ஞாயிறு, 30 நவம்பர், 2014

விளக்குத்திரி பலன்கள்

விளக்குத்திரியின் பலன்கள்
1. பஞ்சுத்திரி- வீட்டில் மங்கலம் நிலைக்கும்.
2. தாமரைத்தண்டுத்திரி- முன்வினைப் பாவம் நீக்கும். செல்வம் தரும்.
3. வாழைத்தண்டுத்திரி- தெய்வ குற்றம் நீக்கி மனச் சாந்தி தரும். புத்திரபேறு உண்டாகும்.
4. வெள்ளெருக்கன் பட்டைத் திரி- வறுமையைப் போக்கும். கடன் தொல்லை தீரும். பெருத்த செல்வம் சேரும்.
விளக்கேற்றும் திசைகள்:
1 வடக்குத்திசை தொழில் அபிவிருத்தி. செல்வம் சேரும்.
2. கிழக்குத்திசை- சகல சம்பத்தும் கிடைக்கும்.
3. மேற்குத்திசை- கடன்கள் தீரும். நோய் அகலும்,
4. தெற்குத்திசை- இந்த திசையில் தீபம் ஏற்றக் கூடாது.

12 ராசிக்கு சித்தர் தலங்கள் ..................

12 ராசிக்கேற்ற சித்தர் வழிபாட்டு தலங்கள் ..................

* அசுவினி (மேஷம்) = ஸ்ரீபோகர், பழனி

* பரணி(மேஷம்) = ஸ்ரீகோரக்கர், வடக்குப்பொய்கை நல்லூர் (நாகப் பட்டிணம்), ஸ்ரீபோகர், பழனி

* கார்த்திகை 1 (மேஷம்) = ஸ்ரீபோகர், பழனி, ஸ்ரீ தணிகை முனி மற்றும் ஸ்ரீசம்ஹாரமூர்த்தி, திருச்செந்தூர்; ஸ்ரீபுலிப்பாணி, பழனி

கார்த்திகை 2, 3, 4 (ரிஷபம்) = ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன் றம்; ஸ்ரீ வான்மீகர், எட்டுக்குடி; ஸ்ரீ இடைக்காடர், திரு அண்ணாமலை.

* ரோகிணி (ரிஷபம்) = ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன்றம், ஸ்ரீலஸ்ரீ சிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர், திருவலம்

*மிருகசீரிடம்1, (ரிஷபம்)=சிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர். மிருக சீரிடம்2 (ரிஷபம்) = ஸ்ரீசட்டைநாதர், சீர்காழி மற்றும் ஸ்ரீரங்கம். ஸ்ரீ பாம்பாட்டி சித்தர், மருதமலை மற்றும் சங்கரன்கோவில்.

மிருக சீரிடம்3 (மிதுனம்)= ஸ்ரீபாம்பாட்டி சித்தர், மருதமலை மற்றும் சங்கரன் கோவில். மிருகசீரிடம் 4 (மிதுனம்)=அமிர்த கடேஸ்வரர் ஆலயம், திருக்கடையூர்.

* திருவாதிரை (மிதுனம்) = ஸ்ரீஇடைக்காடர் – திருஅண்ணாமலை, ஸ்ரீ திருமூலர் – சிதம்பரம்.

*புனர்பூசம்1,2,3 (மிதுனம்)=ஸ்ரீதன்வந்திரி,ஸ்ரீவசிஷ்டர் – வைத்தீஸ் வரன்கோவில்,

புனர்பூசம் 4 (கடகம்)= ஸ்ரீதன்வந்திரி, வைத்தீஸ் வரன் கோவில்.

* பூசம் (கடகம்) = ஸ்ரீகமலமுனி, திருவாரூர்; ஸ்ரீகுருதட்சிணா மூர்த்தி, திருவாரூர் (மடப்புரம்)

* ஆயில்யம் (கடகம்) = ஸ்ரீகோரக்கர், வடக்குப்பொய்கை நல்லூர், நாகப் பட்டிணம் அருகில்; ஸ்ரீஅகத்தியர், ஆதி கும்பேஸ்வரர் கோவி ல், கும்பகோணம்; ஸ்ரீஅகத்தியர், திருவனந்தபுரம், பொதியமலை, பாபநாசம்.

* மகம் (சிம்மம்), பூரம் (சிம்மம்) = ஸ்ரீராமதேவர்,அழகர் கோவில், மதுரை அருகில்.

*உத்திரம் 1 (சிம்மம்) = ஸ்ரீராமத்தேவர், அழகர்கோவில், மதுரை அருகில், ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன்றம்.

உத்திரம் 2 (கன்னி) = ஸ்ரீ ஸ்ரீ சதா சிவப்ரும்மேந்திரா – நெரூர்; ஸ்ரீகரூவூரார் - கரூர் பசுபதீஸ்வரர் கோவில்; ஆனிலையப்பர் கோவில் – கருவூர்; கல்யாண பசுபதீஸ் வரர் கோவில் – தஞ்சாவூர்.

* அஸ்தம் (கன்னி) = ஆனிலையப்பர் கோவில் -கரூவூர், ஸ்ரீ கரூவூ ரார் – கரூர்.

* சித்திரை 1 , 2 (கன்னி) = ஸ்ரீகருவூரார் – கரூர்,ஸ்ரீசச்சிதானந்தர் – கொடு விலார்ப்பட்டி. சித்திரை 3, 4(துலாம்) = ஸ்ரீகுதம்பைச் சித்தர் – மாயூரம்

* சுவாதி (துலாம்) = ஸ்ரீகுதம்பைச் சித்தர் -மாயூரம்

* விசாகம்1,2,3 (துலாம்) = ஸ்ரீநந்தீஸ்வரர் – காசி,ஸ்ரீகுதம்பைச் சித்தர் – மயிலாடுதுறை

விசாகம் 4 (விருச்சிகம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் – மயிலாடு துறை, ஸ்ரீவான்மீகர் – எட்டுக்குடி, ஸ்ரீஅழுகண்ணி சித்தர் – நீலாயதாட்சியம்மன்கோவில், நாகப்பட்டிணம்

* அனுஷம் (விருச்சிகம்) = ஸ்ரீவான்மீகி -எட்டுக்குடி, தவத்திரு. சிவ ஞான குருசாமிகள் என்ற அரோகரா சாமிகள், தோளூர்பட்டி, தொட்டியம்-621 215. திருச்சி மாவட்டம்.

* கேட்டை (விருச்சிகம்) = ஸ்ரீவான்மீகி – எட்டுக்குடி, ஸ்ரீகோரக்கர் – வடக்குப் பொய்கைநல்லூர்,நாகப்பட்டிணம் அருகில்.

* மூலம் (தனுசு) = ஸ்ரீபதஞ்சலி – ராமேஸ்வரம், சேதுக்கரை, திருப் பட்டூர்

* பூராடம் (தனுசு) = ஸ்ரீபதஞ்சலி – ராமேஸ்வரம், ஸ்ரீசித்ரமுத்து அடிக ளார் – பனைக்குளம் (இராமநாதபுரம்), ஸ்ரீபுலஸ்தியர் – ஆவுடை யார் கோவில்.

*உத்திராடம் 1 (தனுசு) = ஸ்ரீகொங்கணர் – திருப்பதி, ஸ்ரீதிருவலம் சித்தர் – திருவலம்(ராணிப்பேட்டை), ஸ்ரீலஸ்ரீமவுன குருசாமிகள் – தங்கால் பொன்னை (வேலூர் மாவட்டம்)

* உத்திராடம் 2,3,4 (மகரம்) = ஸ்ரீகொங்கணர் – திருப்பதி

* திருவோணம் (மகரம்) = ஸ்ரீ கொங்கணர் – திருப்பதி, ஸ்ரீ சதா சிவ ப்ரும்மேந்திரால் – நெரூர், ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம், ஸ்ரீகருவூரார் – கரூர், ஸ்ரீபடாஸாகிப் – கண்டமங்கலம்.

* அவிட்டம் 1,2 (மகரம்) ; அவிட்டம் 3,4 (கும்பம்) = ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம் (திருமூலகணபதி சந்நிதானம்).

* சதயம் (கும்பம்) = ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம், ஸ்ரீசட்டநாதர் – சீர்காழி, ஸ்ரீதன்வந்திரி, ஸ்ரீதன்வந்திரி – வைத்தீஸ்வரன் கோவில்.

* பூரட்டாதி 1,2,3 (கும்பம்)= ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம், ஸ்ரீ தட்சிணா மூர்த்தி – திருவாரூர். ஸ்ரீகமலமுனி – திருவாரூர்,ஸ்ரீகாளாங்கிநாதர் – திருவாடுதுறை, சித்தர் கோவில்,சேலம் ஸ்ரீசதாசிவப்ரும் மானந்த ஸ்ரீசிவபிரபாகர சித்த யோகி. பரமஹம்ஸர் – ஓமலூர் – பந்தனம் திட் டா. பூரட்டாதி4(மீனம்)=ஸ்ரீசுந்தரானந்தர் – மதுரை, ஸ்ரீஆனந்த நடரா ஜ சுவாமிகள் – குட்லாம்பட்டி(மதுரை), பரம்மானந்த ஸ்ரீ சித்தயோ கி பரமஹம்ஸர்,ஓமலூர்.

* உத்திரட்டாதி (மீனம்) = சுந்தரானந்தர் ஃ மதுரை; ஆனந்த நடராஜ சுவாமிகள் – குட்லாம்பட்டி(மதுரை), ஸ்ரீமச்சமுனி – திருப்பரங்குன் றம்.
* ரேவதி (மீனம்) = ஸ்ரீசுந்தரானந்தர் – மதுரை, குனியமுத்தூர் சுவாமி கள் என்ற சிவ சுப்ரமணிய சுவாமிகள் ஜீவசமாதி.அசுவினி (மேஷம்) = ஸ்ரீபோகர், பழனி

திங்கள், 24 நவம்பர், 2014

செல்வச் செழிப்பு அதிகரிக்க


செல்வச் செழிப்பு அதிகரிக்க
நீங்கள் வாடகை அல்லது சொந்த வீட்டுக்கு குடியேறும்போது,அந்த வீட்டுக்குள் முதலில் கொண்டு செல்ல வேண்டியவை மகாலட்சுமியின் அம்சமாகிய உப்பு,அம்மனின் அம்சமாகிய மஞ்சள் பொடி அல்லது மஞ்சள் கிழங்கு,ஒரு நிறை குடம் தண்ணீர்,உங்களின் குல தெய்வத்தின் படம் அல்லது இஷ்ட தெய்வத்தின் படம் இவைகளைக் கொண்டு செல்ல வேண்டும்.
வீட்டில் பண வரவு அதிகரிக்க,வெள்ளிக்கிழமைகளில் காலை 6.00 முதல் 6.15க்குள்ளும்,மதியம் 1.00 முதல் 1.15க்குள்ளும்,இரவு 8.00 முதல் 8.15க்குள்ளும் கடையில் உப்பு வாங்கி வரவேண்டும்.இப்படி வாரா வாரம் சிறிதளவு உப்பு வாங்கி வர,செல்வச் செழிப்பு அதிகரிக்கும்.கல் உப்புதான் மகா லட்சுமியின் அம்சமாகும்.
எந்த வீட்டினுள் நுழைந்ததும்,துர்நாற்றம் இல்லாமலிருக்கிறதோ,நறுமணம் கமழுகிறதோ,அங்கே செல்வச் செழிப்பு அதிகரித்துக் கொண்டே செல்லும்.
எந்த வீட்டில் அழுக்குத் துணிகள் வீடெல்லாம் இறைந்து கிடக்காமலிருக்கின்றதோ,வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை தோறும் தண்ணீரால் அலசி விடப்படுகிறதோ,பொருட்கள் எல்லாம் சுத்தமாக அடுக்கி வைக்கப்பட்டு இருக்குமோ,அங்கெல்லாம் செல்வம் குவியும்.
எங்கெல்லாம் நெகடிவ்வான வார்த்தைகள் பேசப்படாமலிருக்குமோ,எங்கெல்லாம் விட்டுக்கொடுத்தலும்,இனிய வார்த்தைகள் பேசப்படுமோ அங்கெல்லாம் செல்வச் செழிப்பு அதிகரிக்கும்.எந்த வீட்டில் நிர்வாணமாக குளிக்காமலும்,நிர்வாணமாக தூங்காமலும் இருக்கிறார்களோ,கணவனின் காமத் தேவைகளை மனைவியும்,மனைவியின் காமத் தேவைகளை கணவனும் மறுக்காமலும்,வெறுக்காமலும் நிறைவேற்றுகிறார்களோ அங்கே செல்வச் செழிப்பு அதிகரிக்கும்.

சனி, 22 நவம்பர், 2014

பஞ்ச பூத ஸ்தலங்கள்

பஞ்ச பூத ஸ்தலங்கள் 5. அவற்றில் 4 தமிழ் நாட்டிலும் 1 ஆந்திர பிரதேசத்திலும் உள்ளது ....
1. நீர் - திருவானைக்கோயில் ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் ஆலயம் ( திருச்சி அருகில் உள்ளது )
2. நிலம் - காஞ்சிபுரம் ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் ஆலயம் ( சென்னையில் இருந்து 40 கிலோ மீட்டர் )
3. நெருப்பு - திருவண்ணாமலை ஸ்ரீ அண்ணாமலையார் ஆலயம் .
4. ஆகாயம் - சிதம்பரம் ஸ்ரீ தில்லை நடராஜர் ஆலயம்
5. காற்று - காளஹஸ்தி - ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் ஆலயம் ( திருப்பதியில் இருந்து 35 கிலோ மீட்டர் )
இவை அனைத்தும் எம்பெருமான் சிவஸ்தலங்கள் .....தங்களால் முடிந்தால் ...குடும்பத்தினருடன் சென்று இவற்றை தரிசித்து வாருங்கள் .

வியாழன், 20 நவம்பர், 2014

உருத்திராட்ச முக மேன்மை



உருத்திராட்ச முக மேன்மை
உருத்திராட்சத்தின் முகம் மற்றும் அதன் அதிதேவதை:

உருத்திராட்சத்தை அக்குமணி என்றும் குறிப்பிடுவர். பெண்களுக்கு மாங்கல்யம் போலச் சிவத் தொண்டர்களுக்கு அணிகலனாகத் திகழ்வது இந்த உருத்திராட்சம் தான். இதைக் கண்டிகை என்றும், தாழ்வடம் என்றும் கூறுவர்.

உருத்திராட்சத்தை தாசித்தால் லட்சம் மடங்கு புண்ணியம். தொட்டால் கோடி மடங்கு புண்ணியம். அணிந்தால் நூறு கோடி புண்ணியம். ஜெபித்தால் நூறுகோடி மடங்கு புண்ணியம் அடைவதாகப் புராணங்கள் கூறுகின்றன. நெல்லிக்காய் அளவுள்ள உருத்திராட்சம் உத்தமம்.

இலந்தைப்பழ அளவு மத்திபம். கடலை அளவு அதமம். புழுக்கள் குடைந்ததும், நசுக்கியதும், நோயுற்றதும் அணியக்கூடாத உருத்திராட்சங்கள் ஆகும். ஒரே அளவுள்ளதும், உறுதியானதும், பெரியதும், சம முத்துகள் போன்றுள்ளதுமான உருத்திராட்சங்களைப் பட்டுக் கயிற்றில் கோத்து பின் உடலில் அணிய வேண்டும்.

உருத்திராட்சத்தின் முகம் மற்றும் அதன் அதிதேவதை:::.

*இருமுக உருத்திராட்சம் அர்த்தநாரிஸ்வரர் உருவம் உடையது. இதனை அணிந்தால் எப்போதும் இன்பம் உண்டாகும்.

*மும்முக உருத்திராட்சம் மூன்று அக்னியின் சொரூபம் கொண்டது. இதனை அணிவது அக்னி தேவர்க்கு இன்பமூட்டும்.

*நான்கு முக உருத்திராட்சம் பிரம்மனின் சொரூபம். இதை அணிந்தால் பிரம்ம தேவன் இன்பமடைகிறான்.

*ஐந்து முக உருத்திராட்சம் பிரம்ம சொரூபம் கொண்டது. இதனை அணிவதால் நரஹத்தி அழிகிறது.

*ஆறுமுக உருத்திராட்சம் அதிதேவதை சுப்ரமண்யர். இதை அணிந்தால் அதிக செல்வமும் ஆரோக்கியமும் கிடைப்பதுடன், பக்தியும், அறிவும், செல்வமும், கிடைக்கும்.

*அறுமுக உருத்திராட்சத்திற்கு விநாயகரை அதிதேவதை என்றும் சொல்வார்கள்.

*ஏழு முக உருத்திராட்சத்திற்கு அதிதேவதை சப்தமாதா. இதனை அணிந்தால் ஞானமும், ஆரோக்கியமும், செல்வமும் கிடைக்கும்.

*எட்டு முக உருத்திராட்சம் அணிந்தால் அஷ்ட வசுக்களும், கங்கையும் ப்ரிதி அடையும். அதிதேவதை அஷ்டவசு.

*இன்பது முக உருத்திராட்சத்தை அணிந்தால் நவசக்திகளும் இன்பமடையும். இதன் அதிதேவதை நவசக்தி.

*பத்துமுக உருத்திராட்சத்திற்கு அதிதேவதை எமன். இதனை அணிந்தால் பாவங்களுக்கெல்லாம் பரிகாரம் ஏற்படும்.

*பதினொரு முக உருத்திராட்சத்திற்கு அதிதெய்வம் பதினொரு உருத்திரர். இது சகல செளபாக்கியங்களையும் விருத்தியடையச் செய்கிறது.

*பன்னிரண்டு முக உருத்திராட்சம் மகாவிஷ்ணுவின் சொரூபம். இது பன்னிரு ஆதித்ய சொரூபம் என்று அழைக்கப்படுகிறது.

*பதின்மூன்று உருத்திராட்சம் போகத்தையும், சித்தியையும், சுகத்தையும் கொடுக்கிறது. இதனை அணிந்தால் காமதேவன் மகிழ்ச்சியடைகிறான்.

*உருத்திர நேத்திரத்தில் உண்டாகிய பதினான்கு முக உருத்திராட்சம் சகலவிதமான நோய்களையும் நீக்கி என்றும் ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது.

* 108 உருத்திராட்சம் கொண்ட மாலையை எப்போதும் மார்பில் அணிந்திருப்பவன் அடுத்தடுத்து செய்த அஸ்வமேதயாக பலத்தை அடைகிறான்.

* உருத்திராட்சத்தின் அடி பிரம்மா. நாளம் விஷ்ணு. முகம் உருத்திரர். பிந்து சமஸ்தேவர்கள்.

அர்ச்சனை, ஹோமம் முதலியவற்றின்போது இதனை அணிந்தால் அஸ்வமேத யாகத்தின் பலனைக் கொடுப்பதோடு, எல்லா பாவங்களிலிருந்தும் விடுதலை கிடைக்கிறது. உருத்திராட்ச மாலையைக்கொண்டு ஜெபித்தால் அதிக பலம், அதிக புண்ணியம்.

தலையில் அணிந்து குளித்தால் கங்கையில் நீராடிய பலன் கிட்டும். குறிப்பாகச் சிவனடியார்களால் போற்றப்படும் இரு முகம், ஐந்து முகம், பதினொரு முகம், பதினான்கு முகம் கொண்ட உருத்திராட்சங்களை அன்போடு பூஜித்து அணிகின்ற மானிடர்கள் எல்லாரையும்விட அவரே செல்வம் நிரம்ப உடையவராகிறார்.

தீட்சை பெற்ற பெண்களும் உருத்திராட்சத்தை அணியலாம். உருத்திராட்ச தரிசனம் பாவத்தைப் போக்கும். தொட்டால் சகல வெற்றிகளையும் கொடுக்கும். குவிக்கும். பிறப்பு - இறப்பு தீட்டுக்காலங்களில் உருத்திராட்சம் கண்டிப்பாக அணியக்கூடாது. சிவன் நாமத்தை இடைவிடாமல் உச்சரிப்போரும், புனிதம் மிக்க உருத்திராட்சத்தை அணிந்திருப்போரும் சிவ பக்தர்களில் தலைசிறந்தோர் என்று கூறுகின்றனர்.

'ஆயமாமணி ஆயிரம் புனைந்திடில் அவரை
மாலயன் நான்முகன் புரந்தரன் வானவர் முதலோர்
பாயுமால் விடைப் பரமெனப் பணிகுவர் என்றால்
தூயமாமணி மிலைந்தவர் மனிதரோ சொல்வீர்'

-என்று உருத்திராட்சத்தின் மேன்மையைப் பிரம்மோத்தர காண்டம் சிறப்பித்துக் கூறுகின்றது.

வெள்ளி, 14 நவம்பர், 2014

ஆவுடையார் கோவில்



திருப்பெருந்துறை எனும் ஆவுடையார் கோவில்

இறைவன் அமர்ந்த இடம் குருந்த மரத்தடி. குருந்த மரத்தின் இலை கள் ஒவ்வொரு கொத்திலும் மூன்று வகை இலைகளுடன் காணப்படும். அவ்விடமே, கோவிலாகியது. இறைவன் திரு உருவச் சிலை கள் இங்கு இல்லையே தவிர, இக்கோவி ல், சிற்பக்கலையின் உன்னத சிகரமாக இருக்கின்றது. பூத க ணங்களே இக்கோவிலைக் கட்டினர் என்பர். சிற்பிகள் தங் களது பணி ஒப்பந்தங்களில் “தாரமங்கலம் தூணும், திருவலஞ்சுழி பலக ணியும், ஆவுடையார் கோவில் கொடுங்கையும் நீங்கலாக” என்று எழுதுவர் எனக் கேள்வி. கோவில் கணக்குகளில், ஆளுடை யார் கோவில் என்று காணப்படுகின்றது. இலக்கியங்களில், அநாதி மூர்த்தித் தலம், சதுர்வேதபுரம், யோகபீடபுரம் என்றும், கல்வெட் டுகளில் சதுர்வேதமங்கலம் என்றும், திருவாசகத்தில், சிவ புரம் என்றும் வழங்கப் பெற்று ள்ளது. தற்போது கோவிலின் பெயரா லேயே, ஊரும் அழை க்கப்பட்டுவருகிறது.

கோவிலின் சிறப்பு

தலம்: திருப்பெருந்துறை
மூர்த்திகள்: ஆத்மநாதர், யோ காம்பிகை

தீர்த்தம்: ஒன்பது- சிவ தீர்த்தம், அக்கினி தீர்த்தம், தேவ தீர்த்தம், முனிவர் தீர்த்தம், அசுர தீர்த்தம், வாயு தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம், நாராயண தீர்த்தம், பிரம தீர்த்தம்

புனித மரம்: குருந்த மரம்
கோவிலின் மூலவர் ஆத்மநாதர் ஸ்வாமி ஆவார். சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. சிவபெருமா னுக்கு ஆவுடையாரும் (சக்தி பீடப் பகுதி) எதிரில் ஒரு மேடையும் (அமுத மண்டபம்) மட்டுமே உள்ள ன. ஆவுடை யாருக்குப் பின் சுவரில் 27 நட்சத்திரத் தீபங்களும், அதற்கு மேல் சூரிய, சந்திர, அக்கினி தீபங்களும் ஒளிர்கின்றன. அம் மன் யோகாம்பிகை சந்நிதியில் யோக பீடமும், அதன் மேல் அம்மன் பாதங்களும் மட்டும் உள்ளன. அதுவும் பலகணி வழியே மனத்தை ஒருமுகப்படுத்தினால் மட்டும் தரிசிக்க முடியும். மாணி க்கவாசகருக்கு தனிச் சந்நிதி இருக்கிறது. கோவிலில் கொடிமரம், நந்திக்கடவுள், சண்டேசர் ஆலயம் கிடையாது. இங்கே நடராஜர், விநாயகர், முருகர் தவிர பரிவார மூர்த்திகள் இல்லை. தீபாரா தனை கருவறையை விட்டு, வெளியே வராது. புழுங்கல் சோறு, கீரை, பாகற்காய் ஆகியவற்றின் ஆவியே நிவேதனம். அடியார் மாணிக்கவாசகருக்காக மட்டும், வருடந்தோறும் ஆனித் திரும ஞ்சனத் திருவிழா நடக்கிறது.

ஏனைய கோவில்கள் சரியை, கிரியை வழிபாட்டிற்கும், இக் கோ வில் மட்டும் யோக, ஞான மார்க்க வழிபாட்டிற்கும் உரியதாக உள் ளது. அதனால் இக்கோவில் அமைப்பு மற்ற கோவில் களிலிருந்து பெரிதும் மாறுபட்டுள்ளது. மூலாதாரம் முதலாக ஆறு ஆதாரங் களின் வடிவாகவும், சிவனை அரூபமாகவும் நிர்மாணித்து, யோகி களும், ஞானிகளும் வழிபடும் வகையில் இக்கோவில் கட்டப்பட்டு ள்ளது என்பர்.

பஞ்சாட்சர மண்டபம்

மூன்றாம் பிராகாரத்தில், இரண்டாம் கோபுர வாசலை ஒட்டி, பஞ் சாட்சர மண்டபம் உள்ளது. இம்மண்டப த்தின் மேல் தளத்தில் மந்தி ரம், பதம், வன்னம், புவனம், தத்துவம், கலை எனும் ஆறு அத்து வாக்கள் கட்டங்களாக அமைக்க ப்பட்டுள்ளன.

கற்சிலை ஓவியங்கள்
சிற்ப வேலைகளைப் பற்றிச் சொல்லி மா ளாது. நேரில் கண்டால் பிரமிப்பு அடங்காது. வல்லப கணபதி, உக்கிர நரசிம்மர், பத்திர காளி, ஊர்த்துவ தாண்டவர், பிட்சாடனர், வில் பிடித்த முருகன், ரிஷபாரூடர், சங்கர நாராயணர், குதிரைச்சாமி, குறவன், குறத் தி, வீரபத்திரர்கள், குதிரைக்காரர்கள், நடன மங்கைகள், விலங்குகள், உயிரோட்டத்து டன் ரத்த நாளங்கள் தெரிய மிளிர்கின்றன. தவிர டுண்டி விநாயகர், உடும்பும் குரங்கும், இரண்டே தூண்களில் ஓரா யிரம் கால்கள், 1008 சிவாலய இறைவன், இறைவியின் உருவ ங்கள், பல நாட்டுக் குதிரைகள், நடனக்கலை முத்திரைகள், சப்த ஸ்வரக் கற்தூண்கள், போன்ற அற்புதங்கள் மற்றும் நட்சத்திர மண் டலம், பச்சிலை ஓவியங்கள், கூரையிலிருந்து தொங்கும் கற்சங் கிலிகள் ஆகியன நம்மைப் பிரமிக்க வைக்கின்றன. மேற் கூரை யான கொடுங்கை மிகச்சன்னமாக இழைக்கப்படுள்ளது. மரச்சட்டங்களில் குமிழ் ஆணி அடித்தது போல நுட்பமான வேலைகள் கல்லில் அடிக்கப்பட்டுள்ளன. அதில் நிஜக் கம்பிகள் போன்ற அமைப்பு உள்ளது. இதை நம்பாத ஒரு ஆங்கிலேயன் துப்பாக் கியால் சுட்டதால் ஏற்பட்ட ஓர் ஓட்டையும் கொடுங்கை யில் உள்ளது. மொத்தத்தில் சிற்ப வேலைப்பாடுகள், கண்ணில் ஒற்றிக் கொள்ளும்படி மிக மிக நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளன.

இக்கோவில், திருவாவடுதுறை ஆதீனத்தால் சிறப்பாகப் பராமரிக் கப் படுகிறது. புதுக்கோட்டையிலிருந்து, 45 கி.மீ தொலைவில் உள்ளது. அறந்தாங்கியிலிருந்து, 14 கி.மீ தூரம்.

மாணிக்கவாசகர் தீந்தமிழைத் தேனில் தோய்த்தெடுத்து, பக்தியால் உருக்கி, அன்பினால் வார்த்து, எளிய நடையெனும் உளியால் பத முடன் பக்குவமாய்ச் செதுக்கி, என்றென்றென்றும் நிலைத்திருக் கும் சிலைபோல் திருவாசகத்தைப் படைத்தார். ஆவுடையார் கோவிலைக் கட்டிய சிற்பிகளோ, தமது கலைத்திறமையால் இக் கோவிலைக் கட்டிச் சிலைகளை உருவாக்கிக் காலத்தால் அழியாத ஒரு பெரும் காவியமாகப் படைத்தார்கள்.

காலபைரவாஷ்டமி



காலபைரவாஷ்டமி
பைரவரைத் தொழுதால் அஷ்ட ஐஸ்வர்யமும் பெறலாம்:அஷ்டமி திதியில் சம்பவிக்கும் சில முக்கிய நிகழ்வுகளான கோகுலாஷ்டமி, துர்காஷ்டமி, பீஷ்மாஷ்டமி போன்றவற்றிற்குச் சற்றும் முக்கியத்துவம் குறைவில்லாமல் விளங்குவது கார்த்திகை மாதம் கிருஷ்ணபட்ச அஷ்டமியில் வரும் கால பைரவாஷ்டமி ஆகும்.
இது மகா தேவாஷ்டமி என்று வட இந்தியப் பஞ்சாங்கப்படி மார்கசீர்ஷ மாதம் தேய்பிறை அஷ்டமியின்போது அனுசரிக்கப்படுகிறது. இதுவே மகேசனின் தோற்றமான கால பைரவருக்கு உகந்த நன்னாளாகும்.
பைரவர் தன்னை அண்டியவர்களுக்கு உண்டாகும் பய உணர்வைப் போக்குபவர், கெடுமதியுடையோர் அஞ்சி நடுங்கும் வண்ணம் பயத்தை உண்டாக்குபவர். கால பைரவர் (அ) வைரவர் என்று தமிழகத்திலும், அன்னதானி என கர்நாடகாவிலும், பைரோன், பைராத்தியா, பேரூஜி என்று ராஜஸ்தான் முதலிய வடஇந்திய மாநிலங்களிலும் அழைக்கப்படுகிறார்.
உக்ர வடிவில், அழித்தல் செயலுக்கு அதிபதியாகவும், கிராம தேவதை, ஊர்க் காவல் தெய்வம், அஷ்ட திக்குகளை இரட்சிப்பவராகவும் விளங்குகிறார். காலச் சக்கரத்தை இயக்கும் பரம்பொருள் பைரவர். தேவிக்கு உரிய சக்திப் பீடங்களில் அவளுக்குத் துணை நின்று காப்பவராக விளங்குகிறார். தாந்த்ரீகர்களால் உபாசிக்கப்படுபவர். சைவசமய உட்பிரிவைச் சார்ந்த காளாமுகர், கபாலிகர், அகோரப் பிரிவினரால் பூஜிக்கப்படுபவர்.
பார்த்தாலே மனதைப் பதற வைக்கும் இவரது தோற்றங்கள். நாகங்களைக் காது குண்டலங்களாகவும், கைகளில் காப்பு, கங்கணமாகவும், கால்களில் தண்டையாகவும், மார்பில் உப வீதமாகவும் (பூணூல்) அணிந்து, இடையில் புலித் தோல் தரித்து, மானிட கபாலம் எலும்புகளை மாலையாக அணிந்து, கைகளில் சூலம், பிரம்புடனும், ஸ்வானம் (நாய்) வாகனமேறி ருத்ரரூபமாய்க் காட்சி அளிப்பார்.

காலச் சக்கரத்தை இயக்கும் பரம்பொருள் பைரவர். அதையும் அடுத்து, சனி பகவானின் குருவாக விளங்குவதால், ஏழரைச் சனி, அஷ்டமத்துச் சனி பாதிப்புகளிலிருந்து மீளவைப்பவராவார்.
மகா காலேஷ்வர், உஜ்ஜயனி, காசி கால பைரவர், சோமுக பைரவர், கேத்ரி, ராஜஸ்தான், சதாரா வர்னேகாவ் பைரவர், தருமபுரி அதியமான் கோட்டை மல்லிகார்ஜுநேஸ்வரர் கோயில் பைரவர், திருவிசை நல்லூர் சிவ யோகிநாதர் கோயில் சதுர் கால பைரவர் போன்ற பைரவர்கள் பற்பல சிறப்புகள் கொண்டதாகத் திகழ்கின்றனர்.
12 ராசிகளையும் அவற்றிற்குரிய நட்சத்திரங்களையும் தனது உடல் பாகங்களாகக் கொண்டவர். இந்தச் சிறப்புமிக்க வடிவத்தை மன்னன் அதியமான் நெடுமான் அஞ்சி தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டை மல்லிகார்ஜுநேச்வரர் கோயில் வளாகத்தில் கி.பி. 9ம் நூற்றாண்டில் நிர்மாணித்துள்ளான். இது தோஷங்களைப் போக்கும் ஒரு பரிகாரத் தலமாக விளங்குகிறது. அவரவர்க்குரிய ராசிப்படி, பைரவரின் அங்கத்தை வழிபட்டால் தோஷ நிவர்த்தி கிடைக்கும் என்பது நியதி.
அவையாவன- தலை-மேஷம். முகம், கழுத்து-ரிஷபம், கைகள்-மிதுனம், மார்பு-கடகம், வயிறு-சிம்மம், இடுப்பு-கன்னி, பிறப்புறுப்பு-துலாம், தொடைகள்-விருச்சிகம், முழங்கால்-தனுசு, ஆடுசதைக் கால்பகுதி-மகரம், கணுக்கால் பாதம்-கும்பம், பாதவிரல்கள், கால் அடிபாகம்-மீனம்.
ஈசனுக்குப் பஞ்ச முகார்ச்சனை, கந்தனுக்கு ஷண்முகார்ச்சனை செய்விப்பது போல், பைரவருக்கு எட்டுப் பண்டிதர்கள் சுற்றி நின்று, தும்பை, செம்பருத்தி, ஆத்தி, கொன்றை, ஊமத்தை, செண்பகம், கள்ளி, நெருஞ்சி ஆகிய மலர், தளிர், இலைகளைக் கொண்டு சிறப்பாக அஷ்டவித அர்ச்சனை செய்வது வழக்கம். அதைத் தொடர்ந்து, பைரவரை மகிழ்விக்க எட்டுவிதமான அன்னவகைகள், முக்கியமாக நெய்யில் ஊறிய வடை, தேனில் அமிழ்த்திய வடை, தேனில் ஊறவைத்த இஞ்சி முதலியவை இடம் பெறும்.

ஒரு சிறிய துணியில் மிளகைக் கட்டி அகலில் வைத்து நல்லெண்ணெயை ஊற்றி தீபம் ஏற்றி 12 ஞாயிறு ராகு கால பூஜை மூன்று தேய்பிறை அஷ்டமி பூஜை செய்து வழிபட வாழ்வில் வளம் பெருகும். தேங்காய் மூடியில் நெய் தீபம் ஏற்றியும் தொழலாம். மற்றும் சாம்பல் பூசணிக்காயை நடுவே இரண்டாகப் பிளந்து எண்ணெய் அல்லது நெய் தீபம் ஏற்றி வழிபடுவது மிகவும் சிறந்தது.
அஷ்டமி அன்று அஷ்டலட்சுமிகளும் பைரவரை வழிபடுவதாக ஐதீகம். அந்நன்னாளில் நாமும் பைரவரை வழிபட்டால் அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கப் பெறுவோம் என்பது நம்பிக்கை. பொதுவாக பைரவர் தன் பின்புறம் வலப்பக்கம் தலை உள்ளவாறு இருக்கும் நாய் வாகனத்துடன் காட்சி அளிப்பார். சிலவிடங்களில் வாகனம் இடப்பக்கம் தலை உள்ளவாறு காணப்படும். மிகவும் அதிசயமாக சிற்சில தலங்களில் மட்டும் இரு பக்கங்களிலும் நாய் வாகனங்களுடன் காட்சி தரும் பைரவர் மிக்க சக்தி வாய்ந்தவராவார். அவரைத் தொழுவது சாலச் சிறந்தது.
பைரவரைக் காலை நேரத்தில் வழிபட்டால் நோய், நொடிகள் நீங்கும். பகல் வேளையில் தொழுதால் நாம் விரும்பியது கிட்டும். அந்தி நேரத்தில் வழிபட, செய்துள்ள பாபம் எல்லாம் விலகும். அர்த்த சாம வழிபாட்டால் மனச்சாந்தியும், கல்வி கேள்விகளில் தேர்ச்சியும் வளமான வாழ்வும் பெறலாம்.
ஓம் காலகாலாய வித்மஹே காலாத்தாய தீமஹி
தன்னோ கால பைரவ பிரசோதயாத்.

வியாழன், 6 நவம்பர், 2014

பிள்ளையார்பட்டிகோயில் சிறப்பு

பிள்ளையார்பட்டி திருக்கோயில் சிறப்பு :
பிள்ளையார்பட்டி எனப் பெயர் கொண்டு விளங்கும் இவ்வூர் தமிழ்நாடு மாநிலத்தில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. காரைக்குடியிலிருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில் குன்றக்குடிக்கு அடுத்து உள்ளது.
பிள்ளையார்பட்டி என்னும் பெயரே இது விநாயகப்பெருமான் கோயில் கொண்டருளும் ஒரு சிற்றுர் என்பதை நன்கு விளங்க வைத்துக் கொண்டிருக்கிறது.
இந்த ஊருக்கு பிள்ளையார்பட்டி என்பதே இன்று நாடறிந்த பெயராயினும், 1. எருகாட்டூர் அல்லது எக்காட்டுர், 2. மருதங்குடி, 3. திருவீங்கைகுடி, 4. திருவீங்கைச்வரம், 5. இராசநாராயணபுரம் என்று வேறு ஐந்து பெயர்கள் உண்டு. மருதங்கூர், தென்மருதூர், கணேசபுரம், கணேசமாநகரம், பிள்ளை நகர் போன்ற பெயர்கள் பிற்காலப் பெயர்கள் பிற்இங்கு இரண்டு இராஜகோபுரங்களுடன் கூடிய பெரிய திருக்கோயில் மிக்க பொலிவுடன் விளங்குகிறது. ஆகம நெறிப்படி அருமையாக பூஜைகள் நடைபெறும் இக்கோயிலில் திருப்பணியை கூர்ந்து நோக்குவோமானால் நான்கு முறையாக திருப்பணி நடந்திருக்கின்றமை நன்கு புலனாகும்.முதன்முதலாக நடந்த திருப்பணி இன்று காணப்பெறும்.
திருக்கோயிலின் தெற்கு புறத்தில் கீழ்மேலாக நீண்டு கிடக்கும் குன்றில் வடமுகமாக மலையைக் குடைந்து சமைக்கப் பெற்ற குடைவரைக் கோயிலாகும்.
இந்த குடைவரைக் கோயிலுக்குள் நாம் நுழைந்தால் முதலில் உள்ள கிழ்மேல் ஓடிய பத்தி காணப்படும். அதற்கு அடுத்து நான்கு தூண்கள் இடைநிற்க தென்வடல் ஓடிய இரட்டைப்பத்தி மண்டபம் காணப்படும். அம்மண்டபத்தின் கீழ்புறபத்தியில் தென்பால் மலை நெற்றியில் 6 அடி உயரம் உள்ள கம்பீர நிலையில் விளங்கும் கற்பக விநாயகர் திருக்கோலம் அர்த்த சித்திரம் ஆக வடக்கு நோக்கி விளங்கக் காண்போம். இந்த மூர்த்தி தான் பிள்ளையார்பட்டியின் பெருந்தெய்வமான கற்பக விநாயகரான தேசிவிநாயகப் பிள்ளையார்.
அதற்கு மேற்கே அதேமலை நெற்றியில் தெற்கு நோக்கிய சங்கர நராயணர் உருநாட்டு சண்டீசன், கருடன் இருவரும் இருபுறம் நின்ற கோலத்தில் விளங்குகிறார்.
அந்த மேல்புரத்தில் பத்தியின் நடுவே கிழக்கு பார்த்த திருவாயிலுடன் கூடிய திருவுண்ணாழி துங்கானை மாட அமைதியிற் குடையப் பெற்றுள்ளது.
அதன் நடுவிலே கடைந்தமைத்த பெரியதொரு மஹாலிங்கம் பொழிந்தினிது துலங்கக் காண்போம். இந்த மூர்த்தி தன் திருவீசர் என்று விளங்கும் திருவீங்கைக்குடி மஹாதேவர் .அங்கிருந்து சிறிது வடக்கே வந்து மேற்கே சென்று தெற்கு புறமாக பார்த்தோமானால் திருவுண்ணாழியின் வடபுற வெளிச்சுவரில் வடக்குப் பார்த்த லிங்கோத்பவர் மூர்த்தியை காணலாம். இந்த அளவில் உள்ள குடைவரைக் கோயில் தான் முதல்திருப்பணி ஆகும்.
இக்குடைவரைக் கோயிலுக்குள் சுவர்களிலும் தூண்களிலும் காணப்பெறுகின்ற கல்வெட்டுகள் நமக்கு ஓரளவு செய்திகளைத்தான் புலப்படுத்துகின்றன என்றாலும் அவற்றில் இருந்து மிக முக்கியமான செய்திகளும் சில கிடைக்கின்றன.
முதன் முதலில் மருதங்குடி வயல்களை மருதங்குடி ஊராரிடம் பிள்ளையார்பட்டி கோயில் நகரத்தார் விலைக்கு வாங்கியிருக்கிறார்கள் பின்னர் சம்மந்தப்பட்ட அதனையூர் நாட்டவரிடமும், கீழ்குண்டாற்று நாட்டவரிடமும், அவர்களுக்கு உள்ள உரிமையை வாங்கி பிடிபாடு செய்திருக்கிறார்கள்.
அதன் பிறகு அந்நாளில் பாண்டி மண்டலத்தை வென்று ஆட்சி செய்த (பரகேசி மூன்றாம் குலோத்துங்க சோழ தேவரான) கோனேரின்மை கொண்டானிடம் முழு உரிமையும் பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள். அவன் நகரத்தார்களுக்கு கொடுத்த திருமுகத்திலுருந்து மருதங்குடியில் இராசநாராயணபுரம் என்ற பெயருடன் ஒரு நகரம் அமைத்து அதில் குடியேறி வாழ்ந்துவர அனுமதித்திருக்கிற செய்தி நன்கு புலனாகிறது.
மருதங்குடியான இராசநாராயணபுரம் என்னும் பிள்ளையார்பட்டியும் கீழ்குண்டாற்று நாட்டில் அடங்கியதே. எனவே பிள்ளையார்பட்டியை "கேரள சிங்கவள நாட்டு கீழ்குண்டாற்று நாட்டில் மருதங்குடியான இராச நாராயணபுரத்து பிள்ளையார்பட்டி" என்றே குறிப்பிட வேண்டும்.
பிள்ளையாரின் பெருமை
உலகம் யாவையும் காத்துத் துடைக்கும் முழுமுதல் இறைவன் ஒருவனே. அவனை இப்படியேன் இந்நிறத்தன், இவ்வண்ணத்தன் என்று நம் போன்றவர்கள் எளிதில் உணரமாட்டோம். ஆனாலும் உண்மை உணர்ந்த அருள்பழுத்த நெஞ்சினர்கள் அவனுக்கு அவனருளாலே ஆயிரமாயிரம் திருப்பெயர்களையும், திருவுருவத்தையும் தந்து நாமுய்ய வழிவகுத்தருளியிருக்கிறார்கள்.
அவையனைத்தும் அறவோர் தியானத்தில் முளைத்தவை. அவற்றிர்கெல்லாம் தத்துவப்படியும், ஆகமமுறையிலும், சிற்ப நெறியிலும் தியான ஸ்லோகங்கள் எண்ணற்றவை நமக்கு உண்டு.
பிள்ளையார், மூத்த திருப்பிள்ளையார், கணபதி, கணேசன், கணநாதன், விநாயகன், விக்கின விநாயகன், விக்கினராஜன், விக்கினேசுவரன், கஜமுகன், கரிமுகன், யானைமுகன், வேழமுகன், தும்பிக்கையன், அத்தி முகன், ஐங்கரன், அங்குசபாசன், முன்னவன், ஓங்காரன், பிரணவப்பொருள், கற்பக மூர்த்தி, கற்பக விநாயகன், கற்பக பிள்ளையார் முதலான பல பொதுப்பெயர்களை கொண்டருலும் பெருமான் இடத்திற்கு தக்கபடி பலப்பல காரணங்களால் சிறப்பு பெயர்கள் பலவற்றை தாங்கி அருள்வதை நாம் நன்கறிவோம்.
இந்த மூர்த்தீயின் உருவ தத்துவத்தைச் சிறிது சிந்தித்து பார்த்தாலும் அதன் அருமை நன்கு புலப்படும். பிள்ளையாரை ஞானத்தின் அதிதேவதை என்பர் நூலோர் யானைத்தலையே அதற்குச் சான்று. ஓங்கார ஒலிக்குறிய வரிவடிவமான ஓம் என்பதை காட்புலனாகும்படி காட்ட யானைத்தலையே பெரிதும் ஏற்றதாயிருக்கிரது.வலப்புற தந்தம் ஒடிந்ததான அமைதியில் காட்டப்பெருவதன் மூலம் 'ஓ' என்ற எழுத்தின் தொடக்கச்சுழி கிடைத்து விடுகிறது.
அங்கிருந்து மேல் நோக்கி வலஞ்சுழித்து இடக்காது வரை சென்று வலைந்த இடத்தந்தத்தின் வழியாக கீழ் நோக்கி துதிக்கை நுனி வரைக் கோடிட்டால் 'ஓ' என்ற வரி வடிவம் தோன்றிவிடக்காண்போம். கையில் உள்ள மோதகம் 'ம்' என்ற வரி வடிவத்தை சுட்டுகிறது. பிள்ளையார்பட்டி பிள்ளையார் வலம்புரி பிள்ளையாராக இருப்பதால், பெரும்பாலான மற்ற இடங்கலில் உள்ள மூர்தங்களை விட விளக்கமாக இவ்வுண்மையை (ஓங்கார சொரூபத்தை) புலப்படுத்திக் கொண்டிருக்கிறது.
பிள்ளையாரின் சிறப்பு
1. இங்கு பெருமானின் துதிக்கை வலம்சுழித்ததாக அமைந்திருப்பது.
2. சாதாரணமாக மற்ற இடங்களில் இருப்பதைப்போல நான்கு கைகள் இல்லாமல் இரண்டு கரங்களை கொண்டு விளங்குவது.
3. அங்குச பாசங்கள் இல்லாமல் விளங்குவது.
4. வயிறு, ஆசனத்தில் படியாமல் "அர்த்தபத்ம" ஆசனம், போன்று கால்கள் மடித்திருக்க அமர்ந்தருள்வது.
5. இடக்கரத்தை கடிஹஸ்தமாக இடையில் நாட்டிப் பெருமிதக் கோலம் தோன்றப் பொலிவது.
6. வலக்கரத்தில் மோதகம் தாங்கியருள்வது.
7.ஆண், பெண் இணைப்பை புலப்படுத்தும் முறையில் வலத்தந்தம் நீண்டும், இடத்தந்தம் குருகியும் காணப்படுவது.
ஆகிய இவை பிள்ளையார்பட்டி பெருமானிடம் காணப்பெறும் சிறப்பாகும். இவற்றால் நாம் உணரக்கூடியது உணர வேண்டியது ஒன்று. பிள்ளையார் வணக்கம் தமிழ் நாட்டில் தோன்றிய ஆதி நாளிலேயே இந்த மூர்த்தம் அமைக்கப் பெற்றிருக்கிறது என்ற உண்மை தான் அது.

திங்கள், 3 நவம்பர், 2014

பிரதோஷ வகைகள்



பிரதோஷம் அன்று மாலை வேலையில் (4லிருந்து 6 குள்) அருகில் இருக்கும் சிவாலயத்திற்க்கு சென்று எல்லாம் வல்லவனை வழிபடுங்கள் வாழ்வில் சகல வளமும் நலமும் கிட்டும் .
பிரதோஷ வகைகள் 
1. தினசரி பிரதோஷம் : 

தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும். நித்தியப்பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார்களோ அவர்களுக்கு "முக்தி'' நிச்சயம் ஆகும் என்கிறது நமது சாஸ்திரம்.

2. பட்சப் பிரதோஷம் :

அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் "திரயோதசி'' திதியே பட்சப் பிரதோஷம் ஆகும். இந்தத்திதியின் மாலை நேரத்தில் பட்சிலிங்க வழிபாடு செய்வது உத்தமம் ஆகும். குறிப்பாக அன்னை பார்வதி தேவி மயில் உருவாய் ஈசனை வழிபட்ட தலமாகிய மயிலாப்பூர் "கபாலீஸ்வரரை'' வழிபடுவது சிறப்பாகும்.

3. மாதப் பிரதோஷம் :

பவுர்ணமிக்குப் பிறகு வரும் கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறை காலத்தில், 13-வது திதியாக வரும் "திர யோதசி'' திதியே மாதப் பிரதோஷம் ஆகும். இந்த திதியின் மாலை நேரத்தில் "பாணலிங்க'' வழிபாடு செய்வது உத்தம பலனைத் தரும்.

4. நட்சத்திரப் பிரதோஷம் :

பிரதோஷ திதியாகிய "திரயோதசி திதி''யில் வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனை பிரதோஷ நேரத்தில் வழிபடுவது நட்சத்திர பிரதோஷம் ஆகும்.

5. பூரண பிரதோஷம் :

திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராத திரயோதசி திதி மட்டும் உள்ள பிரதோஷம் பூரண பிரதோஷம் ஆகும். இந்தப் பிரதோஷத்தின் போது "சுயம்பு லிங்கத்தை''த் தரிசனம் செய்வது உத்தம பலனை தரும். பூரண பிரதோஷ வழிபாடு செய்பவர்கள் இரட்டைப் பலனை அடைவார்கள்.

6. திவ்யப்பிரதோஷம் :

பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது "திவ்யப் பிரதோஷம்'' ஆகும். இந்த நாளன்று மரகத லிங்கேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை செய்தால் பூர்வஜென்ம வினை முழுவதும் நீங்கும்.

7.தீபப் பிரதோஷம் :

பிரதோஷ தினமான திரயோதசி திதியில் தீப தானங்கள் செய்வது, ஈசனுடைய ஆலயங்களைத் தீபங்களால் அலங்கரித்து ஈசனை வழிபட சொந்த வீடு அமையும்.

8.அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் :

வானத்தில் "வ'' வடிவில் தெரியும் நடத்திர கூட்டங்களே, "சப்தரிஷி மண்டலம்'' ஆகும். இது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வானில் தெளிவாகத் தெரியும். இந்த மாதங்களில் திரயோதசி திதியில் முறையாக பிரதோஷ வழிபாடு செய்து, சப்தரிஷி மண்டலத்தைத் தரிசித்து வழிபடுவதே அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் ஆகும். இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கும் ஈசன் தரம் பார்க்காது அருள் புரிவான்.

9. மகா பிரதோஷம் :

ஈசன் விஷம் உண்ட நாள் கார்த்திகை மாதம், சனிக்கிழமை, திரயோதசி திதி ஆகும். எனவே சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் "மகா பிரதோஷம்'' ஆகும். இந்த மகா பிரதோஷத்து அன்று எமன் வழிபட்ட சுயம்பு லிங்க தரிசனம் செய்வது மிகவும் உத்தமம் ஆகும்.

குறிப்பாக சென்னை வேளச்சேரியில் உள்ள, "தண்டீசுவர ஆலயம்''. திருச்சி, மண்ணச்சநல்லூர் அருகே உள்ள "திருப்பைஞ்ஞீலி'' சிவ ஆலயம், குடவாசலில் இருந்து நன்னிலம் செல்லும் பாதையில் உள்ள "ஸ்ரீவாஞ்சியம்'' சிவ ஆலயம், கும்ப கோணம் முதல் கதிராமங்கலம் சாலையில் உள்ள "திருக்கோடி காவல்'' சிவ ஆலயம் ஆகியவை குறிப்பிடத்தக்கனவாகும். மாசி மாதம் வரும் மகா சிவராத்திரிக்கு முன்னால் வரும் பிரதோஷமும், "மகா பிரதோஷம்'' எனப்படும்.

10. உத்தம மகா பிரதோஷம் :

சிவபெருமான் விஷம் அருந்திய தினம் சனிக்கிழமையாகும். அந்தக் கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறையில், சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் உத்தம மகா பிரதோஷம் ஆகும். இது மிகவும் சிறப்பும் கீர்த்தியும் பெற்ற தினமாகும்.

11. ஏகாட்சர பிரதோஷம் :

வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் மகா பிரதோஷத்தை `ஏகாட்சர பிரதோஷம்' என்பர். அன்றைக்கு சிவாலயம் சென்று, `ஓம்' என்ற பிரணவ மந்திரத்தை எத்தனை முறை ஓத முடியுமோ, அத்தனை முறை ஓதுங்கள். பின், விநாயகரையும் வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கினால் பல விதமான நன்மைகள் ஏற்படும்.

12. அர்த்தநாரி பிரதோஷம் :

வருடத்தில் இரண்டு முறை மகாபிரதோஷம் வந்தால் அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர். அந்த நாளில் சிவாலயம் சென்று வழிபட்டால், தடைப்பட்ட திருமணம் நடைபெறும். பிரிந்து வாழும் தம்பதி ஒன்று சேர்வார்கள்.

13. திரிகரண பிரதோஷம் :

வருடத்துக்கு மூன்று முறை மகாபிரதோஷம் வந்தால் அது திரிகரண பிரதோஷம். இதை முறையாகக் கடைப்பிடித்தால் அஷ்ட லட்சுமிகளின் ஆசியும் அருளும் கிடைக்கும். பிரதோஷ வழிபாடு முடிந்ததும் அஷ்ட லட்சுமிகளுக்கும் பூஜை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

14. பிரம்மப் பிரதோஷம் :

ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால், அது பிரம்மப் பிரதோஷம். பிரம்மாவுக்கு திருவண்ணாமலையில் ஏற்பட்ட சாபம் நீங்குவதற்காக அவர் ஒரு வருடத்தில் நான்கு முறை சனிக்கிழமையும், திரயோதசியும் வரும் போது முறையாக பிரதோஷ வழிபாடு செய்து சாப விமோசனம் பெற்றார். நாமும் இந்தப் பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்தால் முன்ஜென்மப் பாவம் நீங்கி, தோஷம் நீங்கி நன்மைகளை அடையலாம்.

15. அட்சரப் பிரதோஷம் :

வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம். தாருகா வனத்து ரிஷிகள். `நான்' என்ற அகந்தையில் ஈசனை எதிர்த்தனர். ஈசன், பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்குப் பாடம் புகட்டினார். தவறை உணர்ந்த ரிஷிகள், இந்தப் பிரதோஷ விரதத்தை அனுஷ்டித்து பாவ விமோசனம் பெற்றனர்.

16. கந்தப் பிரதோஷம் :

சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்தப் பிரதோஷம். இது முருகப் பெருமான் சூரசம்ஹாரத்துக்கு முன் வழிபட்ட பிரதோஷ வழிபாடு. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் முருகன் அருள் கிட்டும்.

17. சட்ஜ பிரபா பிரதோஷம் :

ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது, `சட்ஜ பிரபா பிரதோஷம்'. தேவகியும் வாசுதேவரும் கம்சனால் சிறையிடப்பட்டனர். ஏழு குழந்தைகளைக் கம்சன் கொன்றான். எனவே, எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை முறையாக அவர்கள் அனுஷ்டித்ததால், கிருஷ்ணன் பிறந்தான். நாம் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் முற்பிறவி வினை நீங்கி பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கலாம்.

18. அஷ்ட திக் பிரதோஷம் :

ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷ வழிபாட்டை முறையாகக் கடைப்பிடித்தால், அஷ்ட திக்குப் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள்.

19.நவக்கிரகப் பிரதோஷம் :

ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால், அது நவக்கிரகப் பிரதோஷம். இது மிகவும் அரிது. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடு நவக் கிரகங்களின் அருளும் கிடைக்கும்.

20. துத்தப் பிரதோஷம் :

அரிதிலும் அரிது பத்து மகாபிரதோஷம் ஒரு வருடத்தில் வருவது. அந்தப் பிரதோஷ வழிபாட்டைச் செய்தால் குருடரும் கண்பார்வை பெறுவார்கள். முடவன் நடப்பான். குஷ்டரோகம் நீங்கும். கண் சம்பந்தப்பட்ட வியாதியும் குணமாகும்.*