திங்கள், 19 ஜனவரி, 2015

கோவில்களும் கிரக சூட்சுமங்களும்





கோவில்களும் கிரக சூட்சுமங்களும் ............

தமிழ்நாடு முழுவதும் ஏராளமான அபூர்வ சக்தி படைத்த பல கோவில்கள் உள்ளன. இந்த கோவில்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரக பலன்களை நமக்குத் தரவல்லவை. இந்த அரிய கோவில்களை நமது முன்னோர்கள், நமது நன்மைக்காகவே கட்டிச்சென்றுள்ளனர்.

இவை அனைத்தும் மகத்தான மந்திர சக்தி பெற்றவையாகும். உலகில் எந்த ஒரு நாட்டுக்காரர்களுக்கும் இத்தகைய பாக்கியம் கிடைத்தது இல்லை. நமக்கு அந்த பாக்கியம் கிடைத்து இருப்பதால் பழமையான ஆலயங்களை நாம் பேணி, போற்றி பாதுகாக்க வேண்டும். இத்தகைய கிரக சக்தி கொடுக்கப்பட்ட கோவில்கள் ஒவ்வொன்றிலும் கருவறையில் மூலமூர்த்தி எழுந்தருளியிருக்கும் பீடத்திற்கு அடியில், ஒரு குறிப்பிட்ட மந்திர வீரிய சக்தி உள்ள யந்திரங்கள் பத்திரமாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

எல்லா கோவில்களிலும் மூலவருக்கு கீழ் யந்திரம் பதிக்கப்படுவதுண்டு. மூல, உற்சவ மூர்த்திகளின் குறிப்பிட்ட சக்திகளுக்கு உண்மையான காரணம் இந்த யந்திரங்களே. இவைதான் நமக்கு துணை புரிகின்றன. பொதுவாக நமக்கு உண்டாகும் பல கடுமையான தோஷங்களை விரட்ட பரிகாரங்கள் உள்ளன.

ஆனால் அந்த பரிகார பூஜைகளுக்கு நிறைய செலவாகும். ஏழைகள், நடுத்தர மக்களால அதிகம் செலவு செய்து அந்த பரிகாரங்களை செய்யவே முடியாது. ஆதலால், பொதுநலன் கருதி அனைவருக்குமே எளிதில் அதே பரிகாரம் கிடைப்பதற்காக நமது முன்னோர்கள் நமக்காகவே ஒவ்வொரு கிரகத்துக்கும் உரிய கோவில்களை நிர்மாணித்து அளித்துள்ளனர்.

சில யந்திரங்கள் கடன் தொல் லைகளைப் போக்கும். சில யந்திரங்கள் குறிப்பிட்ட வியாதி களுக்கு நிவாரணம் அளிக்கும். குடும்பத்தில் ஒற்றுமைக் குறைவு, குழந்தைப் பாக்கியம் இல்லாமை, செய்வினைக் கோளாறுகள், அகால மரணங்கள், பித்ரு தோஷங்கள், படிப்பில் தடைகள், நிரந்தர உத்தியோகம் கிடைப்பதில் பிரச்சினைகள், மேலதிகாரிகளினால் அமைதியின்மை.

திருமணத் தடை கள், தாம்பத்ய சுகக் குறைவு, தொழில் நஷ்டம், மனோ ரீதியான பிரச்சினைகள், உடல், மனவளர்ச்சி இல்லாமை, காரணமற்ற பயம், பெண்களுக்கு வெளியில் கூற முடியாமலும், தங்களுக்குள்ளேயே வைத்துக் கொண்டு மருகும் நிலை போன்ற ஒவ்வொரு துன்பத்திற்கும் யந்திர சக்தி பெற்ற கோவில்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ளன.

சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு, முக்காலமும் உணர்ந்த பெரியோர்கள் நமக்கு அளித்துச் சென்ற ஈடு, இணையற்ற செல்வங்களாக இவை உள்ளன

திருஷ்டி பரிகாரங்கள்


திருஷ்டி பரிகாரங்கள் .....................

கல்லடி - கண்ணடி “கல்லடி பட்டாலும் படலாம், கண்ணடி படக்கூடாது“. இது நம்முன்னோர்களின் அனுபவ மொழி. கெட்ட எண்ணங்களின் தொடர்ச்சியான தாக்குதலே கண் திருஷ்டி. இதற்கு கண்ணேறு என்றும் ஒரு பெயர் உண்டு. திருஷ்டி, மனிதர்களுக்கு மட்டும் அல்ல செடி, கொடி மரங்களுக்கும் உண்டு.
ஒரு மாந்தோப்பில் ஒரு மரத்தில் மாங்காய் கொத்து கொத்தாக காய்த்து தொங்கியது. அந்த வழியாக சென்ற ஒருவனின் பொறாமை பார்வை அதன்மீது பட்டது. ஒரு சில தினங்களிலே நன்றாக இருந்த மரம் அதன் செழிப்பை இழந்து, காய்களில் ஒருவித நோய் தாக்கி கீழே உதிர்ந்து விழுந்தன. அதே நேரத்தில் தோப்பிற்குள் இருந்த மற்ற மரங்கள் நன்றாக இருந்தன. இதைத்தான் கண் பார்வை தோஷம் என்பார்கள். கல்லால் அடித்து இருந்தால் இரண்டு, மூன்று மாங்காய்கள்தான் சேதமடைந்து இருக்கும். ஆனால் கண்ணடி பட்டதால் முழு மரத்துக்கும் சேதாரமாகி விட்டது.
ஆரத்தி, திலகம்: விசேஷ வைபவங்கள், சுபநிகழ்வுகளிலும், மணமக்கள் வீட்டினுள் வருதல், தாயும் குழந்தையும் முதல் முறை வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் ஆரத்தி எடுத்து திலகம் இடுவது சங்க காலம் தொட்டே இருந்து வருகிறது. ஆரத்தி எடுக்கும்போது பயன்படுத்தப்படும் குங்குமம் கலந்த நீர், வெற்றிலை மீது எரியும் கற்பூரம் ஆகியவற்றுக்கு தீய சக்திகளை விரட்டும் ஆற்றல் உண்டு.
வாழை மரம்: விசேஷங்களின்போது குலை தள்ளி, பூவுடன் இருக்கும் வாழைமரத்தை வாசலில் கட்டுவார்கள். இதற்கு காரணம் வாழைக்கு திருஷ்டி தோஷங்களை ஈர்த்துக் கொள்ளும் குணம் உண்டு என்பதுதான்.
வீட்டிற்குள் வைக்கும் பொருட்கள்: வீட்டுக்கு, அலுவலகத்துக்கு வருபவர்களின் பார்வையை, கெட்ட எண்ணங்களை, குரூர சிந்தனைகளை திசை திருப்புவதற்கு பெரிய முகம் பார்க்கும் கண்ணாடியை வரவேற்பறையில் அல்லது வீட்டின் உள்வாசலில் வைக்கலாம். மீன் தொட்டி வைத்து அதில் கருப்பு, சிகப்பு மீன்களை வளர்க்கலாம். கண் திருஷ்டி கணபதி படம் வைக்கலாம். மிக மெல்லிய வாத்ய இசை, மந்திரங்களை ஒலிக்க விடலாம். வாசலில் கற்றாழை, சப்பாத்தி கள்ளி, முள் அதிகம் உள்ள செடிகள், மஞ்சள் ரோஜா செடி ஆகியவற்றை வளர்க்கலாம். ஆகாச கருடன் என்று ஒரு வகை கிழங்கு உள்ளது. அதை வாங்கி மஞ்சள், சந்தனம், குங்குமம் வைத்து கருப்பு கம்பளி கயிற்றில் கட்டி வீட்டின் வாசலில் தொங்க விடலாம்.
உப்புக்குளியல்: வாரம் ஒருமுறை கல் உப்பை குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்து வர திருஷ்டியால் ஏற்படும் உடல் அசதி, சோம்பல் நீங்கும். குறிப்பாக அவரவர் பிறந்த கிழமை அல்லது செவ்வாய்க்கிழமையில் இவ்வாறு குளிக்கலாம்.
எலுமிச்சம்பழம்: வியாபாரத் தலங்களில் திருஷ்டி நீங்க எலுமிச்சம்பழத்தை அறுத்து ஒரு பகுதியில் குங்குமத்தை தடவியும், மற்றொரு பகுதியில் மஞ்சள் பொடியைத் தடவியும் வைக்கலாம். இதை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை செய்வது நலம் தரும். பழத்தை மாற்றும்போது முதலில் வைத்த பழத்தை மூன்று முறை கடையை சுற்றி தெருவில் வீசிவிடவும்.
கடல் நீர்: வளர்பிறையில் வரும் செவ்வாய், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்குச் சென்று கடல் நீரை எடுத்து வந்து அதில் மஞ்சள் பொடியை கலந்து கடை, அலுவலகம், வீடு ஆகியவற்றில் தெளிப்பது சிறந்த பரிகாரம்.
திதிகள்: அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் காலை, மாலை இருவேளையும் சாம்பிராணி பொடியுடன், கருவேலம்பட்டை பொடி, வெண் கடுகுத்தூள் ஆகியவற்றை கலந்து வீடு, கடை அலுவலகத்தில் தூப, தீப, புகை காட்ட திருஷ்டியும், தீய சக்திகளும் வெளியேறும்.

அரவான்


அரவான் .................

அர்ச்சுனனுக்கும்– உலுபியான நாகக் கன்னிக்கும் பிறந்தவன்தான் அரவான். பிறப்பிலேயே 32 லட்சணங்கள் கொண்டவன். எதிர் ரோமம் உடையவன். பாரதப் போரில் வெல்வது எப்படி? என்று யோசித்த துரியோதனன், ஜோதிடத்தில் வல்லவனான சகாதேவனிடம் ஆலோசனை கேட்டான். 

‘அரவானைப் பலியிட்டால் போரில் வெற்றி பெறலாம்’ என்று சகாதேவன் சகாயம் கூறினான். துரியோதனன் அரவானிடம் சென்றான். தனது பெரிய தந்தையை வரவேற்றான் அரவான். சகுனியின் ஆலோசனைப்படி வந்திருந்த துரியோதனன், ‘நாங்கள் போரில் வெற்றிபெற வருகின்ற அமாவாசை அன்று நீ எங்களுக்கு நரபலியாகி உதவ வேண்டும்’ என்று அரவானிடம் கேட்டான்.

அதற்கு அரவானும் சரியென்று ஒப்புக்கொண்டான். மேலும் ஒரு நிபந்தனையும் விதித்தான். அதாவது, ‘அமாவாசை வரை என் மேனி பின்னமாகாமல் இருந்தால், கண்டிப்பாக வருகிறேன்’ என்று உறுதி கூற மகிழ்வோடு திரும்பினான் துரியோதனன். அரவான், துரியோதனனுக்கு வாக்கு கொடுத்துவிட்டதை கண்ணன் அறிந்து கொண்டார்.

எனவே அமாவாசைக்கு முன்தினமாகிய சதுர்த்தசி அன்றே, அமாவாசை வரட்டும் என்று கண்ணன் கூற, அவ்வாறே அமாவாசை ஏற்பட்டது. இதற்கிடையில் அரவான் தங்களுக்காக நரபலி ஆக வேண்டும் என்று பாண்டவர்கள் வந்து கேட்டனர். ‘துரியோதனன் வந்து கேட்டதால், அவருக்காக நரபலியாக சம்மதம் கூறினேன்.

ஆனால் அமாவாசை வந்த பின்பும் அவர்களைக் காணவில்லை. எனவே உங்களுக்காக நரபலியாக சம்மதிக்கிறேன்’ என்று கூறினான் அரவான். மேலும் கண்ணனிடம் ஒரு வரத்தையும் கேட்டான் அரவான். அதாவது, ‘என்னைப் பலியிட்டாலும் என் தலைக்கு உயிர் இருக்க வேண்டும்.

அத்துடன் சாகும் முன்பாக ஒரு பெண்ணை, நான் திருமணம் முடிக்க வேண்டும்’ என்றான். கண்ணனும், ‘அப்படியே ஆகட்டும்’ என்றார். இதையடுத்து நடந்த போர்க்களத்தில் அரவான் பலியானான். அவனது உடல் மட்டும் அழிய, தலை உயிர் பெற்றது. பாரதப் போரில் பாண்டவர்கள் வென்றார்கள். இதனால் அரவானின் தலை மட்டும் திரவுபதி ஆலயங்களில் தவறாமல் இருக்கும்.

செவ்வாய், 13 ஜனவரி, 2015

ஸ்ரீ பைரவர் காயத்ரி மந்திரங்கள்



ஸ்ரீ பைரவர் காயத்ரி மந்திரங்கள்:

ஒம் ஷ்வானத் வஜாய வித்மஹே !
சூல ஹஸ்தாய தீமஹி !
தன்னோ பைரவ : ப்ரசோதயாத் !! 
ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே
ஸ்வாந வாஹாய தீமஹி
தந்நோ பைரவ: ப்ரசோதயாத்
ஓம் திகம்பராய வித்மஹே
தீர்கதிஷணாய தீமஹி
தந்நோ பைரவ: ப்ரசோதயாத்

Kalabhairava Ashtakam (காலபைரவ அஷ்டகம்)
Deva raja sevya mana pavangri pankajam,
Vyala yagna suthra mindu shekaram krupakaram,
Naradadhi yogi vrundha vandhitham digambaram,
Kasika puradhi nadha Kalabhairavam bhaje

அநுமன் மந்திரம்



நாம் வெளியே புறப்பட்டுச் செல்லும்பொழுது
சொல்ல வேண்டிய அநுமன் மந்திரம்.

ஓம் அபராஜித பிங்காக்ஷ நமஸ்தே ராம பூஜித||
பிரஸ்தானஞ்ச கரிஷ்யாமி ஸித்திர்பவது மேஸதா||

அவமானத்தை அடையாதவரும் ராமரால் கொண்டாடப்பட்டவருமாகிய அனுமானே! உனக்கு நமஸ்காரம்; நான் இப்போது பயணமாகிறேன். எனக்கு எப்போதும் காரிய சித்தியாகவேண்டும்.

Recite this Hanuman Mantra, when you go out. Salutations to Hanuman blessed by Lord Rama, let my travel be without hindrance and fruitful.

OM APARAAJIDHA PINGAAKSHA NAMSTHE RAAMA POOJITHA||
PRASTHAANANCHA KARISHYAAMI SIDHDHIRBAVATHU MESADHAA||


புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனூமத் ஸ்மரணாத் பவேத்

அனுமனை வணங்குவதால் கிடைக்கும் பயன்களைப் பேசும் இந்த சுலோகம் பிரபலமானது.

இந்த சுலோகத்தைப் பொருளுணர்ந்து சொன்னாலே போதும் ஒருவித மனவலிமை பெருகுவதை உணரமுடியும்.

நல்லவை செய்வதற்கு எவையெல்லாம் தேவையோ அவையெல்லாம் அனுமனை நினைப்பதால் கிடைக்கும் என்று இந்த சுலோகம் கூறுகிறது.

புத்திர் பலம் - அறிவில் வலிமை
யசோ - புகழ்
தைர்யம் - துணிவு
நிர்பயத்வம் - பயமின்மை
அரோகதா - நோயின்மை
அஜாட்யம் - ஊக்கம்
வாக் படுத்வம் - பேச்சு வலிமை
ச - இவையெல்லாம்
ஹனூமத் ஸ்மரணாத் - அனுமனை நினைப்பதால்
பவேத் - பிறக்கின்றன.

அறிவுக்கூர்மை, புகழ், துணிவு, பயமின்மை, நோயின்மை, ஊக்கம், பேச்சுத்திறன் போன்றவை அனுமனை நினைத்தவுடன் கிடைக்கின்றன!

ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்திரம்..



சகல பாக்யங்களையும் அளிக்கும் ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்திரம்.
1. அஸ்வினி .2. பரணி 3. கிருத்திகை 4. ரோஹிணி,5. மிருகசீர்ஷம், 6. திருவாதிரை. 7. புனர்பூசம் 8. பூசம் 9. ஆயில்யம்

 10. மகம் 11. பூரம் 12. உத்திரம் 13. ஹஸ்தம் 14. சித்திரை 15. ஸ்வாதி 17. அனுஷம் 18. கேட்டை 19. மூலம் 20. பூராடம் 21. உத்தராடம் 22. திருவோணம் 23. அவிட்டம் 24. சதயம் 25. பூரட்டாதி 26. உத்தரட்டாதி
27. ரேவதி

ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்திரம் இந்த ஸ்லோகத்தை அவரவர் நக்ஷத்திரத்திற்கு கீழே உள்ள ஸ்லோகத்தை தினம் பாராயணம் செய்து வர சகல காரியங்களும் வெற்றி உண்டாகும்.

திருவாதிரை நட்சத்திர திருநாட்கள், மாத சிவராத்திரி தினங்கள், பிரதோஷ காலம், சோமாவாரம் (திங்கட்கிழமை) ஆகிய புண்ணிய தினங்களில், உடல் உள்ள சுத்தியுடன் இந்த ஸ்லோகங்களைப் பாடி, வில்வம் சமர்ப்பித்து சிவபெருமானை வழிபட கஷ்டங்கள் விலகும்; எண்ணியது ஈடேறும்.


1. அஸ்வினி

1. ஸ்ரீமதாத்மனே குணைகஸிந்தவே நம: சிவாய தாமலேச தூதலோக பந்தவே நம: சிவாய
நாம சோஷிதா நமத் பவாந்தவே நம: சிவாய பாமரேதர ப்ரதாத பாந்தவே நம: சிவாய

பொருள் : ஐஸ்வர்யம் மிகுந்தவரும் குணக்கடலும், தன் ஒளித் திவலைகளால் சூரியனின் ஒளியைத் தோற்கடிப்பவரும், தன்னுடைய திருப்பெயரைச் சொல்பவருக்கு பந்துவாகவும், ஞானிகளுக்கு பிரதான பந்துவாகவும் விளங்கும் சிவபெருமானுக்கு நமஸ்காரம் (இது நான்கு முறை சொல்லப்படுகிறது).

2. பரணி

2. கால பீதவிப்ரபால பாலதே நம: சிவாய சூல பின்ன துஷ்ட தக்ஷபாலதே நம: சிவாய
மூல காரணீய கால காலதே நம: சிவாய பாலயாதுனா தயாலவாலதே நம: சிவாய

பொருள் : யமனுக்குப் பயந்திருந்த அந்தணக் குழந்தையான மார்க்கண்டேயனைக் காத்தருளியவரும், வீரபத்திரமூர்த்தியாக அவதரித்து தட்சனைக் கொன்றவரும், அனைத்திற்கும் மூல காரணமானவரும், காலத்துக்கு மேம்பட்டவரும், கருணைக்கு இருப்பிடமுமாக விளங்கும் உமக்கு வணக்கம். இப்போது என்னைக் காப்பாற்றும்.

3. கிருத்திகை

இஷ்ட வஸ்து முக்யதான ஹேதவேநம: சிவாய துஷ்ட, தைத்யவம்ச, தூமகேதவே நம: சிவாய
ஸ்ருஷ்டி ரக்ஷணாய தர்ம ஸேதவே நம: சிவாய அஷ்ட மூர்த்தயே வ்ருஷேந்ர கேதவே நம: சிவாய
பொருள் : இஷ்டப்பட்ட சிறந்ததான பொருளைக் கொடுப்பதில் காரணமானவரும், முப்புரத்திலுள்ள அரக்கர் வம்சத்துக்கு தூமகேதுவானவரும், படைக்கும் தொழில் நடப்பதற்கான தர்மத்தைக் காப்பவரும், பூமி, ஆகாயம், ஜலம், தேஜஸ், காற்று, சூரியன், சந்திரன், புருஷன் ஆகிய எட்டையும் தன் உருவாய்க் கொண்டவரும், ரிஷபக் கொடியோனும் ஆகிய சிவனுக்கு வணக்கம்


4. ரோஹிணி

ஆபதத்ரி பேத டங்க ஹஸ்ததே நம: சிவாய பாப ஹாரி திவ்ய ஸிந்து மஸ்ததே நம: சிவாய
பாப தாரிணே லஸன்ந மஸ்ததே நம: சிவாய சாப தோஷ கண்டன ப்ரசஸ்ததே நம: சிவாய

பொருள் : மலை போன்ற ஆபத்துகளைப் போக்கடிக்கும் மழு ஆயுதத்தைக் கையில் வைத்திருப்பவரும், ஜனங்களின் பாவங்களைப் போக்கும் தேவ நதியான கங்கையை முடியில் உடையவரும், பாபங்களைப் போக்குபவரும், சாபத்தினால் ஏற்படும் தோஷங்களைக் கண்டிக்கிற சிவமுமாகிய உமக்கு வணக்கம்.

5. மிருகசீர்ஷம்

வ்யோம கேச திவ்ய ஹவ்ய ரூபதே நம: சிவாய ஹேம மேதி னீ தரேந்ர சாப தே நம: சிவாய
நாம மாத்ர தக்த ஸர்வ பாபதே நம: சிவாய காமிநைக தாந ஹ்ருத்துராபதே நம: சிவாய

பொருள் : ஆகாயத்தைக் கூந்தலாக உடையவரும், ஒளிரும் மங்கள உருவத்தை உடையவரும், சிவ எனும் பெயரைச் சொல்வதாலேயே பாபக்கூட்டங்களை எரிப்பவரும், ஆசை நிறைந்த உள்ளம் <உடையவருக்கு அடையமுடியாதவருமாகிய சிவபெருமானுக்கு வணக்கம்.

6. திருவாதிரை

ப்ரம்ம மஸ்தகாவலீ நிபத்ததே நம: சிவாய ஜிம் ஹகேந்ர குண்டல ப்ரஸித்ததே நம: சிவாய
ப்ரம்மணே ப்ரணீத வேத பந்ததே நம: சிவாய ஜிம்ஹ கால தேஹ தத்த பந்ததே நம: சிவாய

பொருள் : ஸத்யோஜாதம், வாமதேவம், அகோரம், தத்புருஷம், ஈசானம் ஆகிய ஐந்து முகங்கள் கொண்டவரும், பெரிய பாம்பினை குண்டலமாகக் கொண்டவரும், வேதங்களின் முறையை வகுத்துக் கொடுத்த பிரும்ம உருவமானவரும், யமனுக்கு உயிர் கொடுத்தவருமான சிவனுக்கு வணக்கம்.

7. புனர்பூசம்

காமநாசனாய சுத்த கர்மணே நம: சிவாய ஸாம கான ஜாயமான சர்மணேநம: சிவாய
ஹேம காந்தி சாக சக்ய வர்மணே நம: சிவாய ஸாம ஜாஸூராங்க லப்த சர்மணே நம: சிவாய

பொருள் : தன்னலம் கருதாது செய்யப்படும் கர்மாவை ஏற்றுக்கொண்டு ஆசையைப் போக்கடிப்பவரும், ஸாம வேதத்தைப் பாடுவதால் சவுக்கியத்தைக் கொடுப்பவரும், பொன்னிறமான கவசத்தை உடையவரும், பார்வதிதேவியின் ஸம்பந்தத்தினால் சவுக்கியமுற்றவருமான சிவனுக்கு வணக்கம்.

8. பூசம்

ஜன்ம ம்ருத்யு கோரதுக்க ஹாரிணே நம: சிவாய சின்மயை கரூப தேஹ தாரிணே நம: சிவாய
மன்மனோ ரதாவ பூர்த்தி காரிணே நம: சிவாய மன்மனோகதாய காம வைரிணே நம: சிவாய

பொருள் : பிறப்பு - இறப்பு எனும் மிகக் கடுமையான பிணியைப் போக்கடிப்பவரும், ஞானத்தையே ஒரே உருவமாயுடையவரும், என் மனத்தின் இஷ்டத்தை நிறைவேற்றுகிறவரும், ஸாதுக்களின் மனத்தில் உள்ளவரும், காமனுக்கு சத்ருவுமான சிவனுக்கு வணக்கம்.

9. ஆயில்யம்

யக்ஷராஜ பந்தவே தயாளவே நம: சிவாய ரக்ஷ பாணி சோபி காஞ்ச நாளவே நம: சிவாய
பக்ஷிராஜ வாஹ ஹ்ருச் சயாளவே நம: சிவாய அக்ஷி பால வேத பூத தாளவே நம: சிவாய

பொருள் : யக்ஷர்களின் அரசனான குபேரனுக்கு நெருங்கிய தோழரும், தயையுடையவரும், பொன் மயமான வில்லை வலக் கரத்தில் கொண்டவரும், கருட வாகனம் உள்ள மகாவிஷ்ணுவின் இருதய தாபத்தைப் போக்குபவரும், நெற்றிக்கண்ணரும், மறைகளால் போற்றப்பட்ட திருவடிகளை உடையவருமான சிவபெருமானுக்கு வணக்கம்.
 

10. மகம்

தக்ஷ ஹஸ்த நிஷ்ட ஜ்õத வேதஸே நம: சிவாய அக்ஷராத்மனே நமத்பி டௌ ஜஸே நம சிவாய
தீஷித ப்ரகாசிதாத்ம தேஜஸே நம: சிவாய உக்ஷராஜ வாஹதே ஸதாம் கதே நம: சிவாய

பொருள்: வலது கையில் அக்னியை வைத்திருப்பவரும், அக்ஷரம் எனும் பரமாத்மாவைக் குறிக்கும் சொல்லுக்கு உரித்தானவரும், இந்திரனால் வணங்கப்பட்டவரும், சிவ பஞ்சாக்ஷர தீøக்ஷ பெற்றவர்களுக்கு ஆத்ம ஒளியைக் காட்டுபவரும், தர்ம ரூபமான காளையை வாகனமாக உடையவரும், சாதுக்களுக்கு நல்வழியை அருள்பவருமான சிவபெருமானுக்கு வணக்கம்.

11. பூரம்

ராஜிதாசலேந்ர ஸாநு வாஸிநே நம: சிவாய ராஜமான நித்ய மந்த ஹாஸினே நம: சிவாய
ராஜகோர காவ தம்ஸ பாஸினே நம: சிவாய ராஜராஜ மித்ரதா ப்ரகாசினே நம: சிவாய

பொருள் : வெள்ளி மலை என்று பெயர்பெற்ற கயிலையங்கிரியில் வசிப்பவரும், புன்சிரிப்புடன் கூடியவரும், ராஜஹம்ஸம் எனும் பட்சி மாதிரி சிறந்து விளங்குபவரும், குபேரனின் தோழன் என்பதை வெளிப்படுத்துபவருமான சிவனுக்கு வணக்கம்.

12. உத்திரம்

தீனமான வாளி காம தேனவே நம: சிவாய ஸூந பாண தாஹ த்ருக் க்ருசானவே நம: சிவாய
ஸ்வாநு ராக பக்த ரத்ன ஸானவே நம: சிவாய தானவாந்தகார சண்ட பானவே நம: சிவாய

பொருள் : ஏழைகளுக்குக் காமதேனு எனும் தேவலோகத்துப் பசுவை போன்றவரும், புஷ்பங்களை அம்பாக உடைய மன்மதனை எரித்த அக்னியானவரும், தன்னுடைய பக்தர்களுக்கு மேரு மலை போன்றவரும், அரக்கர் கூட்டமாகிய இருளுக்குக் கடுமையான கதிரவன் போன்றவருமான சிவபெருமானுக்கு வணக்கம்.

13. ஹஸ்தம்

ஸர்வ மங்களா குசாக்ர சாயினே நம: சிவாய ஸர்வ தேவதா கணாத் சாயினே நம: சிவாய
பூர்வ தேவ நாச ஸம்விதாயினே நம: சிவாய ஸர்வ மன் மனோஜ பங்க தாயினே நம: சிவாய

பொருள் : ஸர்வமங்களை எனப் பெயர் பெற்ற அம்பிகையுடன் இருப்பவரும், எல்லா தேவ கூட்டத்துக்கும் மேற்பட்டவரும், அரக்கர் குலத்தை வேரறுப்பவரும், எல்லோருடைய மனத்திலும் உண்டாகும் ஆசையை அகற்றுபவருமான சிவனுக்கு வணக்கம்.

14. சித்திரை

ஸ்தோக பக்திதோபி பக்த போஷிணே நம: சிவாய மாகரந்த ஸாரவர்ஷ பாஸிணே நம: சிவாய
ஏகபில்வ தானதோபி தோஷிணே நம: சிவாய நைகஜன்ம பாப ஜால சோஷிணே நம: சிவாய

பொருள் : குறைந்த அளவு பக்தி செய்யும் பக்தர்களையும் வளர்ப்பவரும், குயில் மாதிரி பேச்சு உடையவரும், ஒரு வில்வத்தைக் கொடுத்தாலே மகிழ்ச்சி அடைபவரும், பல பிறவிகளில் செய்த பாபங்களை எரிப்பவருமான சிவனுக்கு வணக்கம்.

15. ஸ்வாதி

ஸர்வ ஜீவரக்ஷணைக் சீலினே நம: சிவாய பார்வதீ ப்ரியாய பக்த பாலினே நம: சிவாய
துர்விதக்த தைத்ய ஸைன்ய தாரிணே நம: சிவாய சர்வரீச தாரிணே கபாலினே நம: சிவாய

பொருள் : எல்லாப் பிராணிகளையும் காப்பாற்றுவதில் கருத்துள்ளவரும், பார்வதி தேவிக்குப் பிரியமானவரும், பக்தர்களைக் காப்பவரும், தப்புக் காரியங்களில் ஈடுப்படும் அரக்கர் சைன்யத்தை அழிப்பவரும், சந்திரனை முடியில் உடையவரும், கபாலத்தைக் கையில் உடையவருமான சிவனுக்கு வணக்கம்..




17. அனுஷம்

மங்களப் ரதாயகோ துரங்கதே நம: சிவாய கங்கையா தரங்கி தோத்த மாங்காதே நம: சிவாய
ஸங்கத ப்ரவிருத்த வைரி பங்கதே நம: சிவாய அங்கஜாரயே கரே குரங்கதே நம: சிவாய

பொருள் : மங்களத்தைச் செய்பவரும், ரிஷப வாகனத்தை உடையவரும், அலைமோதும் கங்கையை தலையில் உடையவரும், போரில் இறங்கிய சத்ருக்களை ஒழிப்பவரும், மன்மதனுக்கு சத்ருவும், கையில் மானை உடையவருமான சிவனுக்கு வணக்கம்.

18. கேட்டை

ஈஹித க்ஷண ப்ரதாந ஹேதவே நம: சிவாய அக்னி பால ச்வேத உக்ஷ கேதவே நம: சிவாய
தேஹ காந்தி தூத ரௌப்ய தாதவே நம: சிவாய கேஹ துக்க புஜ்ஜ தூமகேதவே நம: சிவாய

பொருள் : பக்தர்கள் வேண்டியதைக் கொடுப்பவரும், யாகம் செய்பவர்களைக் காப்பவரும், ரிஷபக் கொடியோனும், வெள்ளியைத் தோற்கடிக்கும் உடற்காந்தி (உடலில் ஒளியை) உடையவரும், வீட்டில் உண்டாகும் துயரங்களை எல்லாம் அடியோடு தொலைப்பவருமான சிவபெருமானுக்கு வணக்கம்.

19. மூலம்

திரியக்ஷ தீன ஸத்க்ருபா கடாக்ஷதே நம: சிவாய தக்ஷ ஸப்த தந்து நாச தக்ஷதே நம: சிவாய
ருக்ஷராஜ பானு பாவகாக்ஷதே நம: சிவாய ரக்ஷமாம் ப்ரஸன்ன மாத்ர ரக்ஷதே நம: சிவாய

பொருள் : முக்கண்ணரும், எளியவர்களிடத்தில் கருணையுடையவரும், தக்ஷ ப்ரஜாபதியின் யாகத்தை நாசம் செய்தவரும், சந்திரன், சூரியன், அக்னி மூவரையும் கண்களாய் உடையவரும், வணங்கிய பக்தர்களை தாமதமில்லாமல் காப்பவருமாகிய சிவபெருமானுக்கு நமஸ்காரம்.

20. பூராடம்

அந்ரி பாணயே சிவம் கராயதே நம: சிவாய ஸங்கடாத் விதீர்ண கிம்கராயதே நம: சிவாய
பங்க பீஷிதா பயங்கராயதே நம: சிவாய பங்க ஜாஸனாய சங்கராயதே நம: சிவாய

பொருள்: மங்களத்தைச் செய்பவரும், துயரமெனும் சமுத்திரத்தை கடக்கவைப்பதில் படைவீரன் போன்றவரும், சம்சாரக் கடலுக்கு பயந்தவர்களின் பயத்தைப் போக்கடிப்பவரும், தாமரைக் கண்ணரும், சுகத்தை அருள்பவருமாகிய சிவனாருக்கு நமஸ்காரம்.

21. உத்தராடம்

கர்மபாச நாச நீலகண்டதே நம: சிவாய சர்ம தாய நர்ய பஸ்ம கண்டதே நம: சிவாய
நிர்ம மர்ஷி ஸேவி தோப கண்டதே நம: சிவாய குர்மஹே நதீர்ந மத்விகுண்டதே நம: சிவாய

பொருள்: கர்மாவாகிற கயிற்றை அழிக்கிற நீலகண்டரும், சுகத்தைக் கொடுப்பவரும், சிறந்த திருநீற்றை கழுத்தில் தரித்தவரும், தன்னுடையது எனும் எண்ணம் நீங்கப்பெற்ற மகரிஷிகளை அருகில் கொண்டவரும், விஷ்ணுவால் நமஸ்கரிக்கப்பட்டவருமான சிவனாரைப் பலமுறை நமஸ்கரிக்கிறேன்.

22. திருவோணம்

விஷ்ட பாதிபாய நம்ர விஷ்ணவே நம: சிவாய சிஷ்ட விப்ர ஹ்ருத்குஹா வரிஷ்ணவே நம: சிவாய
இஷ்ட வஸ்து நித்ய துஷ்ட ஜிஷ்ணவே நம: சிவாய கஷ்ட நாசனாய லோக ஜிஷ்ணவே நம: சிவாய

பொருள்: சுவர்க்கத்துக்குத் தலைவரும், விஷ்ணுவால் நமஸ்கரிக்கப்பட்டவரும், ஒழுக்கமுள்ள அந்தணர்களின் இதயக்குகையில் சஞ்சரிப்பவரும், தானே பிரும்மம் எனும் அனுபவத்தில் எப்போதும் மகிழ்ச்சி உள்ளவராகவும், புலன்களை அடக்கியவரும், பக்தர்களது துயரத்தைத் துடைப்பவரும், உலகத்தை ஜெயிப்பவருமான சிவனாருக்கு நமஸ்காரம்....




23. அவிட்டம்
அப்ரமேய திவ்ய ஸூப்ரபாவதே நம: சிவாய ஸத்ப்ரபன்ன ரக்ஷண ஸ்வபாவதே நம: சிவாய
ஸ்வப்ரகாச நிஸ்துலா நுபாவதே நம: சிவாய விப்ர டிம்ப தர்சிதார்த்ர பாவதே நம: சிவாய

பொருள்: அளவிடமுடியாத தெய்விக மகிமை பொருந்தியவரும், தன்னைச் சரணடைந்த நல்ல ஜனங்களைக் காப்பதில் நாட்டமுற்றவரும், தன்னிடத்திலேயே ஒளிரும் அளவில்லாத ஆத்மானுபவத்தை உடையவரும், அந்தணக் குழந்தையிடம் (மார்க்கண்டேயர்) தன் அன்பைக் காட்டியவருமான சிவனுக்கு நமஸ்காரம்.
24. சதயம்
ஸேவ காயமே ம்ருட ப்ரஸாதினே நம: சிவாய பவ்ய லப்ய தாவக ப்ரஸீத தே நம: சிவாய
பாவ காக்ஷ தேவ பூஜ்ய பாததே நம: சிவாய தாவ காங்க்ரி பக்த தத்த மோத தேநம: சிவாய
பொருள் : பரமேஸ்வரா! உம்முடைய வேலைக்காரனான என்னிடம் கருணை காட்டும். இதயத்தில் பாவனை செய்யும் அளவுக்கு அருள்புரிபவரும், நெப்பைக் கண்ணாக உடையவரும், தேவர்களும் வணங்கித் தொழும் திருவடியை உடையவரும், தன்னுடைய திருவடியை நமஸ்கரிக்கும் பக்தர்களுக்கு அளவற்ற மகிழ்ச்சியைக் கொடுப்பவருமான சிவனுக்கு நமஸ்காரம்.
25. பூரட்டாதி
புக்தி முக்தி திவ்ய தாய போகினே நம: சிவாய சக்தி கல்பித ப்ரபஞ்ச பாகினே நம: சிவாய
பக்த ஸங்கடாபஹர யோகினே நம: சிவாய யுத்த ஸன்மனஸ் ஸரோஜ யோகினே நம: சிவாய
பொருள் : இன்பம், வீடு, தேவலோகத்து அனுபவம் ஆகியவற்றைக் கொடுப்பவரும், தனக்கு அடக்கமான மாயையினால் தோற்றுவிக்கப்பட்ட உலகத்தில் சம்பந்தமுள்ளவரும், தன் பக்தர்களின் துயரத்தைப் போக்குவதிலேயே கவனம் உள்ளவரும், ஸாதுக்களின் மனதாகிய தாமரையில் வசிக்கும் யோகியுமான சிவனாருக்கு நமஸ்காரம்.
26. உத்தரட்டாதி
அந்த காந்த காய பாப ஹாரிணே நம: சிவாய சம்தமாய தந்தி சர்ம தாரிணே நம: சிவாய
ஸந்த தாச்ரிவ்யதா விதாரிணே நம: சிவாய ஜந்து ஜாத நித்ய ஸெளக்ய காரிணே நம: சிவாய
பொருள் : காலனுக்குக் காலனானவரும், பாபத்தைப் போக்குபவரும், மாயையை அடக்கியவரும், எப்போதும் உள்ள துயரத்தைத் துடைப்பவரும், பிறந்த ஜீவனுக்கு நித்ய சவுக்கியம் எனும் பேரின்பத்தை அளிப்பவருமான சிவனாருக்கு நமஸ்காரம்.
27. ரேவதி
சூலினே நமோ நம: கபாலினே நம: சிவாய பாலினே விரிஞ்சி துண்ட மாலினே நம: சிவாய
லீலனே விசேஷ முண்ட மாலிநே நம: சிவாய சீலினே நம ப்ரபுண்ய சாலினே நம: சிவாய
பொருள் : சூலத்தையும் ஓட்டையும் கையில் வைத்திருப்பவருக்கு நமஸ்கரிக்கும். ஜீவர்களைக் காப்பவரும், பிரம்மாவின் கபாலத்தை உடையவரும், ஜனங்களின் நன்மைக்காக பல அவதாரங்களை எடுத்து நன்மை செய்பவரும், நிறைய புண்ணியம் செய்தவர்களாலேயே அடையக்கூடியவருமான சிவனுக்கு நமஸ்காரம்.
ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்திரம் இந்த ஸ்லோகத்தை அவரவர் நக்ஷத்திரத்திற்கு கீழே உள்ள ஸ்லோகத்தை தினம் பாராயணம் செய்து வர சகல காரியங்களும் வெற்றி உண்டாகும்.
திருவாதிரை நட்சத்திர திருநாட்கள், மாத சிவராத்திரி தினங்கள், பிரதோஷ காலம், சோமாவாரம் (திங்கட்கிழமை) ஆகிய புண்ணிய தினங்களில், உடல் உள்ள சுத்தியுடன் இந்த ஸ்லோகங்களைப் பாடி, வில்வம் சமர்ப்பித்து சிவபெருமானை வழிபட கஷ்டங்கள் விலகும்; எண்ணியது ஈடேறும்

Dravidian Prayers