செவ்வாய், 16 டிசம்பர், 2014

இறைபக்தி- செய்யக் கூடாத செயல்கள் என்ன?

இறைபக்தி உடையவர்கள் கண்டிப்பாக செய்யக் கூடாத செயல்கள் என்னென்ன? – தெரிந்து கொள்க•
1. புண்ணிய தீர்த்தங்களில் வந்தவுடன் காலை வைக்க க்கூடாது. முதலில் நீரை தலையில் தெளித்துக் கொண்டு கால் அலம்ப வேண்டும். குளத்தில் கல்லைப் போட க்கூடாது.
2. பூஜை வேளையில் தீபத்தை ஆடவர்கள் அணைக்கக் கூடாது. பூசணிக்காயை பெண்கள் உடைக்கக் கூடாது.
3. கோயிலை வேகமாக வலம் வருதல் கூடாது.
4. எவருடனும் வீண் வார்த்தைகள் கோயிலில் வைத்து பேசக்கூடாது.
5. தாம்பூலம் தரித்துக் கொண்டு கோயிலுக்குள் செல்ல க்கூடாது.
6. மூர்த்தகளைத் தொடுதலோ, மூர்த்திகளின் திருவடிக்கருகில் கற்பூரம் ஏற்றுதல் கூடாது.
7.சுவாமிக்கு நிவேதனம் ஆகும்போது பார்த்தல்கூடாது
8. வஸ்திரத்தை போர்த்திக் கொண்டு ஜபம், பிரதக்ஷி ணம், நமஸ்காரம், பூஜை, ஹோமம் செய்யக்கூடாது.
9. பசுவிற்கும், அந்தணருக்கும் நடுவிலும், அந்தணர் அக்னியின் நடுவிலும், தம்பதிகளின் நடுவிலும், தேவ தைகள் பலிபீடத்திற்கு நடுவிலும், குரு சிஷ்யரின் நடு விலும், லிங்கத்திற்கும் நந்திக்கும் நடுவிலும் செல்ல க்கூடாது
10.இரவில் துணி துவைக்கக்கூடாது. குப்பையை வெளி யே கொட்டக் கூடாது. மரத்தில் நிழலில் தங்கக் கூடாது. ரகசியமான விஷயத்தைப் பேசக் கூடாது.
11. அன்னம், உப்பு, நெய் இவைகளை கையால் பரிமாறக் கூடாது.
12. ஒரே சமயத்தில் தனது இரு கைகளாலும் தன்னு டைய தலையை சொறியக்கூடாது.
13. ஆயுள், பொருள், வீட்டுத்தகராறு, மந்திரம், உடலுற வு, மருந்து, வருமானம், தானம், அவமானம் இந்த ஒன்பதும் பிறருக்குத் தெரியக்கூடாது.
14. சந்தியா கால வேளையில் சாப்பாடு, தூக்கம், உடலுறவு, அத்யயனம் இவைகள் செய்தல் கூடாது.
15. தீபாவளி தவிர மற்ற நாட்களில் அதிகாலைப் பொ ழுதில் எண்ணெய் தேய்த்துக் கொள்ளக்கூடாது.
16. இடது கையினால் நீர் அருந்தக்கூடாது.
இணையத்தில் படித்தவை

ஞாயிறு, 7 டிசம்பர், 2014

இதுவும் மதமாற்றம் தான்

இதுவும் மதமாற்றம் தான் 

 Kumar Kandasamy என்பவர் சொன்னது 

அச்சரப்பாக்கத்தில் நான் பணியாற்றிய பொழுது வழக்கமாக எனக்கு வரும் கார் டிரைவர் 
வரவில்லை. மறுநாள் தன் குழந்தை படிக்கும் ஒரு கிறிஸ்தவ பள்ளியில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வரமுடியவில்லை என்று கூறினார். விசாரித்த போது அவர் கூறிய
தகவல் அதிர்ச்சி ரகம்.


அச்சரப்பாக்கத்தை சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான குழந்தைகள் அந்த பள்ளியில் படித்து வருகின்றனர். பள்ளி பஸ்களில் காலையும் மாலையும் சென்று வருகின்றனர். புதிய சேர்க்கை முடிந்ததும் LKG UKG குழந்தைகள் மொத்தமாக தனி பஸ்ஸில் மாலை வீட்டுக்கு பள்ளி முடிந்ததும் அனுப்பபடுவார்கள். அவர்களுடன் ஒரு
கன்னியாஸ்திரியும் பயணிப்பார். பஸ் கொஞ்ச தூரம் சென்றவுடன் மக்கர் செய்து நின்று
விடும். பஸ் டிரைவர் ஸ்டார்ட் செய்ய முயற்சி செய்தும் பஸ் நகராது. பஸ்ஸில் பெரும்பாலான குழந்தைகள் இந்து குழந்தைகள். உடனே கன்னியாஸ்திரி இந்து குழந்தைகளை பார்த்து உங்கள் கடவுளை பிரார்த்தனை செய்யுங்கள் பஸ் கிளம்புகிறதா
பார்க்கலாம் என்று சொன்னவுடன் பிள்ளையாரையும் முருகனையும் பிரார்த்தனை செய்ய
பஸ் கிளம்பாது. 


இரண்டு மூன்று தடவைக்கு பிறகு அந்த கன்னியாஸ்திரி ஏசுவை
பிரார்த்தனை செய்ய சொல்வார். உடனே பஸ் கிளம்பிவிடும்.. குழந்தைகள் கை தட்டி ஆரவாரம் செய்ய இனிமேல் நீங்கள் ஏசுவையே கும்பிடுங்கள் ஏனெனில் அவர் தான் உண்மை கடவுள் என்பார். குழந்தைகளுக்கு தெரியுமா இது பஸ் டிரைவரும்
கன்னியாஸ்திரியும் சேர்ந்து நடத்தும் நாடகம் என்று.


 குழந்தைகள் ஏசு வழிபாட்டை
வீட்டிலும் தொடர பெற்றவர்கள் பேராட்டத்தில் இறங்க போலீஸ் தலையிட்டு பள்ளி
நிர்வாகம் கண்டிக்கப்பட்டது.
இளம் பிஞ்சுகள் மனதில் எப்படி நஞ்சை விதைக்கிறார்கள் என்று பாருங்கள்.

சனி, 6 டிசம்பர், 2014

சுதர்ஸன மஹாமந்திரம்

சுதர்ஸன மஹாமந்திரம்

ஆபத்துக்கள் விலக சுதர்ஸன மஹாமந்திரம்
(share) செய்யுங்கள்)
சுதர்சன மஹாமந்திரத்தை தினமும் காலையில் சொன்னால், அஞ்ஞான இருள் விலகும். 
எல்லா பிரச்சனைகளும் மறைந்து போகும்.
ஆபத்து நீங்கும். பயம் விலகும்.தைரியம் பிறக்கும்.
சந்தோஷம் நிலைக்கும்.பில்லி, சூன்ய, ஏவல்கள், எதிரிகள் தொல்லை, நாள்பட்ட வியாதி, மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள், புத்தி ஸ்வாதீனம் இன்மையால் சிரமப்படுவோர், ஜாதகப்படி மத்திம ஆயுள் போன்ற உபாதைகள் உள்ளவர்கள்சுதர்ஸன மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் அனைத்துக் குறைகளும் நீங்கும்
ஸ்ரீசுதர்சனரின் நாள் வியாழக்கிழமை. இந்நாளில் அவருக்கு சிவப்பு மலர்களால் மாலை சூட்டி வழிபட்டால் நினைத்த நல்ல காரியங்களில் வெற்றி கிட்டும்.சுதர்சனம் என்று சொல்லக்கூடிய சக்கரத்தாழ்வாரை மனமுருகி வழிபட்டால் நினைத்தது நிறைவேறும். பில்லி சூனியம் விலகும். மன பயம் அகலும், வீண் குழப்பங்கள் தீரும். எதிரிகள், எதிர்ப்புகள் ஒழியும்.
விடியற்காலையில் சூரிய உதயத்திற்கு முன்பு குளித்து, சுத்தமான உடை அணிந்து கிழக்கு நோக்கி அமர்ந்து, கண்ணை மூடிக்கொண்டு குறைந்தபட்சம் ஒன்பது
தடவை - கூடிய பட்சம் 108 தடவை பாராயணம் செய்தால் அவர்களுக்கு பீடைகள் ஒழியும். சௌபாக்கியம் பிறக்கும்.
மஹா சுதர்ஸன மஹாமந்திரம்
ஓம் க்லீம் க்ருஷ்ணாய ஹ்ரீம் கோவிந்தாய ஸ்ரீம் கோபி
ஜனவல்லபாய ஓம்பராய பரமபுருஷாய பரமாத்மனே!
மமபரகர்ம மந்த்ர தந்த்ர யந்த்ர ஒளஷத அஸ்த்ர
ஸஸ்த்ர வாதப்ரதிவாதானி ஸம்ஹர ஸம்ஹர
ம்ருத்யோர் மோசய மோசய ஓம் மஹா சுதர்சனயா
தீப்த்ரே ஜ்வாலா பரிவ்ருதாய ஸர்வதிக் க்ஷோபனஹராய
ஹும்பட் பரப்ரஹ்மணே ஸ்வாஹா

சுப்ரமண்ய அஷ்டோத்ரம்‬

01. ஓம் ஸ்கந்தாய நமஹ
02. ஓம் குஹாய நமஹ
03. ஓம் ஷண்முகாய நமஹ
04. ஓம் பால நேத்ரஸுதாய நமஹ
05. ஓம் ப்ரபவே நமஹ
06. ஓம் பிங்களாய நமஹ
07. ஓம் க்ருத்திகா ஸுனவே நமஹ
08. ஓம் ஷிகிவாஹனாய நமஹ
09. ஓம் த்விஷட் புஜாய நமஹ
10. ஓம் த்விஷண் நேத்ராய நமஹ
11. ஓம் ஷக்தி தராய நமஹ
12. ஓம் பிஸிதாஸ ப்ரபஞ்சனாய நமஹ
13. ஓம் தாரகாஸுர ஸம்ஹாரிணே நமஹ
14. ஓம் ரஷோபல விமர்த்தனாய நமஹ
15. ஓம் மத்தாய நமஹ
16. ஓம் ப்ரமத்தாய நமஹ
17. ஓம் உன்மத்தாய நமஹ
18. ஓம் ஸுரஸைன்ய ஸுரக்ஷகாய நமஹ
19. ஓம் தேவசேனாபதயே நமஹ
20. ஓம் ப்ராக்ஞாய நமஹ
21. ஓம் க்ருபாளவே நமஹ
22. ஓம் பக்த வத்ஸலாய நமஹ
23. ஓம் உமா ஸுதாய நமஹ
24. ஓம் சக்தி தராய நமஹ
25. ஓம் குமாராய நமஹ
26. ஓம் க்ரெளஞ்சதாரணாய நமஹ
27. ஓம் ஸேனான் யே நமஹ
28. ஓம் அக்னிஜன்மனே நமஹ
29. ஓம் விசாகாய நமஹ
30. ஓம் சங்கராத்மஜாய நமஹ
31. ஓம் சிவஸ்வாமினே நமஹ
32. ஓம் கணஸ்வாமினே நமஹ
33. ஓம் ஸர்வஸ்வாமினே நமஹ
34. ஓம் ஸநாதனாய நமஹ
35. ஓம் அனந்த சக்தயே நமஹ
36. ஓம் அக்ஷோப்யாய நமஹ
37. ஓம் பார்வதிப்ரிய நந்தனாய நமஹ
38. ஓம் கங்கா ஸுதாய நமஹ
39. ஓம் சரோத் பூதாய நமஹ
40. ஓம் ஆஹூதாய (or ஆத்மபுவே) நமஹ
41. ஓம் பாவகாத்மஜாய நமஹ
42. ஓம் ஜ்ரும்பாய நமஹ
43. ஓம் ப்ரஜ்ரும்பாய நமஹ
44. ஓம் உஜ்ரும்பாய நமஹ
45. ஓம் கமலாஸன ஸம்ஸ்துதாய நமஹ
46. ஓம் ஏகவர்ணாய நமஹ
47. ஓம் த்விவர்ணாய நமஹ
48. ஓம் திரிவர்ணாய நமஹ
49. ஓம் ஸுமனோகராய நமஹ
50. ஓம் சதுர்வர்ணாய நமஹ
51. ஓம் பஞ்சவர்ணாய நமஹ
52. ஓம் ப்ரஜாபதயே நமஹ
53. ஓம் அஹஸ்பதயே நமஹ
54. ஓம் அக்னிகர்பாய நமஹ
55. ஓம் சமீகர்பாய நமஹ
56. ஓம் விச்வரேதஸே நமஹ
57. ஓம் ஸுராரிக்னே நமஹ
58. ஓம் ஹாரத்வர்ணாய நமஹ
59. ஓம் சுபகராய நமஹ
60. ஓம் வாஸவாய நமஹ
61. ஓம் வடுவேஷப்ருதே நமஹ
62. ஓம் பூஷ்ணே நமஹ
63. ஓம் கபஸ்தினே நமஹ
64. ஓம் கஹனாய நமஹ
65. ஓம் சந்த்ரவர்ணாய நமஹ
66. ஓம் களாதராய நமஹ
67. ஓம் மாயாதராய நமஹ
68. ஓம் மஹாமாயினே நமஹ
69. ஓம் கைவல்யாய நமஹ
70. ஓம் ஷங்கராத் மஜாய (or ஸுதாய) நமஹ
71. ஓம் விச்வயோனயே நமஹ
72. ஓம் அமே யாத்மனே நமஹ
73. ஓம் தேஜோநிதயே நமஹ
74. ஓம் அனாமயாய நமஹ
75. ஓம் பரமேஷ்டினே நமஹ
76. ஓம் பரப்ரஹ்மணே நமஹ
77. ஓம் வேதகர்பாய நமஹ
78. ஓம் விராட்ஸுதாய நமஹ
79. ஓம் புளிந்த்கன்யாபர்த்ரே நமஹ
80. ஓம் மஹாஸாரஸ்வத ப்ரதாய நமஹ
81. ஓம் ஆச்ரிதாகில தாத்ரே நமஹ
82. ஓம் சோராக்னாய நமஹ
83. ஓம் ரோக நாசனாய நமஹ
84. ஓம் அனந்தமூர்த்தயே நமஹ
85. ஓம் ஆனந்தாய நமஹ
86. ஓம் சிகண்டிக்ருத கேதனாய நமஹ
87. ஓம் டம்பாய நமஹ
88. ஓம் பரம டம்பாய நமஹ
89. ஓம் மஹாடம்பாய நமஹ
90. ஓம் வ்ருஷாகபயே நமஹ
91. ஓம் காரணோ பாத்த தேஹாய நமஹ
92. ஓம் காரணாதீத விக்ரஹாய நமஹ
93. ஓம் அனீச்வராய நமஹ
94. ஓம் அம்ருதாய நமஹ
95. ஓம் ப்ராணாய நமஹ
96. ஓம் ப்ராணாயாம பாராயணாய நமஹ
97. ஓம் வ்ருத்த ஹந்த்ரே நமஹ
98. ஓம் வீரக்னாய நமஹ
99. ஓம் ரக்த ச்யாம களாய நமஹ
100. ஓம் மஹதே நமஹ
101. ஓம் ஸுப்ரஹ்மந்ஞாய நமஹ
102. ஓம் குஹாப்தாய நமஹ
103. ஓம் ப்ரஹ்மந்ஞாய நமஹ
104. ஓம் ப்ராஹ்மண ப்ரியாய நமஹ
105. ஓம் வம்ச விருத்திகராய நமஹ
106. ஓம் வேத வேத்யாய நமஹ
107. ஓம் அக்ஷய பலப்ரதாய நமஹ
108. ஓம் மயூர வாஹனாய நமஹ
ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!
"திருச்சிற்றம்பலம்''

வெள்ளி, 5 டிசம்பர், 2014

குங்குமம் தயாரிப்பது எப்படி

குங்குமம் தயாரிப்பது எப்படி
மஞ்சள் கிழங்கை உடைத்து எலுமிச்சம் பழசாற்றில் ஊறவைத்து, பின் உலர வைத்து பொடிசெய்தால் குங்கமம் தயாராகும். புள்ளிகள் மற்றும் பூச்சிகள்தாக்குதல் இல்லாத எலுமிச்சை பழங்களைத் தேர்ந்தெடுக்கவேண்டும். கொடி எலுமிச்சை மிகவும் நன்று. எலுமிச்சையை கீழிருந்து மேலாக நறுக்க வேண்டும்.நறுக்கிய எலுமிச்சையிலிருந்து சாறு எடுத்து மஞ்சள் துண்டுகள் மூழ்குமாறு செய்ய வேண்டும். இதற்கு எவர்சில்வர் பாத்திரங்கள் உபயோகிக்க கூடாது. பித்தளை அல்லது மண் சட்டியை உபயோகிப்பது நல்லது.வெண்காரம் மற்றும் படிகாரம் இரண்டையும் சம அளவு எடுத்து நன்றாக பொடி செய்து, மஞ்சள் பொடி மற்றும் எலுமிச்சைச் சாற்றில் சேர்க்க வேண்டும். நல்ல சிவப்பு நிறம் வேண்டுமானால் சிறிது அதிகமாகசேர்க்க வேண்டும். www.puradsifm.com
இக்கலவையினை நிழலில் காய வைக்கவேண்டும். இதுவே குங்குமப்பொடி. குங்குமம் என்றாலே மங்களம் என்று பொருள். இவ்வாறு தயாரிக்கப்படும் குங்குமம் நெற்றியில் அணியப்படுகிறது.தலை வகிட்டுமுனையிலும் பெண்கள் அணிகிறார்கள்.நெற்றியில் புரவ மத்தியில் பொட்டு வைப்பதால் குறிப்பாக குங்குமம் இடுவதால் மங்கள பண்பு நிறைகிறது என்பது நம்பிக்கை.இது ஆன்மீக அடிப்படையும் இதுவாகும்.நெற்றியில் குங்குமம் இடுவதால் மங்களம் நிறைகிறது.இதையே இனி அறிவியல் ரீதியில் பார்ப்போம்.
நெற்றியின் புரவ மத்திக்க நேர் பின்னால் மூளையின் ஒரு பகுதியாக Pineal gland எனும் நெற்றிக்கண் சுரப்பி அமைந்துள்ளது.இது மூளையின் ஒரு முக்கிய பகுதியென அறிவியலார் உணர்ந்து வருகிறார்கள் கண்போன்ற அமைப்பு எனக் கண்டறிந்துள்ளார்கள்.இதனைநெற்றிக்கண் எனலாம்.இந்த நெற்றிக்கண்ணுடன் தொடர்புள்ள புருவமத்தி ஒரு சக்தி குவியும் இடமாகும்.யோகப் பயிற்சியில் சுழுமுனை எனப்படுவுதும் இப்பகுதியாகும். தெய்வத்துடன் தொடர்பு கொள்ள உதவும் பகுதி இதுவாகும்.யோகாசனப் பயிற்சியின் போது மூச்சுப் பயிற்ச்சி (பிராணாயாமம்) செய்யும் போது நெற்றிக்கண் மீது கவனம் குவியும்.ஞானக் கண் என்றம் அழைக்கப்படும். அதாவது மனிதனின் ஆறு அறிவுக்கு அப்பாற்பட்ட இன்னொரு நுண்ணறிவை எட்ட இப்பகுதி உதவுகிறது.
அன்றைய ஞானியர் யோகிகள் ஆகியோர் இதை உணர்ந்திருந்தார்கள். அதனாலையே நெற்றியில் பொட்டு வைத்தக்கொண்டனர். இன்று உள்ளது போன்ற அலங்கார ஒட்டுப்பொட்டுகளை அவர்கள் வைக்கவில்லை. சந்தனம் குங்குமம் போன்ற குறிப்பிட்ட மூலிகை பொருட்களையே வைத்துக்கொண்டார்கள்.
குங்கமத்தை நான் ஏற்கனவே கூறியபடி தயாரிக்கும் போது அதில் மின்கடத்தும் தன்மை அதிகரிக்கிறது. இதை நெற்றியில் இடும்போது அதன் நேர் பின்னே மூளையில் உள்ள சுரப்பியோடு தொடர்பு ஏற்படுகிறது.
இதனால் தெய்வங்களுடன் தொடர்பு கொள்ளும் வழி எளிதில் கிடைக்கிறது.
நெற்றியில் பொட்டு வைப்பதால் கண்படுதல் எனப்படும் எதிர்மறை எண்ண அலைத் தாக்குதல்களையும் தவிர்க்க முடியும்.ஹிப்னட்டிசம் முதலிய மனோவசியங்கள் புரவ மத்தியில் பொட்டு வைத்தவரை பாதிக்காது.
மின்கடத்தும் தன்மைநமது வழிபாட்டு முறைகளில் நன்றாக மின்சக்தியை ஏற்கக்கூடிய பொருட்களையே நாம் அதிகம் பயன்படுத்துகிறோம்.வேப்பிலை மாவிலை துளசி எலுமிச்சை போன்றவைக்கு இந்த சக்தி அதிகம். குங்குமத்தை இந்துக்கள் காரணத்தோடு தான் உபயோகிக்கிறார்கள். அதுமட்டுமில்லாது பல அறிவியல் நுணுக்கங்கள் ஒருங்கே இணைந்த பழக்கங்கள் நம் பண்பாட்டில் இருக்கின்றன. 

ஞாயிறு, 30 நவம்பர், 2014

விளக்குத்திரி பலன்கள்

விளக்குத்திரியின் பலன்கள்
1. பஞ்சுத்திரி- வீட்டில் மங்கலம் நிலைக்கும்.
2. தாமரைத்தண்டுத்திரி- முன்வினைப் பாவம் நீக்கும். செல்வம் தரும்.
3. வாழைத்தண்டுத்திரி- தெய்வ குற்றம் நீக்கி மனச் சாந்தி தரும். புத்திரபேறு உண்டாகும்.
4. வெள்ளெருக்கன் பட்டைத் திரி- வறுமையைப் போக்கும். கடன் தொல்லை தீரும். பெருத்த செல்வம் சேரும்.
விளக்கேற்றும் திசைகள்:
1 வடக்குத்திசை தொழில் அபிவிருத்தி. செல்வம் சேரும்.
2. கிழக்குத்திசை- சகல சம்பத்தும் கிடைக்கும்.
3. மேற்குத்திசை- கடன்கள் தீரும். நோய் அகலும்,
4. தெற்குத்திசை- இந்த திசையில் தீபம் ஏற்றக் கூடாது.

12 ராசிக்கு சித்தர் தலங்கள் ..................

12 ராசிக்கேற்ற சித்தர் வழிபாட்டு தலங்கள் ..................

* அசுவினி (மேஷம்) = ஸ்ரீபோகர், பழனி

* பரணி(மேஷம்) = ஸ்ரீகோரக்கர், வடக்குப்பொய்கை நல்லூர் (நாகப் பட்டிணம்), ஸ்ரீபோகர், பழனி

* கார்த்திகை 1 (மேஷம்) = ஸ்ரீபோகர், பழனி, ஸ்ரீ தணிகை முனி மற்றும் ஸ்ரீசம்ஹாரமூர்த்தி, திருச்செந்தூர்; ஸ்ரீபுலிப்பாணி, பழனி

கார்த்திகை 2, 3, 4 (ரிஷபம்) = ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன் றம்; ஸ்ரீ வான்மீகர், எட்டுக்குடி; ஸ்ரீ இடைக்காடர், திரு அண்ணாமலை.

* ரோகிணி (ரிஷபம்) = ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன்றம், ஸ்ரீலஸ்ரீ சிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர், திருவலம்

*மிருகசீரிடம்1, (ரிஷபம்)=சிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர். மிருக சீரிடம்2 (ரிஷபம்) = ஸ்ரீசட்டைநாதர், சீர்காழி மற்றும் ஸ்ரீரங்கம். ஸ்ரீ பாம்பாட்டி சித்தர், மருதமலை மற்றும் சங்கரன்கோவில்.

மிருக சீரிடம்3 (மிதுனம்)= ஸ்ரீபாம்பாட்டி சித்தர், மருதமலை மற்றும் சங்கரன் கோவில். மிருகசீரிடம் 4 (மிதுனம்)=அமிர்த கடேஸ்வரர் ஆலயம், திருக்கடையூர்.

* திருவாதிரை (மிதுனம்) = ஸ்ரீஇடைக்காடர் – திருஅண்ணாமலை, ஸ்ரீ திருமூலர் – சிதம்பரம்.

*புனர்பூசம்1,2,3 (மிதுனம்)=ஸ்ரீதன்வந்திரி,ஸ்ரீவசிஷ்டர் – வைத்தீஸ் வரன்கோவில்,

புனர்பூசம் 4 (கடகம்)= ஸ்ரீதன்வந்திரி, வைத்தீஸ் வரன் கோவில்.

* பூசம் (கடகம்) = ஸ்ரீகமலமுனி, திருவாரூர்; ஸ்ரீகுருதட்சிணா மூர்த்தி, திருவாரூர் (மடப்புரம்)

* ஆயில்யம் (கடகம்) = ஸ்ரீகோரக்கர், வடக்குப்பொய்கை நல்லூர், நாகப் பட்டிணம் அருகில்; ஸ்ரீஅகத்தியர், ஆதி கும்பேஸ்வரர் கோவி ல், கும்பகோணம்; ஸ்ரீஅகத்தியர், திருவனந்தபுரம், பொதியமலை, பாபநாசம்.

* மகம் (சிம்மம்), பூரம் (சிம்மம்) = ஸ்ரீராமதேவர்,அழகர் கோவில், மதுரை அருகில்.

*உத்திரம் 1 (சிம்மம்) = ஸ்ரீராமத்தேவர், அழகர்கோவில், மதுரை அருகில், ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன்றம்.

உத்திரம் 2 (கன்னி) = ஸ்ரீ ஸ்ரீ சதா சிவப்ரும்மேந்திரா – நெரூர்; ஸ்ரீகரூவூரார் - கரூர் பசுபதீஸ்வரர் கோவில்; ஆனிலையப்பர் கோவில் – கருவூர்; கல்யாண பசுபதீஸ் வரர் கோவில் – தஞ்சாவூர்.

* அஸ்தம் (கன்னி) = ஆனிலையப்பர் கோவில் -கரூவூர், ஸ்ரீ கரூவூ ரார் – கரூர்.

* சித்திரை 1 , 2 (கன்னி) = ஸ்ரீகருவூரார் – கரூர்,ஸ்ரீசச்சிதானந்தர் – கொடு விலார்ப்பட்டி. சித்திரை 3, 4(துலாம்) = ஸ்ரீகுதம்பைச் சித்தர் – மாயூரம்

* சுவாதி (துலாம்) = ஸ்ரீகுதம்பைச் சித்தர் -மாயூரம்

* விசாகம்1,2,3 (துலாம்) = ஸ்ரீநந்தீஸ்வரர் – காசி,ஸ்ரீகுதம்பைச் சித்தர் – மயிலாடுதுறை

விசாகம் 4 (விருச்சிகம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் – மயிலாடு துறை, ஸ்ரீவான்மீகர் – எட்டுக்குடி, ஸ்ரீஅழுகண்ணி சித்தர் – நீலாயதாட்சியம்மன்கோவில், நாகப்பட்டிணம்

* அனுஷம் (விருச்சிகம்) = ஸ்ரீவான்மீகி -எட்டுக்குடி, தவத்திரு. சிவ ஞான குருசாமிகள் என்ற அரோகரா சாமிகள், தோளூர்பட்டி, தொட்டியம்-621 215. திருச்சி மாவட்டம்.

* கேட்டை (விருச்சிகம்) = ஸ்ரீவான்மீகி – எட்டுக்குடி, ஸ்ரீகோரக்கர் – வடக்குப் பொய்கைநல்லூர்,நாகப்பட்டிணம் அருகில்.

* மூலம் (தனுசு) = ஸ்ரீபதஞ்சலி – ராமேஸ்வரம், சேதுக்கரை, திருப் பட்டூர்

* பூராடம் (தனுசு) = ஸ்ரீபதஞ்சலி – ராமேஸ்வரம், ஸ்ரீசித்ரமுத்து அடிக ளார் – பனைக்குளம் (இராமநாதபுரம்), ஸ்ரீபுலஸ்தியர் – ஆவுடை யார் கோவில்.

*உத்திராடம் 1 (தனுசு) = ஸ்ரீகொங்கணர் – திருப்பதி, ஸ்ரீதிருவலம் சித்தர் – திருவலம்(ராணிப்பேட்டை), ஸ்ரீலஸ்ரீமவுன குருசாமிகள் – தங்கால் பொன்னை (வேலூர் மாவட்டம்)

* உத்திராடம் 2,3,4 (மகரம்) = ஸ்ரீகொங்கணர் – திருப்பதி

* திருவோணம் (மகரம்) = ஸ்ரீ கொங்கணர் – திருப்பதி, ஸ்ரீ சதா சிவ ப்ரும்மேந்திரால் – நெரூர், ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம், ஸ்ரீகருவூரார் – கரூர், ஸ்ரீபடாஸாகிப் – கண்டமங்கலம்.

* அவிட்டம் 1,2 (மகரம்) ; அவிட்டம் 3,4 (கும்பம்) = ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம் (திருமூலகணபதி சந்நிதானம்).

* சதயம் (கும்பம்) = ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம், ஸ்ரீசட்டநாதர் – சீர்காழி, ஸ்ரீதன்வந்திரி, ஸ்ரீதன்வந்திரி – வைத்தீஸ்வரன் கோவில்.

* பூரட்டாதி 1,2,3 (கும்பம்)= ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம், ஸ்ரீ தட்சிணா மூர்த்தி – திருவாரூர். ஸ்ரீகமலமுனி – திருவாரூர்,ஸ்ரீகாளாங்கிநாதர் – திருவாடுதுறை, சித்தர் கோவில்,சேலம் ஸ்ரீசதாசிவப்ரும் மானந்த ஸ்ரீசிவபிரபாகர சித்த யோகி. பரமஹம்ஸர் – ஓமலூர் – பந்தனம் திட் டா. பூரட்டாதி4(மீனம்)=ஸ்ரீசுந்தரானந்தர் – மதுரை, ஸ்ரீஆனந்த நடரா ஜ சுவாமிகள் – குட்லாம்பட்டி(மதுரை), பரம்மானந்த ஸ்ரீ சித்தயோ கி பரமஹம்ஸர்,ஓமலூர்.

* உத்திரட்டாதி (மீனம்) = சுந்தரானந்தர் ஃ மதுரை; ஆனந்த நடராஜ சுவாமிகள் – குட்லாம்பட்டி(மதுரை), ஸ்ரீமச்சமுனி – திருப்பரங்குன் றம்.
* ரேவதி (மீனம்) = ஸ்ரீசுந்தரானந்தர் – மதுரை, குனியமுத்தூர் சுவாமி கள் என்ற சிவ சுப்ரமணிய சுவாமிகள் ஜீவசமாதி.அசுவினி (மேஷம்) = ஸ்ரீபோகர், பழனி