சனி, 3 மே, 2014

புத்தர் சிந்தனைகள் :-

புத்தர் சிந்தனைகள் :-
* அடக்கமில்லாமல் நூறாண்டு வாழ்வதை காட்டிலும் ஒழுக்கத்துடன் ஒருநாள் வாழ்வு சிறப்பானது.
* கோபத்தை அடக்கி மனம் என்னும் கடிவாளத்தை எப்போதும் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்.
* கடினமான பாறை புயலைக் கண்டு கலங்காதது போல புகழ், இகழ் ஆகிய இரண்டையும் கண்டு அறிஞர்களின் மனம் கலங்குவதில்லை.
* பகையைப் பகையால் தணிக்க முடிவதில்லை. அன்பால் மட்டுமே பகை தீரும்.
* மனதை அன்பு, அருளால் நிரப்புங்கள். பிறருக்கு உதவி செய்ய முயலுங்கள். ஆனால், தீமை செய்ய மனதாலும் நினைக்காதீர்கள்.
* அன்பு வாழ்வே சிறந்த வாழ்வு. அன்பிருக்கும் இடம் தேடி அமைதி தானாகவே வந்து விடும்.
* எந்த விஷயத்தையும் யார் கூறுகிறார் என்பதை விட, என்ன கூறுகிறார் என்பதே முக்கியமானது.
* தூய எண்ணத்துடன் பேசும்போதும், செயல்படும்போதும் மகிழ்ச்சி நிழல் போல நம்மைத் தொடர்கிறது.
- புத்தர்

வெள்ளி, 2 மே, 2014

நம் உடலில் தெய்வம்


நாம் வணங்கும் ஒவ்வொரு தெய்வங்களும் நம் உடலில் ஏதோ ஒரு ரூபத்தில் இருக்கிறார்கள் ..

நாம் வணங்கும் ஒவ்வொரு தெய்வங்களும் நம் உடலில் ஏதோ ஒரு ரூபத்தில் இருக்கிறார்கள். முதலில் யார் யார் என்ன என்ன அம்சமாக இருக்கிறார்கள் என்பதைச் சொல்கிறேன்.
சிவனார்- நமது உடல்
உமையவள்- உடலின் வலிமை, வெப்பம் மற்றும் பிராணன் முதலான வாயு சார்ந்த சக்திகள்.
விஷ்ணு- நமது உயிர்.
ப்ரம்ம தேவன்- நமது மனம்.
முருகப் பெருமான்- குண்டலினி சக்தி.
பிள்ளையார் - நம் உடலின் இயக்கங்கள்.

இப்படி நான் நினைப்பதற்கான காரணங்கள்.

சிவனார் எப்படி திடப்பொருள் என்பதும். உமையவள் எப்படி சக்தி என்பதும். விநாயகர் எப்படி செயல் என்பதும் இதற்கு முன்பு ஒரு பதிவில் விளக்கியிருந்தேன்.
அதன்படி பார்க்கும் பொழுது நம் உடல் சிவனார். உடலின் வலிமை, உடலின் வெப்பம், உடலில் உள்ள வாயு சார்ந்த சக்திகள் எல்லாம் உமையவள். அதனால் தான் அவளை சக்தி என்றும் நாம் அழைக்கிறோம். பிள்ளையார் செயலின் வடிவம் என்பதால், நம் உடலின் இயக்கங்கள் யாவும் அவரே ஆகிறார். உ-ம் இதயத் துடிப்பு.

மஹா விஷ்ணு உயிர்.

உயிருக்கும் மஹா விஷ்ணுவிற்கும் இடையிலான ஒற்றுமைகள்.
விஷ்ணு காக்கும் கடவுளாக அறியப் படுகிறார். உயிர் உடலில் இருக்கும் வரை உடல் அழுகாது. உயிர் பிரிந்தவுடன் அழுக ஆரம்பிக்கிறது.
விஷ்ணு பல்வேறு அவதாரங்கள் எடுக்கக்கூடியவர். உயிரும் அப்படித் தான் புல்லாக, பூடாய், புழுவாய், மரம், செடி, கொடிகளாய், எத்தனை எத்தனையோ வடிவம் தாங்கியிருக்கிறது.
விஷ்ணு வாமனனாகவும் பொடி நடை போடுவார். திருவிக்ரமனாகவும் வானளப்பார். உயிரும் அப்படித் தான் சிறு எறும்பாகவும் தன்னை வெளிப்படுத்துகிறது. பெரிய யானையாகவும் உருவம் கொள்கிறது.
விஷ்ணுவின் தங்கை மலைமகள். இது எதை உணர்த்துகிறது என்றால் உயிரும் உடலின் மற்ற சக்திகளும் அண்ணன் தங்கை போன்றவை. அதாவது உயிரும் உடலின் பிற சக்திகளும் ஓரே குணம் உடையது ஆனால் ஒன்றல்ல. மற்ற சக்திகளை அளக்கலாம் ஆனால் உயிரை அளக்க முடியாது. மற்ற சக்திகளின் தன்மைகளை விளக்கலாம் ஆனால் உயிரின் தன்மைகளை விளக்க முடியாது. மரணத்தின் போது உயிர் உடலை விட்டு செல்லும், பிற சக்திகள் செல்லாது. உடலுக்கும் அந்தச் சக்திகளுக்குமான திருமண பந்தம் அது தான்.

பிரம்ம தேவன் மனம்.

மனம் ஒயாமல் எதாவது சிந்தனைகளை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. பிரம்ம தேவனும் அப்படித் தான் இடைவிடாமல் கோடிகணக்கான ஜீவராசிகளை உருவாக்கிக் கொண்டே இருக்கிறார். மனம் ரஜோ குணமுடையது. பிரம்ம தேவனும் ரஜோ குணம் உடையவராகவே அறியப்படுகிறார்.

முருகப் பெருமான் குண்டலினி சக்தி.

ஒரு முறை முருகர் பிரம்ம தேவனை ஓம்காரத்தின் பொருள் கேட்கிறார். பிரம்ம தேவனோ மறந்துவிட்டதாகச் சொல்கிறார். உடனே கோபம் கொண்ட முருகர் பிரம்ம தேவனை சிறை வைக்க சொல்லிவிடுகிறார். பின் சிவனார் முருகரை விளக்கம் கேட்க, ஒரு சிஷ்யனாக இருந்து கேட்டால் தான் விளக்குவேன் என சொல்லி அப்பனுக்கே உபதேசம் செய்தவராக பெருமை பெறுகிறார் முருகர்.

பிரம்ம தேவன் சிறைப் படுகிறார் என்றால் மனம் சிறைப் படுகிறது என்று பொருள். மனம் ஒரு விஷயத்தில் சிறைப்படுகிறது என்றால் அதனால் அதை தவிர வேறு எதையும் சிந்திக்க முடியாமல் போய்விடும். சிலர் உணவுக்கு அடிமையாய் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் மனம் உணவில் சிறைப்பட்டிருக்கிறது என்று பொருள். இதே போல நாம் எல்லோரும் ஏதோ ஒரு விஷயத்திற்கு அடிமை தான். இப்போது இந்த சிறையிலிருந்து விடுபட வேண்டும் என்றால் உடல் வளைந்து யோகத்தில் ஈடுபட வேண்டும். மீண்டும் மீண்டும் ஓம்காரத்தை உச்சரித்து நம் மனதில் பதிய வைக்க வேண்டும். அப்போது நம் குண்ட்லினி குளிர்வடைந்து மனதை அந்தச் சிறையிலிருந்து விடுவிக்கிறது. இது தான் சிவனார் பிரம்மதேவனுக்காக முருகரிடம் பரிந்துரைப்பதும், முருகரின் விருப்பத்துக்கு வளைந்து கொடுப்பதும் காட்டுகிறது. முருகர் மனம் குளிர்வ்து என்பது நம் குண்டலினி சக்தி குளிர்வதை குறிக்கிறது.

பெரும்பாலும் முருகர் சிறுவனாக சித்தரிக்கப்படுகிறார். சிறுவர்களிடம் முரட்டுத்தனம் கூடாது. அன்பாக இனிமையாக நடந்து கொள்ள வேண்டும். குண்டலினி யோகத்தை பற்றி சொல்பவர்களும் குண்டலினியின் குணங்களாக இதையே தான் சொல்கிறார்கள். குண்டலினி சக்தியை மேலெழும்ப செய்ய வேண்டும் என்றால் முரட்டுத்தனமாக முயற்சிக்கக் கூடாது. பொறுமையாகவும் நிதானமாகவும் யோகத்தில் ஈடுபட வேண்டும். முருகருக்கு பிடித்த உணவு பழங்கள். குண்டலினி சக்தியை விழிப்படைய செய்யவும் நிறைய பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வது பரிந்துரைக்கப் படுகிறது.

முருகருக்கு ஆறு முகங்கள் உண்டு. ஒவ்வொரு முகத்திற்கும் ஒவ்வொரு குணம் உண்டு. குணடலினி சக்தியும் மனித உடலின் ஆறு சக்கரங்களில் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. ஒவ்வொரு சக்கரத்தில் இருந்து அது தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் பொழுதும் அது ஒவ்வொரு விதமாக தன்னை வெளிப்படுத்திகிறது.

முருகரின் தோற்றமும் இதற்கு பொருந்துவதாக இருக்கிறது. முருகர் சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றியவர். குண்டலினி சக்தி தியானத்தில் ஈடுபடும் எவருக்குமே நெற்றிப் பொட்டில் தான்
குவியும்.

இப்படியாக ஒவ்வொரு தெய்வமும் நம்மோடு நம் உடலிலேயே இருக்கிறார்கள். அவர்கள் யாவரும் வெவ்வேறானவர்கள் அல்ல. ஓன்றே இரண்டானது, பின் அதுவே பலவானது. ஆகையால் இவர்களுள் உயர்வு தாழ்வு காண்பது தவறு ..

சவுபாக்கிய விருத்தி


இந்த மந்திரத்தை சொல்வதற்கு முன்னாள் உங்கள் பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் வெத்தலை காணிக்கை வைத்துவிட்டுசொல்லவும் முறை படி செய்தால் தான் பலன் கிடைக்கும்
ஒரு வெள்ளி அல்லது திங்கட்கிழமையில் சாயங்கால வேளையில் சங்கல்பம் செய்து கொண்டு மந்திர வழிபாட்டுப் பூஜையை ஆரம்பிக்க வேண்டும். தினமும் அதே நேரத்தில் செய்து வர வேண்டும். 90 நாட்கள் தொடர்ந்து செய்து வர சவுபாக்கிய விருத்தி ஏற்பட்டு வாழ்வு வளம் பெறும்.
‘ஓம் ஹ்ரீம் யோகினீம் யோகினி 
யோகேஸ்வரி யோக பயங்கரி
ஸகல ஸ்தாவர ஜங்கமஸ்ய
முக ஹ்ருதயம் மம வசம்
ஆகர்ஷ ஆகர்ஷய நமஹ’
இம்மந்திரத்தை முறையாகப் பயன்படுத்தும்போது நமது இல்லங்களில் நாம் விரும்பும் ஒற்றுமை நிச்சயமாக ஏற்படும். நல்லதை நினைத்து நல்லதைச் செய்பவர்கள், இறைவனையும் தொழுதால் இனிமையாக வாழ்வார்கள்.

ராகு - கேது .........




ராகு - கேது வழிபாடுகள் ...........

விப்ரசித்தி அரசருக்கும், சிம்ஹிகை என்ற அரசிக்கும் பிறந்தவர் ராகு. அசுர குலத்தைச் சேர்ந்த ராகுவுக்கும் அமுதம் குடிக்கும் ஆசை ஏற்பட்டது. தேவர்களுக்கும் அசுரர் களுக்கும் எப்போதும் யுத்தம் நடந்து கொண்டே இருக்கும். எனவே தேவர் கள் சாகாமலிருக்க பாற்கடலைக்கடைந்து அமுதத்தை உண்ண எண்ணினார்கள்.

பாற் கடலை ஆதிசேஷன் என்ற நாகத்தைக் கயிறாகக் கொண்டு கடைந்து கொண்டே வரும்போது அமுதமும் விஷமும் கலந்தே வந்தன. மகா விஷ்ணு மோகினி அவதாரமெடுத்து தேவர்களுக்கு அமுதத்தைக்கிண்ணத்தில் ஏந்தி கரண்டியால் கொடுப்பதற்காக தேவர்களை ஒருவரிசையாக அமரச் சொன்னார்.

இதை சூசகமாகக்கண்டு பிடித்த அசுரகுல ராகு, சூரிய சந்திரர்கள் மத்தியில் அமர்ந்துவிட்டான். எல்லாரும் அமுதத்தை உண்டபின் சூரிய சந்திரன் அமுதமண்டராகுவை யாரெனக்கண்டு பிடித்து மகா விஷ்ணுவிடம் கூற அவர் அசுரனான ராகுவின் தலையைக் கையிலிருந்த கரண்டியால் வெட்டிவிட்டார்.

கரண்டியால் துண்டிக்கப்பட்ட பிறகும் இந்த இரண்டு முண்டங்களும் அமுதம் உண்டதால் இறவாமல் உயிருடன் வாழத் தொடங்கின. தலைப்பாகம் ராகுவென்றும், உடல் பாகம் கேது என்றும் பெயர் பெற்றன. அவன் அவசரப்பட்டுச் செய்த காரியத்தால் அரக்கர்களும் அவரை தங்களுடன் சேர்ந்துக் கொள்ளவில்லை.

தேவர்களும் சேர்த்துக் கொள்ளவில்லை. அவன் கவலையுடன் பிரும்மாவிடம் சென்றான். அவர் பாதங்களில் பணிந்து தன் நிலையை வருத்தத்துடன் சொல்லி உடலையும் தலையையும் ஒன்று சேர்க்கும்படி கேட்டுக் கொண்டான். பிரும்மாமனம் இரங்கினார்.

"கசியப முனிவரின் பேரனே, உன்முன்னோர்களின் காரணமாக உனக்கு உதவி செய்ய வேண்டும். ஆனால் திருமால் உன் தலையைத் துண்டித்திருக்கிறார். அதை ஒன்று சேர்க்கும் வல்லமை எனக்கு இல்லை. உன் உடலும் தலையும் பிரிந்து போகாமலிருக்க ஒரு வரமளிக்கிறேன். சூரியர் சந்திரர்களால் உனக்கு இந்த நிலை ஏற்பட்டது.

அவர்களுக்கு எதிர் திசையில் நீங்கள் சஞ்சரித்து நவக்கிரகத்தில் ஒருவனாக இருப்பாய். உன் தலைப்பகுதி ஒரு பக்கமும் அதற்கு நேர் எதிர்ப்பக்கம் உடல் பகுதியும் இருக்கும் தலைப்பகுதி என்பது ராகு என்றும் உடல்பகுதி கேது என்றும் பெயர்பெறும்.

ராசி மண்டலத்தில் உங்களுக்குச் சொந்தராசி இல்லாவிட்டாலும் நீங்கள் எந்த ராசியில் சஞ்சரிக்கிறீர்களோ அந்த ராசிக்கேற்ப பயன் அளிப்ப வராவீர்கள். எல்லா கிரகங்களின் வல்லமையும் உனக்கு ஏற்படும். ஜாதகத்தின் பாப புண்ணியத்திற்கேற்ப பயன் அளிப்பவராகவும் பழிவாங்குபவராகவும் செயல்படுவாயாக.

உன்னை ராகு-கேது-சாயா கிரகம்-நிழல் கிரகம் என்ற பெயரால் அழைப்பர். உன்னைக் காட்டிக் கொடுத்து இந்த நிலைக்குள்ளாக்கிய சூரிய சந்திரரை மறைத்து ஒளிமங்கச் செய்து கிரகணதோஷம் ஏற்படுத்தக் கூடியவராக விளங்குவீராக'' என்றார். அப்போது மகாவிஷ்ணு அங்கு தோன்றினார். கற்றறிவே இல்லாத சுவர்பானுவுக்கு நவக்கிரக பதவி அளிப்பது அவ்வளவு நல்லதல்ல.

ராகு கேது என்ற இரண்டு கிரகமாக அவன் சாஸ்திரங்களையும் கற்க வழி செய்ய வேண்டும் கடகராசியில் கேது, ருக், யஜ×ர், சாம வேதங்களைக் கற்று ஞானகாரகனாகவும் மகர ராசியில் ராகு தங்கி அதர்வண வேதத்தையும் கற்று போக யோககாரனாகவும் விளங்க அருள் புரிந்தார். நவக்கிரகங்களில் சர்வ வல்லமை பெற்றவர்களாகத் திகழத் தொடங்கினார்கள்.

ராகு தசை, கேது தசை காலங்களில் ஜாதகர் தம் முற்பிறவியின் பயனை அனுபவிக்கத்தவறமாட்டார். ஜாதகத்தில் ராகு கேது கேடு செய்பவராக இருந்தால் அவர்களுக்குச் சாந்தி செய்தால் நன்மை கிடைக்கும். பரிகாரமாக அவர்களைப் பூசித்து வந்தால் நன்மை பல கிடைக்கும்.

ராகுவும், கேதுவும் தங்களை காட்டிக் கொடுத்த சூரிய சந்திரர்களை விழுங்கி விட வேண்டுமென்ற நோக்கத்தில் அவர்களை இடப்புறமாக சுற்றிக்கொண்டு வருவதாகவும் அவர்களால்தான் சூரிய சந்திர கிரகணங்கள் ஏற்படுவதாகவும் இதிகாசங்கள் கூறுகின்றன. ராகுவை கரும்பாம்பு என்றும், கேதுவை செம்பாம்பு என்றும் ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

ஒருவர் ஜாதகத்தில் ராகு கேதுகளால் தோஷங்களிலிருந்தால் காளஸ்திரி சென்று காளஸ்தீஸ்வரரையும், ஞானபர குணம்பிகையையும் வழிபடலாம். ராகு கேதுக்கு இல்லமோ வாரமோ இல்லாததால் எந்தக்கிழமையும் அவர்களுக்கு ஏற்றதே.

நீங்களே ஒரு கிழமையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் முறையாக அந்தக்கிழமைகளில் நீராடி புளிப்பு அன்னம் உளுந்து சேர்ந்த பலகாரம் தயாரித்து நுனி இலையில் படைக்கவும் தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு வைக்கவும். மந்தாரை மலர்கட்டி, மாந்தாரை மலராலேயே பூஜிக்க வேண்டும்.

நீங்கள் தேர்ந்தெடுத்த கிழமையில் விரதம் இருப்பதும் அவசியமாகும். ஏதாவது ஒரு கிழமையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். புளிப்பு சேர்ந்த சாதம், கொள்ளு கலந்த பலகாரம், தேங்காய், பழம், பாக்கு வெற்றிலை படைக்கவும். ஐந்துவிதமாக மலர்கள் பூஜைக்குத் தேவை. பிரசாதத்தை யாராவது ஒருவருக்கோ, பலருக்கோ கொடுத்து பூஜிக்கச் சொல்லவும். தாம்பூலம், தட்சிணை கொடுத்து நமஸ்காரம் செய்யவும்.

பொதுவாக, ராகு திசை நடைபெறும் காலத்தில் முற்பகுதியில் எல்லாவித செல்வங்களையும் வசதிகளையும் கொடுப்பார். ஆனால் பிற்பகுதியில் கொடுத்தவை அனைத்தையும் பறித்துக் கொள்வார். கேதுவால் ஆதிக்கம் செலுத்தப்படு கிறவர்கள் ஆன்மீகத்துறையில் அதிக நாட்டம் கொண்டவராக இருப்பார்கள்.

யோகம் மாந்திரீகம் போன்றவற்றில் இரகசியமாக ஈடுபடுவார்கள். நீதியும் நேர்மையும் தவறாமல் ஒழுக்கமாக வாழ்வார்கள். இவர்களில் பலரிடம் முன் கோபம் காணப்படும். இவர்களுக்கு உண்மையான நண்பர்கள் கிடைப்பது அபூர்வம்.

எந்தக் கஷ்டம் வந்தாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார்கள். ஆடம்பரமாக ஆடையணிவதில் விருப்பம் இராது. ஆனால் எப்போதும் தூய்மையான ஆடைகளை அணிந்திருப்பார்கள். எதிலும் நிதானமாகவே நடந்து கொள்வார்கள்.

108 தேவி



தேவியின் அருளோடு இந்த நாள் இனிய நாள் ஆகட்டும் ..

நாகையிலே நெல்லுக்கடை மாரியம்மா
வேளாங்கண்ணியிலே வேளங்கண்ணியம்மா
திருத்துறைப்பூண்டியிலே முள்ளாச்சியம்மா
எட்டுக்குடியிலே துரோபதை மாரியம்மா

ஆரூரிலே சீதளாதேவி எல்லம்மா
பட்டுக்கோட்டையிலே நாடியம்மா
அறந்தாங்கியிலே வீரமா காளியம்மா
திருவப்பூர் மாரியம்மா
கொண்ணையூர் மாரியம்மா
காரைக்குடியிலே கொப்புடைய நாயகியம்மா
கண்கொடுக்கும் தெய்வமே - நாட்டரசன்கோட்டை வாழும் என் கண்ணாத்தா!

மண்ணளக்கும் தாயே....
படவேட்டிலே ரேணுகா பரமேஸ்வரியம்மா
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியம்மா
மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரியம்மா
வெட்டுவானம் எல்லையம்மா
செங்கையிலே மனப்பாக்கம் கன்னியம்மா
செங்கையிலே நாகாத்தம்மா

மண்ணளக்கும் தாயே....
சென்னையிலே மயிலையிலே அருள்மிகு தேவி முண்டகக் கண்ணியம்மா
கோலவிழி பத்ரகாளியம்மா
அல்லிக்கேணியிலே எல்லம்மா
புரசையிலே பாதாள பொன்னியம்மா
மாம்பலத்திலே முப்பாத்தம்மா
வடசென்னையிலே ரேணுகா பரமேஸ்வரியம்மா

மண்ணளக்கும் தாயே....
சேலத்திலே அன்னதான மாரியம்மா
ஈரோட்டிலே சின்ன மாரி பெரிய மாரியம்மா
கோவையிலே தண்டுமாரியம்மா கோணியம்மா
சத்யமங்கலத்திலே பண்ணாரி மாரியம்மா

மண்ணளக்கும் தாயே....
வடநாட்டிலே காசி விசாலாக்ஷியம்மா
வங்காளத்திலே காளியம்மா
விஜயவாடாவிலே கனக துர்க்கையம்மா
கர்நாடக மாநிலத்திலே அன்னை சாமுண்டீஸ்வரி சாரதாம்பி்கே மூகாம்பிகையம்மா
தங்கவயலிலே கங்கையம்மா

மண்ணளக்கும் தாயே....
கேரளத்திலே சோட்டாணிக்கரை பகவதியம்மே
கொடுங்கல்லூர் பகவதியம்மே

மண்ணளக்கும் தாயே....
மலேசிய நாட்டிலே மகா மாரியம்மா
சிங்கப்பூரிலே வீரமா காளியம்மா

துவார பாலகர்கள் யார்?



தெரிந்துகொள்வோம்: கோயில்களில் உள்ள துவார பாலகர்கள் யார்?

>> கோயில்கள் அமைக்கப்பட்ட வேண்டிய வழிமுறைகளை ஆகம நூல்கள் விரிவாகக் கூறுகின்றன. 

>> திருக்கோயிலின் அமைப்பு லட்சணங்களாக கர்ப்ப கிரஹம், துவஜஸ்தம்பம், பலிபீடம், ராஜகோபுரம் முதலியவற்றைக் குறிப்பிட்டுவிட்டு, மூலஸ்தானத்தின் வாயில் காப்பவர்களாக துவார பாலகர்களையும் நிர்மாணிக்க வேண்டும் என்று ஆகம விதி வலியுறுத்துகிறது. 

>> சில்ப சங்கிரஹம் என்னும் நூல் துவாரபாலகர்களின் தோற்றத்தையும் அங்க லட்சணங்களையும் அழகாக எடுத்துச் சொல்கிறது. நீண்ட பெரிய கைகளும், குறுகிய இடையும், கோரைப் பற்களும் கொண்ட பூத கணங்கள் இவை என்று அந்த நூலில் வர்ணிக்கப்பட்டபோதிலும், சாந்த சொரூபம் கொண்ட துவாரபாலகர்களையும் நாம் அநேக ஆலயங்களில் காணத்தான் செய்கிறோம். ஆகம சாஸ்திரத்தை நன்கு ஆராய்ந்து பார்த்தால் இந்த மாறுதலுக்குக் காரணம் விளங்கும்.

>> பெருமாள் கோயில் துவார பாலகர்கள்: விஷ்ணு ஆலயங்களில் உள்ள துவாரபாலகர்கள் ஜயனும், விஜயனும் ஆவர். இவர்கள் வைகுண்டத்தில் எம்பெருமானுக்கு துவாரபாலகர்களாக இருந்தவர்கள் சனத்குமாரர்களின் சாபத்தினால் மூன்று பிறவிகளில் அசுரர்களாக இருந்து, பின்னர் திருமாலின் சேவைக்கே அவர்கள் வந்து சேர்ந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. இந்த துவாரபாலகர்கள் கரங்களிலே சங்கும் சக்கரமும் கதாயுதமும் ஏந்திக் காட்சி தருகின்றனர்.

>> சிவன் கோயில் துவார பாலகர்கள்: சிவாலயங்களில் துவார பாலகர்களுக்கு சண்டன், பிரசண்டன் என்ற பெயர்கள் வழங்குகின்றன. இவர்கள் வீராதி வீரர்கள். தமிழில் வழங்கப்படும் ஒரு பழமொழி தட்டிக் கேட்க ஆளில்லை என்றால் தம்பி சண்ட, பிரசண்டன் இதன்மூலம் இந்த துவாரபாலகர்கள் பற்றிய விவரத்தை முற்காலத் தமிழர்கள் அறிந்து வைத்திருந்தனர் என்பதை உணரலாம்

Kalahasti-= Property of Nagarathar siva temple




Here is a story about an old town called Kalahasti....and there is story of Nagarathar behind this siva temple can any guess???...
if you can't we will let you knw the story behind that...

kannappa nayanar Sri Kalahasti Temple - short Story
At Sri Kalahasti, Lord Shiva tested the unshakable devotion of Kanna (Later became Bhaktha Kannappa) before the sages gathered at SriKalahasti. With his divine power, Lord Shiva created a tremor and the roof tops of the temple began to fall. All the sages ran away from the scene except Kannappa who covered the linga with his body to prevent it from any damage.
In another incident, Kannappa plucked out one of his eyes and placed in the eye of Linga which was oozing with blood and tears. When the tears and the blood were still trickling from another eye, Kannappa decided to remove his second eye and placed one of his feet on the spot of the right eye of the Shiva Linga. Before he could pull out his second eye with the arrow, Lord Shiva appeared and restored his eye while granting him a boon to occupy a place close to him.
There is a well know famous temple in this palace called " SRIKALAHASTISWARA SWAMY Temple ".
This is ancient Sri Kalahasti temple dedicated to Lord Siva is one of the five Panchabhootha stalams (temples celebrating Lord Siva as the embodiment of the five primary elements), air (wind) being the element in this case; the other elements being water at (Thiruvanaikaval), fire at (Annamalaiyar Temple), earth at (Ekambareswarar Temple) and space at (Chidambaram Temple) that Siva embodies.
Built by
This temple was originally built during Pallava period and current structures are built by Chola Tamil King Kulothunga Cholan I, II and III during 11th century. A huge hundred pillared mantapam was built by Krishnadevarayar during 16th century, which is another important feature of this shrine.