஹா திஷ்யாய தீமஹி தன்னோ புஷ்ய ப்ரசோதயாத்
ஆயில்யம்
ஓம் ஸர்பராஜாய வித்மஹே மஹா ரோசனாய தீமஹி தன்னோ ஆச்லேஷ ப்ரசோதயாத்
மகம்
ஓம் மஹா அனகாய வித்மஹே பித்ரியா தேவாய தீமஹி தன்னோ மகஃப்ரசோதயாத்
பூரம்
ஓம் அரியம்நாய வித்மஹே பசுதேஹாய தீமஹி தன்னோ பூர்வபால்குநீ ப்ரசோதயாத்
உத்திரம்
ஓம் மஹாபகாயை வித்மஹே மஹாச்ரேஷ்டாயை தீமஹி தன்னோ உத்ரபால்குநீ ப்ரசோதயாத்
அஸ்தம்
ஓம் ப்ரயச்சதாயை வித்மஹே ப்ரக்ருப்ணீதாயை தீமஹி தன்னோ ஹஸ்தா ப்ரசோதயாத்
சித்திரை
ஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே ப்ரஜாரூபாயை தீமஹி தன்னோ சைத்ரா ப்ரசோதயாத்
சுவாதி
ஓம் காமசாராயை வித்மஹே மகாநிஷ்டாயை தீமஹி தன்னோ சுவாதி ப்ரசோதயாத்
விசாகம்
ஓம் இந்த்ராக்நௌச வித்மஹே மஹாச்ரேஷ்ட்யைச தீமஹி தன்னோ விசாகா ப்ரசோதயாத்
அனுஷம்
ஓம் மித்ரதேயாயை வித்மஹே மஹா மித்ராய தீமஹி தன்னோ அனுராதா ப்ரசோதயாத்
கேட்டை
ஓம் ஜயேஷ்டாயை வித்மஹே மகா ஜய்ஷ்ட்யாயை தீமஹி தன்னோ ஜ்யேஷ்டா ப்ரசோதயாத்
மூலம்
ஓம் ப்ராஜாதிபாயை வித்மஹே மஹப்ராஜையை தீமஹி தன்னோ மூலாப் ப்ரசோதயாத்
பூராடம்
ஓம் சமுத்ரகாமாயை வித்மஹே மஹாபிஜிதாயை தீமஹி தன்னோ பூர்வாஷாடா ப்ரசோதயாத்
உத்திராடம்
ஓம் விஸ்வேதேவாய வித்மஹே மஹா ஷாடாய தீமஹி தன்னோ உத்ராஷாடா ப்ரசோதயாத்
திருவோணம்
ஓம் மஹா ச்ரோணாய வித்மஹே புண்யஸ்லோகாய தீமஹி தன்னோ ச்ரோணா ப்ரசோதயாத்
அவிட்டம்
ஓம் அக்ர நாதாய வித்மஹே வசூபரீதாய தீமஹி தன்னோ சரவிஹ்டா ப்ரசோதயாத்
சதயம்
ஓம் பேஷஜயா வித்மஹே வருண தேஹா தீமஹி தன்னோ சதபிஷக் ப்ரசோதயாத்
பூரட்டாதி
ஓம் தேஜஸ்கராய வித்மஹே அஜஏகபாதாய தீமஹி தன்னோ பூர்வப்ரோஷ்டபத ப்ரசோதயாத்
உத்திரட்டாதி
ஓம் அஹிர் புத்ந்யாய வித்மஹே ப்ரதிஷ்டாபநாய தீமஹி தன்னோ உத்ரப்ப்ரோஷ்டபத ப்ரசோதயாத்
ரேவதி
ஓம் விச்வரூபாய வித்மஹே பூஷ்ண தேஹாய தீமஹி தன்னோ ரைய்வதி ப்ரசோதயாத்

திங்கள், 19 ஜனவரி, 2015

மரத்தடி பிள்ளையார் Benefits



மரத்தடி பிள்ளையாரும் பரிகாரப் பலன்களும்..

அரச மர நிழலும், வன்னி மர நிழலும் ஆனைமுகன் விரும்பி அமரும் இடங்கள். இவை மட்டுமின்றி, மேலும் பல்வேறு மரங்களின் கீழும் வீற்றிருந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். எந்தெந்த மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகப் பெருமானை, வழிபடும் அடியவர்களுக்கு என்னென்ன பலன் கிட்டும் என்பதைப் பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வன்னிமரப் பிள்ளையார்:

அவிட்ட நட்சத்திர நாட்களில் வன்னி விநாயகரை நெல் பொரியினால் அர்ச்சனை செய்து வழிபட்டால், திருமணம் கைகூடும்.

புன்னை மரப் பிள்ளையார்:

ஆயில்ய நட்சத்திர தினத்தில் இவருக்கு இளநீர் அபிஷேகம் செய்து வஸ்திரங்களை அணிவித்து, பின் ஏழை நோயாளிகளுக்கு உணவு, உடைகளை தானம் செய்தால், தம்பதியர்களிடையே உள்ள மனக் கசப்பு நீங்கும்.

மகிழ மரப் பிள்ளையார்:

இந்தப் பிள்ளையாருக்கு, அனுஷ நட்சத்திரத்தில் மாதுளம் பழ முத்துக்களால் அபிஷேகம் செய்தால், பணிக்காக குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்றிருப்பவர்கள் நலமுடன் இருப்பர்.

மாமரப் பிள்ளையார்:

இந்தப் பிள்ளையாருக்கு கேட்டை நட்சத்திரத்தன்று விபூதிக் காப்பிட்டு, ஏழை சுமங்கலிகளுக்கு உடை, உணவு அளித்து வந்தால், கோபம், பொறாமை, பகைமை மாறி, பாதிக்கப்பட்ட வியாபாரம் சீர் பெறும்.

வேப்ப மரத்து விநாயகர்:

உத்திரட்டாதி நட்சத்திர நாளில், தீபம் ஏற்றி இவரை வழிபட்டால் கன்னியருக்கு மனம் போல் மாங்கல்யம் கிட்டும்.

ஆலமரப் பிள்ளையார்:

ஆலமரத்தின் கீழ், வடக்கு நோக்கி அமர்ந்து இருக்கும் விநாயகருக்கு, நோயாளிகள் மகம் நட்சத்திரத்தன்று சித்ரான்னங்களை நிவேதனம் செய்து, தானமளித்தால் கடுமையான நோயிலிருந்து நிவாரணம் பெறலாம்.

வில்வ மரப் பிள்ளையார்:

சித்திரை நட்சத்திரத்தன்று, இவ்விநாயகருக்கு வழிபாடு செய்து ஏழைகளுக்கு முடிந்த அளவு தானம் அளித்து, வில்வ மரத்தைச் சுற்றி வந்தால், பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர்.

அரச மரப் பிள்ளையார்:

பூச நட்சத்திரத்தன்று இவ்விநாயகருக்கு அன்னாபிஷேகம் செய்தால், விளைபொருள் மற்றும் பூமியால் லாபம் கூடும்.

பிணம் மீட்ட பிள்ளையார்:

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் குங்கிலியக்கலயநாயனார். இவர் மகன் இறந்து விட்டான். அவனது உடலை தகனம் செய்ய எடுத்துச் செல்லும் போது விநாயகப் பெருமான் வழி மறித்து, நாக கன்னிகை தீர்த்தத்தில் நீராடிச் செல்லுமாறு, கட்டளையிட்டார். பிறகு அவர்கள் வீடு வந்து சேர்ந்ததும், இறந்த மகன் உயிர் பெற்று வந்தான். கும்பகோணத்திற்கு வடகிழக்கில் 20 கி.மீ. தொலைவில் உள்ள திருப்பனந்தாள் திருத்தலத்தில் இந்த பிணம் மீட்ட விநாயகரை, தரிசிக்கலாம்.

குழந்தை வரம் - ஆலயங்கள்



குழந்தை வரம் பெற உதவும் ஆலயங்களும்,வழிபாட்டு முறைகளும் ..

சிவபுரம் என்றழைக்கப்படும் " திருச்சிவபுரம் "

திருஞானசம்பந்தராலும், திருநாவுக்கரசராலும் பாடப் பெற்ற இத் தலம் மகப் பேறு அருளும் தேவார திருத்தலமாகும். சிவபுரத்தில் வீற்றிருந்து அருளும், " சிங்காரவல்லி, ஆர்யாம்பாள், பெரியநாயகி " என்றெல்லாம் அழைக்கப்படும் அம்பிகைக்கு, வெள்ளிக் கிழமைகள் தோறும், தன்னால் இயன்ற, அளவு முறையான அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்து வழிபட்டால் புத்திர பாக்கியம் பெறுவர். இத் தலம், புத்திர நோய்கள் அகற்றும் தலமாகவும் விளங்குகிறது. குழந்தைகள் சம்பந்தபட்ட நோய்கள், இத் தல அம்மனை வழிபடுவதன் மூலம் முற்றிலும் நீங்குகின்றன. ஆதி சங்கரரின் பூர்வீகமான, இத் தலத்தில், பூமியின் கீழ் ஒரு ஒரு அடிக்கும் ஒரு சிவ லிங்கம் உள்ளதாக ஐதீகம். இத் தலம், கும்பகோணத்தில் இருந்து, சாக்கோட்டை வழியே சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது

ஆதி கும்பேஸ்வரர் திருக் கோயில் " நவநீத கணபதி"

காமதேனு தன் சாபம் நீங்க, இத் தலத்தில் விநாயகருக்கு வெண்ணெய் பூசி வழிபட்டதால் இவர் " வெண்ணெய் கணபதி " ஆனார். காமதேனு தன் கால் குளம்பால் உருவாக்கிய " குர " தீர்த்தத்தில் நீராடி, இந்த நவநீத கணபதிக்கு வெண்ணெய் சார்த்தி வழிபட்டு, பின்னர் " மந்திர பீடேஸ்வரியாய் " அமர்ந்திருக்கும் மங்களநாயகியையும், கிராத மூர்த்தியையும் (கிராத மூர்தி சந்நதி அருகிலேயே உள்ளது). வணங்கினால் புத்திர பக்கியம் கிடைக்கும். சகல பாவங்களும் நீங்கும். கும்பகோணத்தின் பெருமைகளில் ஒன்றான, 2000 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த இத் திருக்கோயில், நகரின் மையப் பகுதியிலேயே அமைந்துள்ளது.

காசி விஸ்வநாதர் கோயில் " நவ கன்னியர் வழிபாடு "

நவ நதிகளும், தனி சந்நதி கொண்டு வீற்றிருக்கும் காசி விஸ்வநாதர் திருக்கோயில் நவ கன்னியர் வழிபாட்டுக்கு சிறந்த தலம். 12 வெள்ளிக் கிழமைகள் விரதமிருந்து, வாசனை மலர்கள் , எண்ணெய், சந்தனம், மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, பால் சோறு, தேங்காய், வாழைப்பழம் போன்றவை வைத்து நவ கன்னியரை வணங்கி, முடிந்த அளவு சுமங்கலி பெண்களுக்கு தானம் செய்தால் மகப் பேறு இல்லாதோர், நன் மக்களைப் பெறுவர். திருமணமாகாத பெண்களுக்கு, விரைவில் மணம் கைகூடும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர். தீரா நோய் கொண்டோர், நோயிலிருந்து விடுபடுவர். பருவம் அடையாத பெண்கள் பூப்பெய்துவர்.

மகப் பேறு அருளும் " பாணபுரீஸ்வரர் திருக்கோயில் "

பிரளய வெள்ளத்தில் மிதந்து வந்த அமுத கும்பத்தை, கிராத உரு கொண்டு முக்கண்ணன் அம்பெய்ததால், கும்பத்திலிருந்த பல மங்கள பொருட்கள் சுயம்பு லிங்கங்களாக உருவெடுத்து, பல சிவ தலங்கள் தோன்றின. கயிலை நாதன், அம்பெய்யும் பொருட்டு நின்ற இடம் பாணதுறையானது. தல நாயகன் " பாணபுரீஸ்வரரானார் ". இத் தலத்தில், சோமகமலாம்பாள் சமேதராய் வீற்றிருக்கும் நாதனை வழிபட்டால் புத்திர பேறு கிட்டும். கடும் வியாதிகள் நீங்கும். சூரசேனன் எனும் வங்க தேச மன்னன் ஒருவன், தன் மனைவி காந்திமதியுடன் இத் தல ஈஸ்வரனை வழிபட்ட்தால், தீராத தன் " குஷ்ட நோய் " நீங்கி, புத்திரப் பேறும் பெற்றான். இத் தலம், நகருக்கு பெருமை சேர்க்கும் புண்ணிய தீர்த்தமாம், மகாமகக் குளக் கரையில் அமைந்துள்ளது

ஆதிஷேசன் மீது பள்ளி கொண்டுள்ள " குழந்தை கிருஷ்ணன் ".

3 வது திவ்ய தேசமாக விளங்கும் சாரங்கபாணி கோயிலின் கருவறையில், ஆதிஷேசன் மீது பள்ளி கொண்டுள்ள குழந்தை உருவ கிருஷ்ணன் விக்கிரகம் ஒன்று உள்ளது. நீண்ட நாட்களாய் குழந்தைச் செல்வம் இல்லாதோர், மகப் பேறு வேண்டுவோர், இந்த கிருஷ்ண விக்கிரகத்தை, தங்கள் மடியில் வைத்து, பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள மாலவனை எண்ணி மனமுருக வேண்டினால், குழந்தைப் பேறு நிச்சயம். தம்பதியர் சமேதராய் வந்து வேண்டுவது மிகச் சிறப்பு.

கரு வளர்க்கும் " கருவளர்ச்சேரி அகிலாண்டேஸ்வரி "

1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இத் திருக் கோயில், கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் சுமார் 10 கி.மீ. தொலைவில் மருதாநல்லூர் என்ற கிராமத்தை அடுத்து உள்ளது. இந்த அம்மன் சுயம்புவாக புற்று மண்ணிலிருந்து தோன்றியதால், சாம்பிராணித் தைலமும், புணுகும் மட்டுமே சார்த்தப்படுகிறது. பல வருடங்களாக குழந்தை இல்லாதோர், இங்கு வந்து, அம்மனின் முன் உள்ள வாசற்படியை நெய் கொண்டு மெழுகி வழிபடவேண்டும். பிரசாதமாக தரப்படும் மஞ்சளை, பெண்கள் தினந்தோறும் பூசி குளித்திட மகப் பேறு கிடைக்கும். கல்யாண வைபவங்கள் நடைபெறவும், இத் தல நாயகி அருளுகிறாள்.

நின்ற நிலையில் வீற்றிருக்கும் " திருமணஞ்சேரி ராகு பகவான் "

கும்பகோணத்தை அடுத்துள்ள மாயவரத்தை அடுத்துள்ளது " மணவரம் அருளும் திருமணஞ்சேரி ". கல்யாணப் பேறு அளிப்பது " கோகிலாம்பாள் சமேத கல்யாண சுந்தரர் " என்றால், இத் தலத்தில் மகப் பேறு அளிப்பது, தனி சந்நதி கொண்டு, நின்ற நிலயில், அருள்பாலிக்கும் " ராகு பகவான் ". அமாவாசை தோறும் இங்கு, குழந்தைப் பேறு வேண்டி பூஜைகளும், அர்ச்சனைகளும் நடைபெறுகிறது. தேங்காய், வெல்லசர்க்கரை மற்றும் எலுமிச்சம்பழம் கொண்டு அர்ச்சனை செய்யப்பட்டு, தேங்காய், வெல்லசர்க்கரை மற்றும் எலுமிச்சம்பழம் ஆகியவை அர்ச்சனை தட்டில் திரும்ப தரப்படும். பிரசாதமாக தரப்படும், பாயாசத்தையும், திரும்ப தரப்படும் தேங்காயையும் உட்கொள்ள வேண்டும். எலுமிச்சம்பழத்தை சாறு பிழிந்து வெல்லசர்க்கரை சேர்த்து உட்கொண்டால் மகப் பேறு நிச்சயம். வழிபாட்டை மூன்று அல்லது ஐந்து அமாவாசைகள் செய்வது மிகச் சிறந்த பலன் அளிக்கும்.

மகப்பேறு தரும் " தலைச்சங்காடு சங்கராண்யேஸ்வரர் "

திருக்கடையூரிலிருந்து சும்மர் 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, சங்கு வடிவில் உள்ள " தலைச்சங்காடு ". சிவன், பிரம்மன், விஷ்ணு என மும்மூர்த்திகளும் அருளும் தலம் இது. திருமாலுக்கு சங்கு கொடுத்ததால் இந்த ஈசன் " சங்கரான்யேஸ்வரர் " ஆனார் . அம்பிகை " சௌந்தரநாயகி அம்மன் ". பௌர்ணமி தோறும், இந்த அம்மனுக்கு, குழந்தை வரம் வேண்டி. சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சார்த்தப்பட்ட சந்தனம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த சந்தான பிரசாதத்தை சிறிது உண்ண குழந்தைப் பேறு கிடைக்கும். குழந்தை வரம் வேண்டும் பெண்கள், வழிபாட்டின்போது, பௌர்ணமி விரதம் இருப்பது நல்ல பயன் அளிக்கும்.

கரு தந்து காத்திடும் " திருக்கருகாவூர் கர்பரட்சாம்பிகை "

கும்பகோணத்தில் இருந்து தஞ்சை செல்லும் சாலையில் சுமார் 20 கி.மீ. தொலைவில் பாபநாசம் அருகே உள்ளது, கருச் சிதைவை தடுத்து , கருவினை நன்முறையில் காத்து, சுகப் பிரசவம் அளித்திடும் " கர்பரட்சாம்பிகை " திருக்கோயில். இங்கு வசித்து வந்த தனது பக்தரான, முனிவர் ஒருவரின் வேண்டுதலுக்கு செவி சாய்த்து, சிதைந்த அவர் மனைவியின் கருவை காத்து, சுகப் பிரசவம் அருளியவள் இந்த அம்பிகை. திருமணத் தடை நீக்கி, மணவரமும், குழந்தை பேறும் அருள்பவள். நீண்ட நாட்கள் திருமணமாகாத பெண்களும், பல ஆண்டுகளாக குழந்தை செல்வமற்ற பெண்களும் இத் தலம் வந்து, அம்பாள் சந்நதியில் நெய் கொண்டு மெழுகி கோலம் இட்டால் அவர்களின் பிரார்த்தனைகள் நிறைவேறும்.இங்கு, அம்பாளின் திருவடியில் வைத்து அர்ச்சித்து தரப்படும் " பசுநெய் " பிரசாதத்தை 48 நாட்கள் தம்பதியர் உட்கொள்ள கரு உண்டாகும். அம்மனுக்கு சார்த்தி தரப்படும் " விளக்கெண்ணெய் " பிரசாதத்தை, கருவுற்ற பெண்கள் தங்கள் வயிற்றில் தேய்த்து வந்தால் சுகப்பிரசவம் பெறுவர்.புற்று மண்ணினால் ஆன, இத் தல லிங்கத்தை புனுகு சார்த்தி வழிபட, தீரா நோய் அனைத்தும் தீர்கிறது.திருமண வரம் தந்து, கரு கொடுத்து, அதை நல்ல முறையில் காத்து, சுகப் பிரசவம் அளித்திடும் இந்த அம்பிகையும், தீரா நோய் தீர்க்கும் ஈசனும் வெகு நிச்சயமாக தரிசிக்கப்பட வேண்டியவர்கள்.

கதிராமங்கலம் " வனதுர்க்கை "

கும்பகோணத்தில் இருந்து மாயவரம் செல்லும் சாலையில் குத்தாலம் என்ற சிற்றூரின் அருகில் உள்ளது, கம்பரும் அகத்தியரும் வழிபட்ட வனதுர்க்கை குடிகொண்டுள்ள " கதிராமங்கலம் ". ராகு கால வேளை என்பது, ராகு பகவான் துர்க்கையை வழிபடும் நேரம், எனவே ராகு திசை வழிபாட்டிற்க்கான சிறந்த நேரம் ராகு காலமே. இந்த துர்க்கையை எலுமிச்சம்பழத் தோலில் நெய் விளக்கேற்றி, எலுமிச்சம் பழ மாலை சார்த்தி 9,11 அல்லது 21 வாரங்கள் வழிபட " புத்திர பாக்கியம் " கிட்டும் என்பது நிச்சயம்.

தஞ்சாவூர் மேல வீதி " சங்கர நாராயணன் "

கரிகால் சோழனின் வழி வந்த, பீம சோழ மன்னனால் கட்டப்பட்ட இந்த திருக்கோயில் சைவ, வைணவ ஒற்றுமையை உணர்த்துவது. வலப்புறம் பார்வதியையும், இடப் பக்கம் லஷ்மியையும் கொண்டு 5 அடி உயரத்தில் காட்சியளிக்கும் இத் தல மூர்த்தியின் சிலை சிவனையும், விஷ்ணுவையும் ஒருங்கே கொண்டது. இத் தலம் " குழந்தைப் பேறு அருளும் " புண்ணிய ஷேத்திரமாக விளங்குகிறது.

குழந்தை செல்வம் பெற " திருவெண்காடு"

நீண்ட நாட்களாக பிள்ளை இல்லாத தம்பதியர் இத் தலத்தில் உள்ள முக்குளத்தில் நீராடி இறைவனை தரிசனம் செய்தால் குழந்தைச் செல்வம் பெறுவர். இத் திருத்தலம் சீர்காழியிலிருந்து பூம்புகார் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. அச்சுதகளப்பாளர் என்னும் சிவனடியாருக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை.
ஒரு நாள் அவர், திருஞான சம்பந்தரின் திருவெண்காட்டு பதிகத்தை படிக்க, அதில் கூறியுள்ளாவாறு திருவெண்காட்டை அடைந்து அங்குள்ள சூரிய, சோம மற்றும் அக்னி என்ற மூன்று குளங்களிலும் நீராடி பரம்பொருளை வழிபட, அவர் வேண்டுதளுக்கிணங்க பெருமானும் குழந்தைச் செல்வத்தை அளித்தார். அக் குழந்தைதான், "சிவஞானபோதம்" எனும் பன்னிரு சூத்திரத்தை தந்த "மெய்க்கண்டார்" என்ற சிவஞான சித்தர். குழந்தை செல்வம் பெற விரும்புபவர்கள், திருவெண்காடு சென்று அங்குள்ள முக் குளங்களிலும் நீராடி சிவ பெருமானை வழிபட வேண்டும். தினமும் காலை வேளைகளில் பசுவிற்கு ஒரு பிடி புல் அல்லது பழம் அளிப்பது மேலும் சிறப்பு.